(Reading time: 25 - 49 minutes)

தன் தொடர்ச்சியாய் “பொதுவாக முழு சைனியத்தையும் கூட்டி வந்து வைத்துக் கொண்டுதான் இவ்வகை ராஜிய திருமண பேச்சு வார்த்தையை  ஏறெடுப்பார்களாம்….” என பகரவும் இவளுக்கு சுயம் சுடப்பட சினமுண்டாயிற்று…..

மிரட்டி திருமணத்திற்கு சம்மதிக்க செய்வதென்றுதானே அதன் பொருள்…..இவளது தேசம் இப் பாண்டியர்களது மன்னனின் மிரட்டலுக்கு பயந்துவிடுமா என்ன?

அவள் அப்படியாய் சீற முனைந்த வினாடியில்….

அவனோ அதை சிறிதும் லட்சியம் செய்தது போலவே தெரியவில்லை…..எப்படி தெரிந்து கொள்ள முடியும்……இன்னும் அனைவரும் போர்கள கோலத்திலேயே இருக்க….இவள் முகம் மறைத்த தலைகவசம் அவளது எவ்வித முகபாவத்தையும் வெளிக் காட்டாதே….

“ஆனால் எம் வகையில் அதை நாங்கள் விரும்பவில்லை….” மானகவசன் பகர

“எம் மன்னருக்கு அது மிரட்டி காரியம் சாதிக்கும் வகை போலிருக்கும் என அதன் மீது விருப்பமில்லை……அதுவும் அது அவரது திருமண பேச்சு வார்த்தை என்பதால் அதை அவ்விதமாய் ஏறெடுக்க அவர் மறுத்துவிட்டார்” என வரதுங்கன் அதை விளக்கினான்.

“ஆதலால் எப்பபடையையும்  நாங்கள் கோட்டைக்குள் கொண்டுவர விரும்பவில்லை...” என முடித்தான் பாண்டிய படைதலைவன்.

ருயம்மாவை இது  பலமாகவே தாக்கியது…. ஏனெனில் இச்செய்தியின் பொருள் என்ன? அப்பாண்டிய மன்னன் இத்திருமணத்திற்கு ஏதோ ஒருவகையில் முக்கியத்துவம் கொடுக்கிறான், முறை பார்க்கிறான் என்பதுதானே??

இதில் இப்பாண்டிய படைதலைவரை இவள் சந்தித்த நொடியிலிருந்து சற்று முன்வரை கோட்டை ஆபத்திலிருக்கிறது என்ற சூழ்நிலை புலத்தில்,

 அத்தளபதி இவள் முகம் காணாமல் மறைத்திருக்கிறாளே தவிர பெண்ணாய் சம்பாஷிக்கும் பொழுது இவள் குரலில்தானே பேசிக் கொண்டிருக்கிறாள்……

இதில் இவள் திருமணத்திலிருந்து தப்பிக் கொள்ள வைத்திருந்த தற்கொலை திட்டம் மொத்தமும் சிதைந்து போயிருப்பதை இப்பொழுதுதான் நிதர்சனமாய் உணர்கிறாள்……

இந்த வகை ராஜிய திருமணத்தை நிச்சயித்தபின் ஒரு இளவரசி தற்கொலை வகையிலோ அல்லது இயற்கையாகவோ எதிர்பாரா வகையில் உயிர் நீத்தால்….

அம்மரண செய்தி ரகசியமாக மறைக்கப்பட்டு, அந்தபுரத்தில் அரச முறைகளனைத்தும் அறிந்து வளர்ந்த மற்றொரு பணிப்பெண் அல்லது மன்னரின் மற்ற வகை துணைவியாரின் மகள் இளவரசி என பட்டமிடப்பட்டு, 

நிச்சயிக்கப்பட்ட எதிரி மன்னனுக்கு மணமாலை சூட்டுவதும் சில சமயங்களில் நடை பெற்றிருக்கிறது என கேள்வியுற்றிருந்தாள் இவள்….

ஏனெனில் திருமணம் நிற்க எக்காரணம் சொல்லப் பட்டாலும்…..பரஸ்பர நம்பிக்கை இன்மை காரணமாக அது எதிரி அரசனால் அவமதிப்பாய் எடுக்கப்பட்டு….. அதன் காரணமாகவே போர் மூண்டு பெரும் உயிரிழப்பு ஏற்படும் என்பதால் இப்படி ஒரு முறை கையாளப்படுமாம்.

எதிரி அரசன் என்பதால் இளவரசியை அதன் முன்பு பார்த்திருக்க வாய்ப்பே இல்லை என்பதோடு……பருவம் அடையும் முன்னிருந்தே பெரும்பாலும் ராஜகுமாரிகள் யார் பார்வையிலும் படாமல் வளர்க்கப்படுவாதால்…. இப்படி ஆள்மாறாட்டம் எளிதுதான் என்பது இதன் அடிப்படை….

இதை நம்பித்தான் இவள் தன்  தந்தைக்கு தன் மரணத்திற்குப் பின் எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும் என மடல் வரைந்துவிட்டு மரணத்திற்கு துணிந்திருந்தாள்…..

இங்கோ இந்த சேனாதிபதி இவள் குரலை கேட்டிறுக்கிறானே….. இப்பொழுது பெண்ணை மாற்றினால் இனம் கண்டு கொள்ள மாட்டானா?

இவனது மன்னனோ திருமணத்தில் முறை பார்க்கிறவனாய் இருக்கிறான்…..ஆகையால் இத்திருமணம் நின்றாலும்….அல்லது மணமகளை மாற்றினாலும் நிச்சயமாய் அவன் அதை எளிதாய் எடுத்துக் கொள்ளப் போவதில்லை.

தற்கொலை செய்து கொண்டால் கூட நாட்டை காப்பாற்ற முடியாது போலவே…. பாண்டிய மன்னன் பராக்கிரமனை மணந்துதான் ஆக வேண்டுமா இவள்??  என்ன செய்யவாள் இவள்….???? தீர்மானித்துவிட்டாள் ருயம்மா….

இன்று இத்தனை நேரமாய் யாருடைய சமயோசிதத்தை மனதில் ஆலாபித்தும் ஆராதித்தும் கொண்டிருந்தாளோ அந்த அவரது முகம்தான் மனதில் வந்து எழும்புகிறது விடையாக….

அவர் அடிப்படையில் போரை வெறுப்பவர்…. ஓரளவு மனித மன உணர்வுகளையும் மதிப்பவர்….. மகாராணியாய் வருபவள் சுமுக உணர்வோடு மணமுடித்து வரவேண்டும் என்ற அளவிற்கு நிதானிக்கிறவர்…..எதெற்கெடுத்தாலும் என் தங்கைக்காய் இதை செய்வேன் என சொல்லும் பாசக்காரர்……ஒரு வேளை இவள் உணர்வுகளையும் மதிக்க கூடும்….ஏதாவது வழி பகரக் கூடும்…..

எல்லாவற்றிற்கும் மேலாக இவள் தற்கொலை செய்யக் கூடாதென எத்தனை காரணம் சொன்னார் அவர்?…….ஆணாயிருந்தால் அதை அப்படியே ஏற்றும் கொள்ளும் இவள் உள்ளம்….ஆனால் பெண்ணின் நிலை என்பது இங்கு வேறல்லவா? ஒரு வேளை உள்ள நிலை சொன்னால் அதற்கும் ஏற்ப தீர்வு சொல்வாராய் இருக்கலாம்….உண்மை நிலையை சொல்லியே விடை கேட்டுப் பார்ப்போம்…..

எது எஃதாயினும்……இத்திருமண விஷயத்தினால் போர் என மூண்டால் அது இவள் தேசத்தை மட்டுமா பலி கேட்கும்….அவர் புறமும் இழப்பிருக்கும் தானே……ஆக அவரே இதற்கு விடை பகரட்டும்…..முடிவெடுத்தாள்.

ருயம்மாவின் இம்முடிவின் பின் விளைவு என்ன??????

தொடரும்

Episode # 05

Episode # 07

{kunena_discuss:1063}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.