(Reading time: 25 - 49 minutes)

திர்பாரா எதிரியின் மீது பாய்ந்து தாக்க இவர்கள் பதுங்கி வந்திருக்க……படு பயங்கர ஆயத்தங்களுடன் எதிரியோ பகிரங்கமாக எதிர் கொள்கிறான் என்றால்…..இத்தனை தூரம் தன் கோட்டைக்கு அருகில் காகதீயம் இவர்களை ஏன் அனுமதித்ததாம்….?

 கடகத்தின் கரங்கள் போல எதிர் எதிர் திசையிலிருந்து எழுந்து வந்து வெட்டிப் போடுவர்களோ? அல்லது அருகில் வரவும்தான் அனைத்து திசைகளிலுருந்தும் வளைக்க வசதியாய் இருக்கும் என எண்ணி இருக்கிறார்களோ? என துருக்கியர் காகதீய போர் வியூகம் பற்றி பலவும் எண்ணிக் குழம்பிக் கொண்டிருக்க….

அதே நேரம் கோட்டையின் வாசலில் காத்திருந்த சைலபத்திரன் படைபிரிவும் இதே மானகவசன் அணியின் செயலையே பிசிறின்றி பின்பற்றி ஐம்பது ஐம்பது பந்தங்களாய் தரையில் ஏற்றி வைத்தபடி முன்னேற…..

இது கோட்டையிலிருந்து இன்னொரு படையும் தங்களை தாக்க வெளி வருவதாக தோன்றுகிறது துருக்கிய படைக்கு…

நமது எண்ணம் சரிதான் போலும் இரண்டு படைப் பிரிவுக்கு இடையில் சிக்கிக் கொள்கிறோம் நாம் என துருக்கியர்கள் அஞ்சவும், அதை எப்படி எதிர்கொள்ள என எண்ணவும் தொடங்கிய சமயம்….. அவர்களும் தமது படையை இரு பிரிவாய் பிரிக்கலாம் என சிந்திக்க தொடங்கிய காலம்…

இதற்குள் அங்கு கோட்டை மதிலில் அங்கங்கு கட்டி இருந்த தீப்பந்தங்களை பல வீரர்கள் வாயு வேகத்தில் ஓடி ஓடி ஏற்றுகின்றனர்…..

அஃது கோட்டைக்குள்ளும் ஏராளாமான வீரர்கள் பதுங்கி இருக்கின்றனர் என்ற மாயையை ஏற்படுத்துகிறது துருக்கிய சைனியத்திற்கு……..

இது இன்னுமாய் துருக்கிய நம்பிக்கையை துடைத்தெடுக்க…..

இன்னுமொரு படை…….உண்மையில் காகதீயர் யாரும் அறிந்திராத படை ஒன்றும் தெற்கிலிருந்து  இதே தீபந்த செயலை சிறிதும் பிழையின்று செய்து துருக்கி சைனியத்தை நோக்கி முன்னேற….….

சொல்வொணா கிலியடைந்தது துருக்கிய சைனியம்….. விருச்சிக கரங்களும் கொடுக்கும் போல மூன்று திசைகளிலிருந்து மூன்று பெரும் படைகள் இவர்களுக்கு எதிராக வந்து கொண்டிருக்கிறது என்பது அவர்களது புரிதல்…….

வந்து கொண்டிருக்கும் காகதீய படையிடம்  சிக்கினால் இரவிற்குள் இவர்கள் படைபிரிவில் எத்தனை பேர் மிஞ்சியிருப்பர் என ஏகமாய் கலங்கிப் போகின்றனர் அவர்கள்…….

ஒவ்வொரு படைப் பிரிவின் அளவைப் பார்க்கவும் தங்கள் துவசம் நிச்சயம் என எண்ணிய துருக்கியர் சற்று நேரத்திற்கெல்லாம்   டெல்லி நோக்கி தங்களது புரவிகளில் வாயு வேகத்தில் பயணித்துக் கொண்டிருந்தனர் அவர்கள்…….

காகதீய தலைநகரமான ஒருகல்லை நேரடியாக தாக்குவதைவிட சிறிய கோட்டையான கோலகொண்டாவை தாக்கி தனதாக்கிக் கொண்டால், அதன் பின் இன்னுமாய் படை கொணர்ந்து அடுத்தடுத்த கோட்டைகளை அடித்து பிடிக்கலாம் என எண்ணமிட்டிருந்த துருக்கியர்…..

சிறு கோட்டை தானே என சற்று மிதப்பாய் வந்திருக்க……மானகவசனின் திட்டம் அவர்கள் மனோதைரியத்தை கலைத்துப் போட, மீண்டும் பெரியதொரு சைனியத்துடன் வந்து மோதலாம்…இப்போது தற்காப்பு அவசியம் என திரும்பி இருந்தனர் அவர்கள்…..

கோட்டைக்குள் மானகவசன் ருயம்மாதேவி அணி திரும்பிச் செல்லும் நேரம் அத்தனை அத்தனை குதுகலம், மகிழ்வு, கொண்டாட்டம்……

துருக்கியரை துரத்தவென, அணி வகுத்து வீரர்களுடன் கோட்டையிலிருந்து வெளி வந்த சமயம் ருயம்மாதேவிக்கு கவனம் முற்றிலும் இந்த வியூகம், செயல்பாடு, துருக்கியர் என அதில்தான் குவிந்து கிடந்தது எனில், வெற்றியுடன் திரும்பி வந்துவிட்ட இச் இசமயம் அப் பாண்டிய தலைவனையே படையெடுக்கிறது அவளது மனம்.

மூன்றாவதாய் இவர்களுக்கு உதவிக்கு வந்த படை நிச்சயம் இப் படைதலைவருடையதாகதான் இருக்கும்….. ஆக தன்னுடன் சிறு படையை பாதுகாப்பிற்காய் கூட்டி வந்து இவளது நாட்டினுள்ளே மறைத்து வைத்திருக்கிறார்…..

சடுதியில் அவர்களுக்கு செய்தி அனுப்பி இவ்வாறு களம் வரச் செய்யுமளவு வழி வகையும் ஏற்படுத்தி இருக்கிறார்…. என அவன் செயலை புரிந்தாள்.

ஆக கோட்டை வாயிலில் இவர்களனைவருக்கும் கிடைத்த கோலாகல வரவேற்புக்குப் பின் …. முக்கிய நால்வரான…சைலபத்ரன், இந்த சேனாதிபதியாரின் நண்பன் வரதுங்கன், இவள் மற்றும் சேனாதிபதி அனைவரும் மந்திராலோசன சபையில் குழுமும் போது, அப்படை பற்றி நேரடியாகவே மானகவசனிடம் வினவினாள் ருயம்மாதேவி…… ஆனால் குற்றப் படுத்தும் விதமாக எதையும் சொல்லவில்லை….

“தனியாளாய்தான் நான் இங்கு வர வேண்டும் என எந்த நிபந்தனையும் உங்கள் மன்னரிடமிருந்து எங்களுக்குத் தரப்பட்டிருக்கவில்லையே……அஃதோடு அவர்களை நான் இக்கோட்டைக்குள் கொண்டு வரவில்லையே தவிர மறைத்து வைக்கவும் முயலவில்லையே….. அவ்வாறு எண்ணி இருந்தால் இப்போதும் அவர்களை மறைத்திருப்பேனே…… ” என்ற அவனது விடையை அவள் ஏற்றுக் கொண்டாலும்

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.