(Reading time: 25 - 49 minutes)

மீண்டுமாய் அப்பந்தம் இப்போது எரிய துவங்க…. அது தொடர்ந்து எரிகின்றது என்பதை இரு மணி துளிகள் கவனித்து உறுதி செய்து கொண்டவள்…..

 “தீபம் இயற்றப்பட்டு ஒளி வீசுகிறது” என்றபடி முன்னோக்கி திரும்பினாள்……

அதுதான் இவர்களுக்கான சமிஞ்சை..

 கோட்டையிலிருந்து மேற்கு புறம் வந்திருந்த இவர்கள் படை பிரிவிற்கு….

கோட்டையின் ஆயத்த நிலைகளை பார்க்க வகையற்று இருக்க….. அவர்களை இவ்வாறு சமிஞ்சை செய்ய விதித்திருந்தான்.

அந்த சமிஞ்சை தான் இது…..

அவ்வளவுதான் இங்கு இடமிருந்து வலமாக ஒரே வரிசையாக அணி வகுத்திருந்த வீர்ர்களில் தீபந்த வண்டிக்கு அருகாக நின்றிருந்த வீரன்,

வண்டியிலிருந்து இயற்றப்படாத ஆளுயர நீள பந்தங்களை ஒவ்வொன்றாய் எடுத்து தனக்கடுத்திருந்த வீரனின் கையில் கொடுக்க….

அவன் அடுத்திருந்தவனுக்கு கை மாற்றவென மின்னல் வேகத்தில் அனைவருக்கும் தீ பந்தங்கள் கிடைக்கப்பெற்றது….

ஒவ்வொரு வீரனும் அவசரமாக அதன் கூரான அடி முனையை தன் காலருகில் தரையில் சொருக….. ஐம்பது பந்தங்கள் பக்கவாட்டில் நிற்கும் ஒரு வரிசை உண்டாகிறது…..

அதற்குள் இந்த ஐம்பது பந்த வரிசைக்கு இடப்புறம் ஒருவர் வலப்புறம் ஒருவர் என புரவியில் நகர்ந்திருந்த மானகவசனும் ருயம்மாதேவியும்

இப் பந்தங்கள் இயற்றப்பட்டாலும் அதன் வெளிச்சம் துருக்கியருக்கு தெரியாத வண்ணம்….

அதற்கென கொண்டு வந்திருந்த நீளமும் அகலமுமான மர பலகையை எடுத்து பந்த வரிசைக்கு முன்பாக மறைத்து பிடித்தபடி நிற்கின்றனர்….

அப்பலகைக்கு சின்னதாய் ஒரு கூரை அமைப்பும்  இணைக்கப்பட்டிருக்கிறது……..ஆக பந்தத்திலிருந்து மேல் நோக்கி சிதறும் ஒளி வெளிச்சம் கூட இதனால் மறைக்க பட்டுவிடும்…

அடுத்ததாக வண்டியின் பின்னால் தீபந்தத்தை குடத்தில் மறைத்தபடி பயணத்திருந்தவர்கள் ஓடி வந்து,

 ஒவ்வொரு வீரனின் முன்னிருக்கும் இருக்கும் பந்தத்தையும் சடுதியாய்  ஏற்ற…..

அனைத்து வீர்ர் முன்னிருக்கும் பந்தங்களும் இயற்றப் படவும்…..

அனைத்து வீர்ர்களும் இப்போது பந்தத்திலிருந்து விலகி…..

 சில அடிகள் முன்னோக்கி ஓடி…..  

மீண்டுமாய் முன் போலவே பக்கவாட்டு வரிசையில் நிற்க…

அவர்கள் சென்ற பின் பந்தங்களை மறைத்த மறைப்பு பலகையை ருயம்மாவும் மானகவசனும் படுக்கை வசமாக கிடத்தி சற்று முன்னேறி செல்ல….

 அதுவரை மறைக்கப் பட்டிருந்த இந்த ஐம்பது பந்த வெளிச்சமும், இப்பொழுது தடை  நீக்கப்பட்டதால்,

 ஏராளமான ஒளியை உமிழ்ந்து அப்பிரேதசத்தை ஒளியூட்டுகிறது….

அப்போது இவர்கள் நின்றிருந்த பகுதி மேடான இடமாகையால், தூரத்தில் பள்ளத்திலிருந்த துருக்கிய சைனியத்திற்கு மேற்கு திசையிலிருந்து ஒரு ஐம்பது தீபந்தங்கள் ஏக காலத்தில் திடுமென காட்சி தருகின்றன……

 அதாவது இருளில் அவ் ஆள் உயர தீப்பந்தங்கள் ஐம்பது நபர்கள் தீபந்தமுடன் அம்மேட்டுப் பகுதிக்கு பின்னிருந்து ஏறி வருகின்றனர் என்பது போல் காட்சி அளிக்கிறது…...

ஒவ்வொரு பந்தமாய் ஏற்றியிருந்தால் அவர்களுக்கு இத்தகைய உணர்வு வந்திருக்காது….இது அணி வகுத்து வரும் படை வரிசை  ஏறி வரும் காட்சிப் பிழையை கண்களுக்கு உண்டு செய்கிறது….

இப்போது இதே செயலை இவர்கள்  முன்பு எரிந்து கொண்டிருந்த தீப்பந்தகளிருந்து மூன்றடி இடைவெளியில் மீண்டுமாய் செய்ய…..

 இன்னுமொரு ஐம்பது தீபந்தங்கள் அதாவது அடுத்த வரிசை சைனியம் முன்னோக்கி வந்திருப்பதாய் புரிகின்றது துருக்கியருக்கு….

 அதாவது அம்பது அம்பது பேராய் இரண்டு வரிசையில் இரவு நேரத்தில் ஆள்கள் மலையிலிருந்து இறங்க துவங்குகின்றனர் என புரிகிறது….

இப்பொழுது மூன்றாவது வரிசை……இதோ நான்ங்கு வரிசை……

இப்படி காகதீயர்கள் நட்டிய தீப்பந்தங்கள் எரிந்து கொண்டிருக்க,

மானகவசனின்  திட்டப்படி இன்னுமின்னுமாய் ஐம்பது ஐம்பது எண்ணமுடைய வரிசைகளாய் பல வரிசை பந்தங்கள் நாட்டியபடி  முன்னேறுகின்றனர்…..

மானகவசனின் திட்டப்படி இவர்கள் மேற்கு திசை வந்து……

மேற்கிலிருந்து துருக்கிய சைனியத்தை நோக்கி முன்னேறுவதால்….

.கோலகொண்டா கோட்டையிலிருந்து மேற்கு திசையிலிருக்கும் அடுத்த காகதீய கோட்டையான கொண்டபள்ளி கோட்டையிலிருந்து ஒரு பெரும்படை கோல்கொண்டா கோட்டைக்கு உதவியாக வந்து கொண்டிருக்கிறது என தோன்றுகிறது துருக்கி சைனியத்திற்கு….

தங்கள் ரகசிய வருகையை அறிந்து எப்படி இத்தனை ஆயத்தமாய் கொண்டபள்ளியில் இருந்து காகதீய படை வந்து சேர்ந்தது என அவர்களுக்கு ஆச்சர்யமும்  கிலியும்….

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.