(Reading time: 21 - 41 minutes)

வளது பேச்சில் மனம் பழையபடி தேறிவர எதிரே அவளது வகுப்பு தோழி ஒருத்தி வந்தாள்.

“ஹாய்... எல்லாரும் ஒரே இடத்துல இருக்கீங்க நல்லது...” என்று புன்னகைத்துக்கொண்டே தன் புத்தக பையில் கையைவிட்டு துளாவினாள். எதுவோ உண்ண தான் தர போகிறாள் என்று அனைவரும் பார்த்துக்கொண்டு இருக்க, அவளோ பத்திரிக்கைகளை எடுத்தால் அதில் ஒவ்வொருவர் பெயரையும் எழுதி ஒவ்வொருவரிடமும் கொடுத்தாள்.

அதை திறந்து பார்த்தவர்கள்.. “ஹே என்ன இது... இன்னும் காலேஜ் கூட முடியலை அதுக்குள்ள கல்யாணமா???”

“ஹே நல்லா பாருங்கடி.. எக்ஸாம்லா முடிஞ்ச அப்பறம் தான். நம்ம காலேஜ் விட்டு போன 1 மாசத்துல கல்யாணம்...”

“அதுக்குள்ள என்ன அவசரம் மீரா...”

“அதெல்லாம் என் கையில இல்லையே” என்று கனவுகளை மறைத்த புன்னகையில் கூறினாள் அவள்.

“நீ பிடிவாதமாக இருந்திருக்கலாமே...” என்று கீர்த்தி கேட்கவும்... அவளது தோழி தடுத்தாள். கீர்த்தியின் கையை அழுத்திவிட்டு “இப்போ என்ன மீரா உனக்கு மாப்பிள்ளையை பிடுச்சிருக்கில்ல அப்பறம் மத்தது பத்தி எதுக்கு யோசனை” என்று சூழலையும் பேச்சையும் மாற்றினாள்.

அங்கு இருந்த மற்றவர்களும் அதையே பின்பற்றி திருமணம் ஆக போகும் பெண்ணை கிண்டல் செய்வது என்று பொழுதை கடத்தினர்.

கீர்த்திக்கு தான் இதிலெல்லாம் விருப்பம் இல்லை, அப்படி தனியாக தன் தோழியோடு போகும் போது புலம்பினாள்... “அதெப்படி மது, இவ்வளவு சீக்கரம் கல்யாணம் பண்ணிவச்சு என்ன பண்ண போறாங்க... அவளுக்குன்னு ஒரு ஆசை இருக்கும் தானே..”

“அதெல்லாம் சில பெற்றோர் பார்க்குறது இல்லை கீர்த்தி... அவங்களுக்கு பொண்ணு பாதுக்காப்பாக இருக்கணும் அவ்வளவு தான் எங்க தன்னோட கண் பார்வை விட்டு வெளியே போயிட்டாள் தப்பாக ஏதாவது நடந்திடுமோன்னு நினைக்குறாங்க”

“தப்பான்னா என்ன சொல்ல வர...”

“காதல் அப்படி இப்படின்னு...”

“ஹ்ம்ம்..” ஒரு புன்முறுவலை உதிர்த்தவள் “கனவுகள் கான்றதோட மீரா வாழ்க்கை முடிய போகுது.. இப்படியா அவங்க பசங்க மேலே நம்பிக்கை இல்லாமல் ஒரு பெற்றோர் இருப்பாங்க...”

“எடுத்தோம் கவுத்தோம்ன்னு சொல்லாத கீர்த்தி அவங்க நிலைமை அவங்க இடத்தில் இருந்து பார்த்தாள் தான் தெரியும்” என்று கூறினாள் மது. ஆனால் என்னவோ கீர்த்தியின் மனம் இன்னமும் அதை ஒப்புக்கொள்ள தான் மறுத்தது. இந்த சிறிய விஷயத்திற்கே அவளது மனம் பெற்றோரே எப்படி குழந்தைகளை நம்பாமல் இருக்கலாம் என்று குழம்ப துவங்கிவிட்டது  அந்த பருவத்து மன முதிர்ச்சியோடு.

இப்படியே அரட்டை, படிப்பு, விளையாட்டு என்று இரண்டு மாதங்கள் விரைந்து ஓட, அடுத்தடுத்து தேர்வுகள் ப்ரஜெக்ட் டெமோ என்று நேரம் விரையமானது. தங்கைக்கு சொல்லித்தந்த வண்ணம் அவளும் பயின்றாள். வேறு எதுவும் யோசிக்க நேரம் கூட இல்லாமல் சரியாக இருந்தது. படித்ததுக்கு ஏதுவாக நன்றாக பரிட்சையை எழுதி முடித்தனர்.

“அம்மா...”

“அம்மா...”

“அம்மா சீக்கரம் வாங்க...” என்று மாறி மாறி இருவரும் கத்தி அருணாவின் உயிரை வாங்க துவங்கினர் பெண்கள்.

கையில் கரண்டியோடு வந்தவர், “என்னங்கடி வேணும்? சும்மா கத்திகிட்டே இருக்கீங்க...”

“என்னோட டிரஸ் எடுத்து இவள் போட்டிருக்காம்மா... ஒழுங்கா கலட்ட சொல்லுங்க...” என்றாள் கீர்த்தி

“அம்மா போன மாசம் இவள் தானே என்னோட புது டிரஸ் போட்டாள் அதுக்கு பதிலா இப்போ நான் அவளோட டிரஸ் போட்டுக்கிறேன்... அப்படியே அழகாக டிரஸ் வச்சிருக்கன்னு நினைப்பா சரியான சொங்கி டிரஸ் நல்லாவே இல்ல...” என்று பதில் தந்தாள் சிறியவள்.

“அப்பறம் எதுக்கு போட்டுருக்க கலட்டிதா...”

“முடியாது...”

இப்படி மாறி மாறி இருவரும் சண்டை போட்டுகொண்டு இருக்க, அருணாவிற்கு தலை சுற்றியது. “ஏய் இப்போ நிறுத்திரிங்களா இல்லையா? இல்லை இதாலையே அடிவாங்குவீங்க...” என்றதும் சத்தம் நின்றது...

“அப்பப்பா ஒருத்திக்கூட விட்டுக்குடுத்து போறது இல்ல... எப்போடி உனக்கு கம்பெனியில் இருந்து கூப்பிடுறாங்க...” என்று சிறியவளை நோக்கி கேட்டார்

“தெரியலைம்மா இன்னும் 2 மாசம் ஆகும்...” என்றாள் மித்ரா

“உனக்குடி...” என்று பெரியவளிடம் அவர் திரும்பவும் அவள் பேசாமல் இருந்தாள்.. “உன்னை தான் கேட்குறேன் கீர்த்தி...”

“அவள் இன்னும் கம்பெனியில் கேட்ட details அனுப்பலம்மா...” என்று சிறியவள் போட்டுகுடுக்கவும் முறைத்தாள் கீர்த்தி.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.