(Reading time: 21 - 41 minutes)

ன்னடி ஏதோ திண்டுக்கல் போகனுமாமே ஏதோ கல்யாணமாம்...” என்று அருணா கேட்கவும், “ஆமாமா... மது கூட வராம்மா...”

“ம்ம்ம்... எங்க தங்குவீங்க? எத்தனை பேரு போறீங்க? எப்போ போனும்?”

“இப்படி வருசையா அடுக்கினா எப்படிம்மா... இனிமே தான் கேட்கணும்... நீங்க விட மாட்டீங்கன்னு நினைச்சேன்...”

“உனக்கு போக வேணாம்னா போகவேண்டாம்...” என்று தோரணையாக சமைத்துக்கொண்டே கூறினார்.

அவளோ பதறிப்போய் “இல்ல இல்ல.. போகணும் கண்டிப்பா வர சொல்லி கூப்பிட்டுருக்காள்...

“ம்ம்ம்ம்... பத்திரமா போயிட்டு வரணும்... ஏதோ மித்ரா சொன்னதால விடுறேன்” என்று கூறவும்... மனதில் திட்டிக்கொண்டாலும் சிறியவளை பார்த்து ஒரு கும்பிடு போட்டாள். அவளோ காலரை தூக்கிவிட்டு கொண்டாள். 

“அது சரி மித்து... அந்த பொண்ணு அவளோட கிளாஸ் மேட்னா உனக்கும் தானே பிரிண்ட் நீ ஏன் போல?”

“அவள் என்னோட ஃப்ரிண்ட் கேங் இல்லம்மா... அதோட உங்கள தனியா விட்டுட்டு நான் எப்படிம்மா போவேன்...” என்று பலமாக நடித்து காட்டினாள்.

“அப்பப்பா என்ன நடிப்புடா... ஏய் சின்ன வாண்டு நான் உன்னை பெத்தவ என்கிட்டயேவா... போ போ...” என்று நினைத்துக்கொண்டு தன் வேலையை தொடர்ந்தார் அருணா.

இருவரும் சிரித்து பேசிக்கொண்டே வெளியே வரவும்... “கீர்த்தி ஏதோ சோகமா இருந்தியேன்னு தான் அனுமதி வாங்கிக்குடுத்தேன் ஒழுங்கா பத்திரமாக போயிட்டு என் பெயரை கெடுக்காமல் வரனும்...” என்று அலட்டலாக சிறியவள் கூறினாள்.

“சரிங்க மேடம்...” என்று பணிவாக கூறுவது போல நடித்தாள்.

“அது... சரி போறது தான் போற.. அப்படியே ரெண்டு நாள் முன்னாடியே அங்க போயிட்டு ஊர் சுத்தி பார்த்துட்டு வரலாம்ல...”

“அயய்யோ அதுக்கு யாரு அம்மாக்கிட்ட திட்டு வாங்குறது...”

“நீ ஏன் கல்யாணமும் ரிசெப்ஷன் அடுத்த அடுத்த நாள்னு சொல்லுற... ஒரு வாரம் கேப் விட்டு சொல்லு.. எல்லாரும் அங்கேயே இருந்து அட்டென்ட் பண்றோம்னு சொல்லு...”

அவளை மேலும் கீழும் பார்த்தவள்... “உன்னை போய் நம்புறாங்க என்ன உண்மை சொன்னாலும் என்ன நம்ப மாட்டிங்குறாங்க எல்லாம் நேரம்” என்று கூறி தலையில் அடித்துக்கொண்டாள்.

எப்படியோ சிறியவளே அதற்கும் பேசி அவளுக்காக அனுமதியும் வாங்கி தந்துவிட்டாள். “ஹே வா வா கீர்த்தி கல்யாணத்துக்கு போற என்ன டிரஸ்லாம் எடுத்து வச்சிருக்கன்னு காட்டு..”

கீர்த்தியே அவளது உடைகளை பார்த்துவிட்டு, இதுக்கு தான் அப்போவே அம்மா திட்டி திட்டி சேலை சுடிதார் வாங்க சொன்ன போதே வாங்கி இருக்கணும்... என்று மனதில் நினைத்து தன்னையே திட்டிக்கொண்டிருந்தாள். பேசாமல் சிரியவளிடம் வாங்கி விடலாமா என்று யோசித்துக்கொண்டிருக்கும் போது தான் மித்ரா உடைகளை பற்றி கேட்டது.

“நீ வேற ஏன்டி...” என்று அலுத்துகொள்ளவும் மித்ரவே அந்த பெட்டியை திறந்து பார்த்தாள். அதில் ஐந்து டிஷர்ட் 2 ஜீன்ஸ் 2 சுடி இருந்தது அதுவும் ரொம்ப சுமாரான வகையில் அதை கண்டவளுக்கு, “கீர்த்தி நிஜமாகவே நீ என் கூடத்தான் பிறந்தியா?!” என்று கேட்டாள்

“ஏன்டி இப்படி கேட்குற??”

“பின்ன இதெல்லாம் ஒரு டிரெஸ்ஸா... கல்யாணத்துக்கு வர சுமாரான ஆன்டி கூட நல்ல மேக்கப் போட்டு வரும்... நீ எடுத்து வச்சிருக்க டிரஸ் பாரு...” என்று துவங்கியவள் ஒவ்வொரு உடையையும் வெளியே எடுத்து திட்டி திட்டி மீண்டும் அறையிலேயே வைத்தாள்.

சிறிது நேரத்தில் காதை மூடிக்கொண்டவள் “ஏய் முடியலைடி... அதான் நல்லா இல்லைன்னு மொத்தத்துக்கும் சொல்லிட்டியே... தனி தனியா வேறையா???”

“ஹ்ம்ம்ம்... இரு வரேன்” என்று அவளுடைய அலமாரியை தோண்டியவள் சில உடைகளோடு வந்தாள் அது தூரத்தில் இருக்கும் பொழுதே மின்னியது. கட்டிலில் வைத்தவள் “ம்ம்ம்ம் இங்க வா...” ஒரு புடவையை அவள் மேலே வைத்து பார்த்துவிட்டு “இந்த கலர் உனக்கு அவ்வளவு எடுப்பா இருக்கு... இந்த மாதிரியெல்லாம் எடுக்க மாட்டியே...” என்று திட்டினாள்

“ம்ம்ம்ஹம்ம்ம்... ரொம்ப பளிச்சுன்னு இருக்கு”

“ம்ம்ம்ம்... எல்லாம் உன் கலருக்கு நல்லாத்தான் இருக்கும்” என்று பெருமையாக கூறினாலும் அதை குறைச்சலான குரலிலேயே தான் கூறினாள்.

“இந்தா என்னுடைய 5 செட் சுடிதார், 1 பான்சி சாரி... 1 சில்க் சாரி இருக்கு பத்திரமா கொண்டு போயிட்டு நீ பத்திரமா வரியோ இல்லையோ அது பத்திரமா வரணும்... புரிதா...” என்றாள்.

“எல்லாம் நேரம்டி...”

“ஹலோ... உன்ன என்ன பண்ணினாலும் அழகா காட்டுறது கஷ்டம் இருந்தாலும் நான் அந்த முயற்சிய துணிஞ்சு எடுக்குறேன் தெரியும்ல...”

“போடி...” என்று இருவரும் எப்போதும் போல் குட்டி சண்டை போட்டுகொண்டனர். அவள் கொடுத்த உடையெல்லாம் எடுத்து வைத்தவளை பார்த்து “கீர்த்தி உனக்கு புடவை கட்ட தெரியுமா??” என்று வினவினாள்.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.