(Reading time: 21 - 41 minutes)

வளை முறைக்காம எனக்கு பதில் சொல்லு கீர்த்தி ஏன் அனுப்பலை?”

“பின்ன என்னம்மா நான் தான் போலீஸ் ஆகணும்னு சொல்றேன்ல... உங்க கட்டாயத்துக்காக தான் கேம்பஸ் இண்டர்வியூ அட்டென்ட் பண்ணினே... என் நேரம் செலக்ட் ஆகிட்டேன்” என்று கோவமாக பதில் கூறிக்கொண்டு இருந்தாள்.

“வேலையே கிடைக்கலைன்னு எத்தனை பேரு வருத்ததுல இருக்காங்க தெரியும்ல... அதாண்டி தானா தேடி வந்தாள் அதோட அருமை தெரியாது...” என்றார் அருணா.

“நான் வேணா எனக்கு பதிலா வேற யாராவது ஒருத்தரை செலக்ட் பண்ணுங்கன்னு மெயில் போடுறேன் போதுமா...” என்று தாயின் பேச்சிற்கு நக்கலாக பதில் கூறினாள்.

“உலராத கீர்த்தி.. ஏதோ 2 வர்ஷம் வேலைக்கு போனோமா.. அப்பறம் நாங்க பாக்குற பையனை கல்யாணம் பண்ணிக்கிட்டோமான்னு இரு...”

“முடியாதும்மா...”

“அடிச்சேன்னு வை ஏதோ விளையாட்டுக்கு பேசுறன்னு பார்த்தாள்” என்று அவர் கையை ஓங்கவும் கோவித்துக்கொண்டு அறைக்கே சென்றுவிட்டாள் கீர்த்தி.

சிறிது நேரம் கழித்து அறைக்கு சிறியவள் செல்ல, கீர்த்தி வெளியே ஏதோ வெறித்து பார்த்தவண்ணம் கையில் ஒரு டைரியை வைத்துக்கொண்டிருந்தாள்.

மெதுவாக அருகே வந்தவள், “கீர்த்தி வா சாப்பிடலாம்... அம்மா ஏதோ கோவத்துல பேசிட்டாங்க... அதெல்லாம் பெருசா எடுத்துக்காத...”

அவள் கூறியதற்கு எந்தவித மாற்றமும் இல்லாமல் இருந்தாள். அவள் பேசாமல் இருக்கவும் அவள் அருகேயே அமர்ந்தவள் “கீர்த்தி” என்று தோள் தொட்டு, “பொறுமையாக யோசிச்சு பாரு கீர்த்தி, இதெல்லாம் நமக்கு செட் ஆகாது...”

அவள் கூறியதை கேட்டு நீயுமா என்பது போல அவளை நோக்கினாள்.

“அதிர்ச்சி ஆகாத கீர்த்தி, நீ நினைக்குற மாதிரி லைப் ரொம்ப ஈசி இல்ல, உன் கேரக்டர்க்கு அது ஒத்தும் வராது...” என்று மித்ரா பேசிக்கொண்டே போகவும் முன்பை போல அவள் மீதே அவளுக்கு சந்தேகம் வர துவங்கியது. கலங்கிப்போனவள் சிறியவள் எழுந்து செல்லும் வரை எதுவும் பேசவில்லை. அவள் சென்றதும் கண்ணீர் கண்ணின் ஓரம் துளிர்விட கையில் இருந்த டைரியை திறந்து பார்த்தாள் அதை மெதுவாக தடவியவள் வேகமாக மூடிவிட்டு தன் பெட்டியில் வைத்துக்கொண்டாள்.

இரண்டு நாட்கள் யோசனையிலேயே சுத்திக்கொண்டு திரிந்தவளுக்கு பெரும் குழப்பமாகவே இருந்தது.

“ஏற்கனவேயே யோசனை மன்னி, இப்போ ரெண்டு நாளா இன்னும் மோசம்ங்க நீங்களே என்னனு கேளுங்க” என்று அருணா அலைபேசியில் அவர் கணவரிடம் கூறினார்.

“ம்ம்ம்ம் இந்தா...”

அம்மாவை முறைத்துக்கொண்டே அலைபேசியை வாங்கியவள் அவள் அப்பாவிடமாவது அனுமதி கிடைக்கும் என்ற நம்பிக்கையோடு பேசினாள் “அப்பா...”

“என்னடாம்மா?? அம்மா கூட சண்டையாமே...”

“அதெல்லாம் இல்லப்பா...”

“உன் ஆசையெல்லாம் சரிதான்டா... ஆனா நீ பிற்காலத்துல செட்டில் ஆகுறதை பத்தியும் யோசிக்கணும்ல”

....

“ஒன்னும் அவசரம் இல்லை கீர்த்தி நல்லா பொறுமையா யோசி... என்னை கேட்டால் வேண்டாம்னு தான் சொல்லுவேன்... நமக்கு எது ஒத்துவருமோ அதுதான் செய்யணும். உன் பதிலும் அதுவாக தான் இருக்கணும்னு ஆசை படுறேன்டா” என்று வாழைபழத்தில் ஊசி ஏற்றுவதுப் போல, தன் முடிவை அவள் மீது நாசுக்காய் திணித்தார்.

தன் செல்ல தந்தையும் அவ்வாறு கூறியதும் இன்னும் தன் மீது இருந்த நம்பிக்கை குறைந்து போக சோர்ந்து போனாள். சிறிது நாட்கள் செல்ல செல்ல தமக்கு இது சரிவராது என்கின்ற எண்ணம் அவளிடமும் தோன்றிவிட பழையபடி மாற துவங்கினாள். அப்படி மாறும் நேரத்தில் தான் அவளுக்கு தோழியிடம் இருந்து அழைப்பு வந்தது.

“ஹாய் கீர்த்தி”

“சொல்லு மது...”

“ஹே நெக்ஸ்ட் வீக் கீத்துவோட கல்யாணம் நியாபகம் இருக்குல்ல?! கண்டிப்பா வர சொல்லிருக்காள்...”

“நீ ரொம்ப ஈஸியா சொல்லிட்ட மது.. இங்க வீட்ல விடணுமே... அதுவும் திண்டுக்கல்கு... இதை நான் சொன்னா... அம்மா உடனே சென்னைல இருந்து திண்டுக்கல்லான்னு ஆரம்பிச்சா போய்டே இருக்கும் அவங்க திட்டு...”

“உதை வாங்குவ.. ஆன்ட்டிகிட்ட நானும் வரேன்னு சொல்லு...வேணும்னா நானே பேசுறேன்...”

“வேண்டாம் வேண்டாம்...கேட்டுட்டு நானே கால் பண்றேன்...”

இவள் பேசிக்கொண்டு இருந்ததை கவனித்துக்கொண்டு இருந்த மித்ரா உடனே சமயலறைக்கு ஓடினாள்... “அம்மா...” என்று கத்திக்கொண்டே.

“போச்சு இந்த வாண்டு கேட்டுறுச்சா... போன மாதிரிதான்... போவோமா இல்லையா” என்று யோசித்துக்கொண்டு சமையலறைக்கு சென்றாள். அவள் எதிர்பார்த்ததுக்கு மாறாக அங்கு சிறியவள் அவளுக்காக அனுமதி பெற்றிருந்தாள்.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.