(Reading time: 21 - 41 minutes)

ல்லையே” என்று திரு திருவென முழித்தாள் கீர்த்தி

“கடவுளே... ஹ்ம்ம் இங்க கொடு அந்த புடவைய...” என்று படபடவென வாங்கியவள் அவளுக்கு சொல்லிகொடுத்த வண்ணம் அலுங்காமல் அழகாக கட்டிவிட துவங்கினாள். ஆடை அணிகலன்கள் மேல் இருந்த பிரியமோ என்னவோ பார்த்து பார்த்து சரி செய்தாள். அவள் கட்டி விடுவதையே சிறிது நேரம் பார்த்துக்கொண்டு இருந்த கீர்த்தி... “இருந்தாலும் மித்ரா...” என்று துவங்கினாள்.

“என்ன இருந்தாலும்???”

“இவ்வளவு நல்லவளா நீ???”

“அடிங்கு... உனக்கு பெர்மிஷன் வாங்கிக்குடுத்தேன்ல என்னை சொல்லணும்...”

“சரி சரி என் ஸ்வீட் சிஸ்டர்ல...”

“போதும் போதும் உன் கொஞ்சல்ஸ்...” என்று அவளை ஒரு முறை சுழட்டிவிட்டு பார்த்தாள். “எல்லாம் ஓகே....” என்று இலுவையோடு நிறுத்தினாள் சிறியவள்.

அவள் நிறுத்தவும் கண்ணாடியில் பார்த்துக்கொண்டவள். “வேற என்ன இன்னும் இருக்கு” என்று மேல் இருந்து கீழ் பார்த்தாள் கீர்த்தி.

“ஒண்ணுமில்ல... என்ன பண்ணினாலும் lcd மாதிரியே இருக்கியேடி...” என்று கூறி அவள் சிரிக்க... கடுப்பாகி போன கீர்த்திகா அவளை துரத்த துவங்கினாள். சட்டென ஓடுவதை நிறுத்திய மித்ரா ஏதோ சத்தம் வருவதை உணர்ந்து பால்கனியின் பக்கம் சென்றாள். கீழே அன்று பார்த்த  மாடல் வாலிபன் வண்டியை நிறுத்திக்கொண்டு இருந்தான். மித்ரா பார்க்கும் திசையை வந்து பார்த்தாள் கீர்த்தி.

அவனையே பார்த்துக்கொண்டு இருந்த மித்ரா, கீர்த்தியிடம்... “கீர்த்தி உனக்கு தெரியுமா விரேன் ஓட...”

“யாரு விரேன்???”

“அதான் அந்த மாடலிங் பண்ற பையன் தான்”

“ஒ.. அவன் பேரு விரேனா...”

“ம்ம்ம்ம்... அவனோட ஃப்ரிண்ட் இந்த ஃப்ளாட்ஸ்ல இருக்கான் போல, அடிகடி மேல் மாடிக்கு போறான்.”

“பார்த்துடி... எதாவது பொண்ண பார்க்கப் போறான்...”

“அட நீ வேற கீர்த்தி... இப்பல்லாம் வேற ஒரு சந்தேகம் வருது...”

“அப்படி என்ன சந்தேகம் CID மேடம்...”

“நிறையா பொண்ணுங்க போய் பேசி பார்த்திருக்காங்க கீர்த்தி... ஆனால் இவன் எந்த பொண்ணுங்க கூடையும் பேசுறதே இல்லையாம்... ஏன் நோட்டீஸ் கூட பண்ண மாட்டிங்குரானாம்.”

“சரி அதுனால என்ன?? அவன் வேற யாரையாவது லவ் பண்ணுறான இருக்கும் அதான் அப்படி இருக்கானா இருக்கும்...”

“யாரு இந்த காலத்து பசங்க லவ் பண்ணதும் சைட் அடிக்குரதை நிருத்திடுராங்களா??? நல்ல கதையை சொன்ன போ...”

“எப்பா பெரியமனுஷி... நீ இந்த உலகம் அறியாத அறிவாளி தான் நீயே சொல்லு...”

“எங்க கேங்குக்கு ஒரு டவுட்...”

“என்னனு...” என்று கேட்டாள் ஒரு இலுவையோடு...

“ஒருவேளை இவன்….” என்று இழுக்கவுமே அவள் என்ன யோசிக்குராள் என்று புரிந்துவிட அதற்கு முன்பே இவள் பதில் கூறிவிட்டாள்.

“ஹே நில்லு நில்லு... நீங்க பாட்டுக்கு ஒரு புரளியை கிளப்பிவிடுறீங்க...அவனை பார்த்தால் அப்படியெல்லாம் தெரியலை எப்படிதான் இப்படி டக்குனு சொல்லிடுரிங்கன்னு தெரியலை...” என்று படபடவென்று என்றும் இல்லாத அதிசயமாக அவள் அவனுக்கு பரிந்து பேசவும் சிறியவள் “என்ன காத்து வேற பக்கமாக வீசுது போலவே..” என்று சந்தேகமாக அவளை பார்த்து கேட்டாள்.

“அப்படியெல்லாம் இல்ல... ஏதோ தோனுச்சு சொன்னேன்” என்று அவள் மழுப்பலாக சொல்லியும் மித்ரா அவளை நம்பியதாக தெரியவில்லை. அவளை பார்த்துக்கொண்டே “சரி இல்லடி நீ சரியே இல்லை...” என்றாள்.

“எல்லாரும் சரியாதான் மேடம் இருக்கோம்... நீ போய் உன் வேலையை பாரு” என்று பெரியவள் கொஞ்சம் கடுப்பாக கூறவும் சிறியவள் அவளை ஒரு பார்வை பார்த்துவிட்டு உள்ளே சென்றுவிட்டாள். யாரை என்ன கூறினாள் இவளுக்கென்ன... ஆனால் சிறியவள் கூறிய விஷயத்தில் ஏதோ அவளுக்கு உடன்பாடில்லை ஏனென்றால் சில மாதங்கள் முன்பு நடந்த சம்பவங்கள் அப்படி நினைக்க தோன்றவில்லை.

தொடரும்

Episode # 02

{kunena_discuss:1082}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.