(Reading time: 21 - 42 minutes)

ழமாய் ஆலோசிக்க தேவையின்றி அறிவு தங்கை சொல்லும் கருத்தை ஒப்புக் கொள்கிறதெனில்…… யதார்த்தம் உணர்ந்து இன்நேரம் இவ் விவாஹத்திற்கு சம்மதம் சொல்லியாக வேண்டிய ருயம்மாதேவியின் மனம் எதையெல்லாமோ எண்ணி கலங்குகிறது…  

ஆதலால் சம்பாஷணையை திசை திருப்பும் நோக்கில் “எனதருமை தங்கைக்கு இதெல்லாம் யார் கற்பித்த பாடம்?” என்றபடி அமர்ந்திருந்த மும்மியை பின்னிருந்து குனிந்து நின்றபடி கழுத்தோடு அணைத்தாள்.

“நீதான்…..” என்று வந்தது விடை.

“பராக்கிரம மன்னர் உனக்கு பரம்பரை வைரி….ஆனால் அவரது சேனாதிபதியும் அந்த வரதுங்கரும் கட்டாயமாய் கௌரவிக்கப்பட வேண்டிய விருந்தினர்கள் என கருத்து சொன்னாயே…. அதில் கற்ற பாடம் இது….மன்னரையும் அவரது தூதுவர்களான சேனாதிபதியையும் வரதுங்கரையும் உன்னால் வெவ்வேறாக பார்க்க முடியும் எனில் நான் ஏன் அம் மன்னரையும் அவரது முன்னோரையும் வெவ்வேறாக பார்க்க கூடாதாம்…?” என்றதாய் அதனோடு ஒரு விளக்கம்…

“அது இவர்கள் இருவரிடமும் ஏற்பட்ட அறிமுகத்தின் பலனாய் உண்டான புரிதல் மும்மி…” தன் பக்க வாதத்தை வெளியிட்டாள் ருயம்மா….முனுமுனுப்பாய் தான் ஒலித்தது அது…..ஆனால் இதய ஆழத்திலோ அப் பதங்கள் அலைபாயும் அவள் மனதில் ஒரு நங்கூரமிறக்கியது….

பாண்டிய மன்னரை, அவரது நாட்டு முறைகளை, அவரகளது கலாச்சாரத்தை நேரில் கண்டு வந்தால் என்ன? என்ற விபரீத வினாவை எழுப்பியது அது…… நேரில் சந்தித்தால் நிலையும் நினைவும் இயல்பும் புரியும்தானே ….

அதே சமயம் தன் கழுத்தை வளைத்திருந்த தமக்கையின் இரு கரங்களையும் தன் இரு கரங்களால் பற்றிக் கொண்ட மும்மியோ

“ஹூம்….” என சலித்துக் கொண்டவள்……”இவர்களை தூதுக்கு அனுப்பியதற்கு பதிலாக அந்த பராக்கிரமரே நேரில் வந்திருந்தால் நலமாய் இருந்திருக்கும்…” என ஒரு ஏக்க தொனியில் சொன்னவள்….

அடுத்த கணம் கற்பனா வேகத்தில் உற்சாக ஊற்றாய்  பேசலானாள்….

“யோசித்துப் பார் ருயம்மி…..மன்னர் வந்திருந்தால் இத் துருக்கிய முற்றுகையை முறியடிக்க நீர் அவரோடு களம் சென்றிருப்பாய்…..அவரோடு கலந்து பேச…அவர் பழக்க வழக்கங்களை அறிய என ஆயிரம் வாய்ப்புகள் இருந்திருக்கும்…..இந்நேரம் இது ராஜிய விவாஹமாய் இல்லாமல் காதல் மணமாய்  மாறி இருக்கும்…”

கருத்தற்ற கற்பனைதான் இவ்வார்த்தைகள் எனினும் இதுவும் கூட ருயம்மாவின் அவ்விபரீத எண்ணத்தை….பாண்டிய தேசம் பார்த்து வர வேண்டும் என்ற நினைவை இன்னுமாய் வேர் விடச் செய்தன…..

உண்மைதானே மன்னனை நேரில் பார்த்து அவன் குணங்களை அறிந்து கொண்டால் அதன் பின் இவளுக்கு முடிவுக்கு வர எத்தனை இலகுவாக இருக்கும்…? அதன் பின்னும் இவ் விவாஹத்தில் விருப்பமின்றி இவள் தற்கொலை செய்து கொண்டால் கூட போராடாமல் புறமுதுகிட்டது போல்  இருக்காதில்லையா….?

முன்பு பாண்டிய தளபதி இவளை இதே காரணத்திற்காக ஆண் என நம்பி அழைப்பு கொடுத்ததும் ஞாபகத்தில் வருகிறது… அவரும் ஒரு வகையில் இதைத்தானே தீர்வாக சொன்னார்??  

இவள் சிந்தனா சக்தி இத் திக்கில் குதித்தோடிக் கொண்டிருக்க இவளது தங்கை மும்மியோ இவள் தீவிர முகபாவத்தை கண்டு இரு கணம் மௌனமாய் இருந்தவள்….

” உன்னால் முடியவே முடியாதெனில் தந்தையிடம் சொல்லிவிடலாம் அக்கை……இளவரசியை மணம் புரிந்து தருவதாகதானே வாக்கு….. பாண்டிய மன்னரோடு விவாஹம் உனக்கில்லை என்றானால் எனக்கு எனதான் அமைச்சர் யுகந்தரும் தந்தையாரும் ஆலோசித்துக் கொண்டார்களாம்….” மிக்க நிதனமாய் பகர்ந்தாள்.

 ஸ்தம்பித்துப் போனாள் ருயம்மா….தங்கையின் வெறுமை நிறைந்த குரலில்…..அவளது வார்த்தைகளின் பொருளில்….இவளுக்காய் தான் பலியாக எண்ணும் அவளது நினைவில்….விதிர் விதித்தும் விக்கித்தும் நின்றாள்….இது எத்தனை ஆழமான உண்மை….!!!

இவள் எப்படி தற்கொலை முடிவிற்கு வந்தாள்….? இவள் எனக்குப் பதிலாய் பாண்டிய நாட்டை பூர்விகமாய் கொண்ட இவர்களது அரண்மணை பணிப் பெண் இளவஞ்சியை விவாஹம் செய்து அனுப்பி விடுங்கள் என எழுதி வைத்தால் எல்லாம் அவ்வாறே நடந்துவிடுமா என்ன?

நிச்சயமாய் அமைச்சரின் ஆலோசனைப் படி இந்த பூங்குருத்து மும்மியைத்தான் பலி பீடத்துக்கு அனுப்பி வைப்பார்கள்….

தனக்காக தன் தங்கையை பலி இடுவதாமா?

அதன் பின் வெகுவாக எதையும்  யோசிக்காமல் தீர்மானித்துவிட்டாள் ருயம்மா……பாண்டிய நாடு போய் வருவதென…..

அந்நாட்டை அம்மன்னரை அறிந்து கொள்ள வேண்டும்…..இவள்  மனம் சம்மதித்தால் விவாஹம்…..இல்லையெனில் அப் பராக்கிரமனே இவ் விவாஹ முடிவிலிருந்து விலகுமாறு செய்ய வேண்டும்….. முயன்றால் முடியாததென ஒன்று இருக்கிறதா என்ன?

அவளது மனம் கடகடவென திட்டமும் தீட்டிவிட்டது…… அதன்படி அன்றிலிருந்து மூன்றாம் தினம் அவள் பாண்டிய நாடு நோக்கி தன் பயணத்தை துவங்கி இருந்தாள்…..

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.