(Reading time: 21 - 42 minutes)

ம் தன் திட்டப் படி தான் பாண்டி நாடு செல்வது என முடிவெடுத்த அன்று இரவு, முதல் காரியமாக பாண்டிய படைத் தலைவரை இரவில் ஆண் வேடத்தில் சந்திக்க சென்றாள் ருயம்மா.

 ஓலை செய்தி என எதுவும் அனுப்பி இச் சந்திப்பை ஏற்படுத்துக் கொள்ள இயலாது என்பதால்….முன்பு இவள் தற்கொலைக்கு முயன்றாளே அதே சாமத்தில் கோட்டையின் அதே பகுதிக்கு சென்றாள்….

அதன் பக்கம் தானே அப் பாண்டிய தலைவர் ஏதோ உலாத்திக் கொண்டிருந்தார்…..இப்பொழுதும் அவ்வாறு வர வாய்ப்பு அதிகம் என ஒரு யூகம் அவளுக்கு…. காத்திருந்தால் சந்தித்துவிடலாம் என நம்பினாள்.

ஆனால் இவள் எதிர்பார்ப்பிற்கும் மேலாய்…..இவள் பார்வையில் அவ்விடம் படும் கணமே தெரிகின்றது அந்த பாண்டிய படைத்தலைவரின் உருவம்….

வெண்பட்டு வஸ்திரத்தில் நேற்றைய அதே வகை உடைமுறையும் மார்கவசமுமாய் நின்றவன்…. அவனது கருநிறபுரவியின் பிடரியைத் தடவியபடி அதனடுடன் எதையோ உரையாடிக் கொண்டிந்தான்…….இன்றைய சந்திர ஒளியில் இன்னுமாய் வசீகரமாய் அவன்…

போர்களத்தில் வீர்னுக்கு அவனது வாளை விடவும் அதி முக்கியம் அவனது புரவி….ஆக அதனோடு அனைத்து நாளுமே சிறிதளவாவது நேரம் செலவழிப்பதும் அதற்கு பயிற்சி அளிப்பதும் எந்த ஒரு வீரனும் இயல்பாய் செய்யும் செயல்தான்…..

ஆனால் அக் காட்சியைக் கண்ட கணமே இவள் உள்ளம் துள்ளியது…… நிச்சயமாய் இவளுக்காகத்தான் காத்திருக்கிறார்….

 உள்ளே பிறந்த துள்ளல் உடல் முழுவதிலும்….அதை சுமந்தலையும் கால்களிலுமாக பரவ மாறுகிறது இவள் நடைமொழி…..

இவளது காலடியோசையை உணர்ந்தான் போலும்…..இவள் வந்த திக்கில் திரும்பியவன் முகத்தில் ஓர் ஆவலும், வருவது இவள் என உணர்ந்ததும் உதித்தெழும் பிராகசமும்…

அதை கண்ணுறவும் ஏனோ எடையிழக்கிறது விவாஹ காரியங்களால் விசனப்பட்டிருக்கும் இவள் இதயம்.

வருவது ருயமருத்ரன் என உணர்ந்த கணம் மானகவசன் வதனத்தில் தோன்றிய மகிழ்ச்சியின் ஒளி அவ்வாறே நிலைத்திருந்தாலும் கூட, அவன் கண்களிலோ வந்து கவிழ்கிறது கலவையான பல்வகை உணர்வுகள்.

 அவ் உணர்வுகளை ஒவ்வொன்றாய் இனம் காணும் முயற்சியாய்  அதன் மீது மாத்திரம் கவனம் செலுத்திய வண்ணம் அவனை நோக்கி செல்லலானாள் இவள்…

இன்னுமாய் இவள் நெருங்க, பாவை சிரம் முதம் சிறு பாதம் வரை இவள் மீது ஒரு முறை பயாணப்படுகிறது அவன் பார்வை….

அதில் கண்ணியக் குறைவாய் எதுவுமில்லைதான்….ஆனாலும் கன்னியல்லவா ஏதோ உணர்வில் அதுவாக தாழ்கிறது இவளது இமைகளிரண்டும்…..

தனது பாதம் தழுவி நிற்கும் ஆண்களுக்கான பாத அணி கண்ணில் படவும் தான் தன் வேடம் உணர்ந்தவள்…..மீண்டுமாய் அவன் பார்வையை நேருக்கு நேராய் தாங்கி நிமிர்ந்தே நடந்தாள்….

இதற்கும் மேலும் அவன் பார்வையை தாங்குவது இவளுக்கு தகிப்பாய் தோன்ற…. வார்த்தைகளை உதவிக்கு அழைத்தாள்…

“வந்தனம் பிரபு….” உபராசமாய் வாழ்த்தினாள்.

“வாரும் ருயமரே, வணக்கம்” என வரவேற்ற அவன் குரலில் ஏதும் ஏமாற்றம் காணப்படுகிறதோ?

அடுத்த கணம் “ படைத்தலைவரே நீங்கள் உணவருந்தியாயிற்றா…? தங்களது அறையில் சௌகரியம் எல்லாம் திருப்தியாய் இருக்கிறதுதானே….எதுவும் குறைவுபடுகிறதோ? ஒருவேளை வேறு எதுவும் தேவை இருக்கிறதோ..? தயங்காமல் சொல்லுங்கள்….இப்பொழுதே செய்து தர ஆவண செய்கிறேன்…..எது குறைவு பட்டிருந்தாலும் அது அறியாமல் செய்த பிழை…. மன்னிக்க வேண்டும் “ என வேகா வேகமாக உபசரிப்பில் இறங்கினாள் ருயம்மா….

அவர் குரலில் ஏனிந்த ஏமாற்றம் என அதிலேயே சங்கடவாக்கில் நின்றது இவள் மனம்.

“ஒரு வேளை உங்கள் புரவிக்கு எதுவும் தேவையோ..?” அடுத்த திக்கில் விசாரித்தாள். இதை ஒவ்வொன்றையும் குறிப்பிட்டு சொல்லி பணியாட்களை அததற்கென இவளேதானே நியமித்தாள்? எங்கு தப்பாயிற்று?

“அதிலெல்லாம் ஏதும் குறைவில்லை” என்ற அவன் பதிலே வேறு எதிலோ குறை இருக்கிறது என்பதை வெளியரங்கமாய் ஒத்துக் கொள்கிறது…

இவள் மேற்கொண்டு எதுவும் விசாரிக்கும் முன்னும்…. “ மதிய வேளை எங்களை கௌரவிப்பதற்காக அளித்த விருந்தில் உமது சகோதரி தவிர முக்கிய பிரமுகர்கள் அனைவரும் கலந்துகொண்டால் அதற்கு நான் என்ன பொருள் கொள்ள வேண்டும்? இளவரசியார் வரக் கூடாதென ஏதும் வரைமுறை இருந்தால் அவரது இளைய தங்கையும் வராதிருந்திருக்க நேரிட்டிருக்குமே…..” என தன் பக்க காரணத்தை குறிப்பிட்டான் அவன்..

மானகவசன் கூறிய காரணத்தை கேட்கவும் ‘இவள் வரவில்லை என்றுதானாமா இவருக்கு வருத்தம்…’. என்ற நினைவில் இவள் மனதில் குதுகலம் குழுமி எழும்ப..அது தன் உச்சம் தொடும் முன்னம்….

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.