(Reading time: 22 - 43 minutes)

வாழ்க்கை பணத்தால் மட்டுமே அமைந்தது இல்லை. உண்மையான வாழ்க்கை .மகிழ்ச்சியில் மட்டுமே உள்ளது. மகிழ்ச்சி என்பது தனக்கு பிடித்தமான செயல்களைச் செய்யும் பொழுதே கிடைக்கக்கூடியது. அதனால், தனக்கு பிடித்தமான சினிமா டைரக்டர் கனவை நிறைவேற்ற எண்ணி, பெரிய கம்பெனி என்று கூற முடியாவிட்டாலும், சாதாரண விளம்பரக் கம்பெனியில் குறைவான சம்பளத்தில் வேலை பார்த்து வருகிறான்.

இன்னும் அவன் கனவு நிறைவேறவில்லை. குடும்பத்தில் ஜாடை மாடை பேச்சுக்கள் தொடங்கிவிட்டன. சாப்ட்வேர் கம்பெனிக்கே வேலைக்கு சென்றிருக்கலாம் என்று தன்னைத் தானே நொந்துகொண்டான்.

காட்சியை தன்னால் முடிந்த அளவு விளக்கிவிட்டு, நீண்ட பெருமூச்சை விட்டபடி அங்கிருந்து எழுந்து நடந்தான் வசந்த். பசி அவன் வயிற்றைக் கிள்ளியது. பல்வேறு உணவு வகைகள் தயாராக இருந்தன. சைவத்தை விட அசைவமே அதிகமாய் இருந்தது. வசந்த், தனக்குப் பிடித்த உணவினை தேர்ந்தெடுத்து உண்டான்.

"ரொம்ப கஷ்டப்படுற போல?" வசந்தை நோக்கி ஒரு குரல் கேட்டது. வசந்த் திரும்பினான். ஜெசிகா குளிர்பானத்தை அருந்திக்கொண்டிருந்தாள். 

"நான் அனுபவிச்சிட்டு இருக்க கொடுமையெல்லாம் ரொம்ப ரசிச்சு பாத்துட்டு இருக்கனு நினைக்கிறேன்"

தொடர்புடையவை: உங்களுக்கு இதுவும் கூட பிடிக்கலாம்... -

நிஷா லக்ஷ்மியின் "வானவிழியழகே..." - காதல் கலந்த குடும்ப தொடர்...

படிக்க தவறாதீர்கள்...

ஜெசிகா சிரித்தாள். "எனக்கு உன் நண்பன் ஜான் கொடுக்குற கொடுமையை விடவா நீ அதிகமா அனுபவிச்சிட போற"

வசந்த் புன்னகைத்தபடி தனிமையை நோக்கி நடந்தான். ஜெசிகா பின் தொடர்ந்தாள்.

"வசந்த், உன்கிட்ட ஒரு உதவி கேக்கணும்"

"சொல்லு"

"எனக்கொரு நல்ல வீடு வாடகைக்கு வேணும்"

"எதுக்கு? இப்போ நீ இருக்க இடமே நல்லா தான இருக்கு?"

"அங்க தான், எனக்கு தொந்தரவு கொடுக்கிறதுக்குனே ஜந்து ஒண்ணு இருக்கே"

"ஜான் உன்ன ரொம்ப லவ் பண்றான்"

"எனக்கு தேவையில்லை. காலம் முழுக்க நான் தனியாவே இருக்கணும்னு முடிவு பண்ணிருக்கேன்"

"ஹாஹா! காதல் தோல்வில முடிஞ்ச எல்லா பெண்களுமே சொல்லுற வசனம் தான் இது"

"உன்னால எனக்கு உதவ முடியுமா? முடியாதா?"

"முயற்சி பண்றேன். போற போக்க பாத்தா நானே தனி வீடு பாக்கணும் போல"

"ஏன் அப்படி சொல்ற?"

"என் அப்பா கேக்குற கேள்விக்கு என்னால பதில் சொல்லவே முடியல. சினிமால வர போல டயலாக் பேசிட்டு இந்த பீல்டுக்கு வந்தேன். வாழ்க்கை நம்ம நினைக்குற போல இல்ல ஜெசிகா. உண்மையான வாழ்க்கை வேற மாதிரி இருக்கு"

"வேற மாதிரினா?"

"எதை நீ ரொம்ப வெறுக்குறியோ, எது உனக்கு பிடிக்காம வாழுறியோ, அது தான் நம்மளை கடைசி வரை பிடிச்சிட்டு இருக்கும்"

"உன்னால சாதிக்க முடியும் வசந்த்"

"என் நம்பிக்கை ரொம்பவே குறைஞ்சு போச்சி. இப்போ என் கனவுகளோட கடைசி கட்டத்துல இருக்கேன்"

"உனக்கு நல்ல திறமை இருக்கு. ஆனா, டைரக்டருக்கு முக்கியமானது, உன் மனசுல இருக்க விஷுவல்ஸ் மத்தவங்களுக்கு புரியவைக்கிறது தான். அதுல தான் நீ தோத்துப்போய்டுற"

வானில் மிதக்கும் மேகங்களை யோசனையோடு பார்வையிட்டான் வசந்த்.

"என்ன யோசனை?"

"இன்னைக்கு, வீட்டுல ஒரு சம்பவம் நடந்துச்சு"

"என்னது?"

"ஈராக்ல இருந்து ஒரு பொண்ணு சட்டவிரோதமா அமெரிக்காகுள்ள வந்துட்டான்னு நினைக்கிறேன்"

"ஓ காட்"

"எங்க கார் ஷெட்டுக்குள்ள ஒளிஞ்சிட்டு இருந்தா. அவளுக்கு ஆங்கிலம் சுத்தமா தெரியல/ ஆனா, தான் வந்த வழிய ஓவியமா வரஞ்சி காட்டினா. உண்மைய சொல்லனும்னா மெரண்டுட்டேன். அவ்வளவு தத்ரூபமான ஓவியம் அது. அவ முகத்துல இருந்த சின்ன சோகத்தை கூட ஓவியம் மூலமா சொன்னா"

"அப்புறம் என்ன ஆச்சு?"

"அவளை வெளிய போக சொல்லிட்டேன். அவ அங்கிருந்து கிளம்பி ரொம்ப நேரமாயிருக்கும்"

"சரி, அதை விடு. நாளைக்கு நாம ஒரு இடத்துக்கு போறோம்"

"எங்கே?"

"ஒரு ஸ்பான்சர் பாக்க"

"நிஜமாவா சொல்லுற?"

"ஆமா, என் ஃபிரண்டுக்கு தெரிஞ்சவரு. உன்ன பத்தி சொன்னேன். அழைச்சிட்டு வா, பாக்கலாம்னு சொல்லிருக்காரு "

வசந்திற்கு மகிழ்ச்சி தாங்க முடியவில்லை. "நீ என்கிட்ட விளையாடலையே?"

"உண்மைய தான் சொல்றேன். ஆனா, நீ எனக்கு இன்னொரு உதவி செய்யணும்"

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.