(Reading time: 22 - 43 minutes)

சந்த் நீண்ட மூச்சை விட்டெறிந்து தன்னை ஆசுவாசப் படுத்திக்கொண்டான். அப்பொழுது, அவன் அமர்ந்த இடத்தின் அருகில் அமேலியா கொண்டுவந்த ஆல்பம் இருந்ததைப் பார்த்து அதை எடுத்துப் பிரித்தான். ஒவ்வொரு புகைப்படமாகப் பார்த்துக்கொண்டிருந்தவனுக்கு அதிர்ச்சி.

அதில் ஒரு புகைப்படத்தில் வில்லியம்ஸ் சாராவின் பின்னால் தன் அக்கா மேகலாவும், நிலாவும் இருப்பதைக் கண்டு வியப்படைந்தான்.

"அக்கா உன் போட்டோ எப்படி இதுல வந்துச்சி?"

மேகலாவுக்கும் ஒன்றும் புரியவில்லை. புகைப்படத்தை நன்கு உற்று கவனித்தவள், நிலாவை அழைத்துக்கொண்டு அடிக்கடி செல்லும் பார்க்கில் எடுக்கப்பட்ட புகைப்படம் அது என்று புரிந்துகொண்டாள்.

அப்போது, வீட்டிற்குள் மற்றொரு கார் வரும் சப்தம் கேட்டது.

"யார் வரது?" என்று கேட்டார் நாராயணன்.

"ஜானை வர சொல்லி இருந்தேன்" என்று கூறியபடி எழுந்து வாசலை நோக்கி சென்றான் வசந்த்.

தொடர்புடையவை: உங்களுக்கு இதுவும் கூட பிடிக்கலாம்... -

ஜெய்யின் "ஸ்ருங்கார சீண்டல்கள்... சில்லென்ற ஊடல்கள்..." - காதல் கலந்த குடும்ப தொடர்....

படிக்க தவறாதீர்கள்...

"அந்த பைத்தியக்கார பய ஏன் இந்த நேரத்துல வரான்" என்று கடுகடுத்தார் நாராயணன்.

காரை நிறுத்திவிட்டு வெளியே வந்த ஜான் வசந்தை நோக்கி வந்தான். இருவரும் கை குலுக்கினார்கள்.

"எப்படிடா இருக்க?" என்றான் வசந்த்.

"ரொம்ப சந்தோசமா இருக்கேண்டா. நீ ஜெசிக்கா விஷயம் பத்தி  பேச தான வர சொன்ன. அது மட்டும் நல்ல விஷயமா இருந்தா இன்னைக்கு இரண்டு சந்தோசமான செய்தி எனக்கு கிடைச்சிருக்குனு அர்த்தம்"

"முதல் சந்தோஷமான செய்தி என்ன?"

"எனக்கு ப்ரோமோஷன் கிடைச்சிருக்கு. அடுத்து, நான் போர் கப்பல்ல பணிபுரிய போறேன். அதாவது, சீக்கிரமே ஈராக்கிற்கு போக போறேன். ரொம்ப த்ரில்லிங்கா இருக்கும். போர் நடக்குற இடம் எல்லாம் சுத்தி பாக்கணும்னு ரொம்ப நாள் ஆசை. அது எல்லாம் நிறைவேற போகுது" என்று கூறியபடி வீட்டிற்குள் வந்தான் ஜான்.

நாராயணனைக் கண்டதும், "ஹாய் நாராயணன்! எப்படி இருக்கீங்க?" என்றான்.

"மேகலா செருப்பு எங்கே விட்டு இருக்கேனு பாரு"

ஜான் சிரித்தபடி, "பைத்தியக்கார மருத்துவமனையில விட்டுட்டு வந்திருப்பிங்க" என்றான்.

"அடி செருப்பால" என்று கொதிப்படைந்தார் நாராயணன். வசந்த் அவரை சமாதானம் செய்து அமர வைத்தான்.

"ஹாய் மேகலா! எப்படி இருக்கீங்க?"

"நல்லா இருக்கேன்"

"நிலா, நீ?"

"நானும் நல்ல இருக்கேன் அங்கிள்"

"ஆமா, இது யாரு புதுசா?" .என்று அமேலியாவைப் பார்த்து கேட்டான் ஜான்.

அமேலியா ஜானைப் பார்த்து பிராகாசமடைந்தாள். உடனே, மாடியை நோக்கி வேகமாய் விரைந்தாள்.

எதற்கு இவள் மாடிக்கு ஓடுகிறாள்? என்று அனைவரும் புரியாமல் குழம்பினார்கள்.

"நான் அவ்வளவு பயங்கரமாவா இருக்கேன்? என்னை பாத்து பயந்து ஓடுறாங்க. யாரு அந்த பொண்ணு?" 

ஜான் தனக்கு ஏதேனும் ஒரு வகையில் உதவுவான் என்று எண்ணிய வசந்த், எல்லோரையும் ஒரு பார்வை பார்த்துவிட்டு காலையில் நடந்த அனைத்தையம் ஒன்று விடாமல் ஜானிடம் சொன்னான்.

வசந்த் கூறியதைக் கேட்டு ஜான் மிரண்டு போனான்.

"ஜான் நீ தான் எங்களுக்கு உதவணும்"

"நீங்கலாம் யாரு? நான் தெரியாம இங்க வந்துட்டேனு நினைக்குறேன். நான் அம்னீசியா பேஷண்ட். பூர்வ ஜென்மத்துல வசந்த்னு  ஒரு நண்பன் இருந்ததாவும் அவனுக்கு நாராயணன்னு ஒரு கொடுமைக்கார அப்பா இருந்ததாகவும் கேள்விபட்டு இங்க வந்துட்டேன். நான் இப்போவே இங்க இருந்து கிளம்பணும்"

"டேய்! ஜெசிகா டா"

"ஆமால்ல, அவ போன ஜென்மத்துல என் தங்கச்சியா இருந்தா. அவளை பாத்தா சிஸ்ட்டரை கேட்டதா சொல்லுங்க" என்று கூறி வேகமாய் நடந்தான்.

"டேய்! என்னடா விளையாடுறியா?"

"பின்ன என்னாடா? அவ ஈராக்ல இருந்து திருட்டுதனமா வந்தான்னு சொல்லுற. உன் அக்கா போட்டோவ கையில வச்சிருந்தான்னும் சொல்லுற. இதெல்லாம் நம்புற மாதிரியா இருக்கு?

"ஆனா, அது தான் உண்மை"

"அப்படின்னா, நான் நினைக்கிறது தான் சரி" என்றான் ஜான்

"என்ன?"

"அவ தீவிரவாதியாதான் இருக்கனும்/ கரெக்ட்டா உங்க அட்ரஸ் தேடி மேகலா போட்டோவோட எப்படி வர முடியும்? உங்க குடும்பத்தை பிடிக்காத யாரோ ஒரு தீவிரவாதிதான் இங்க அனுப்பிருக்கணும்"

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.