(Reading time: 15 - 29 minutes)

சிறு தயக்கம் கூட இல்லாமல் அவனது எண்ணிற்கு அழைத்தவள், அவன் ஹலோ சொன்னதும், மனதில் பட்டவற்றை கேட்க ஆரம்பித்திருந்தாள் நிதானமாக…

“நான் ஜனனி பேசுறேன்…”

“சொல்லுங்க ஜனனி…. எப்படி இருக்குறீங்க?...”

“இந்த கேள்விக்கு பதில் சொல்லத்தான் நான் போனே பண்ணினேன் உங்களுக்கு…”

“புரியலை நீங்க சொல்லுறது…”

“நேரடியா விஷயத்துக்கு வரேன்… நீங்க ஜானவியை விரும்புறீங்களா இல்லையா?...”

திடீரென நிகழும் அதிரடி தாக்குதல் போல் அவளது கேள்வி அமையவும், சற்றே அதிர்ந்து போனான் அர்னவ்…

“சொல்லுங்க… அந்த பைத்தியக்கார பொண்ணை விரும்புறீங்களா இல்லையா?...”

“……………”

தொடர்புடையவை: உங்களுக்கு இதுவும் கூட பிடிக்கலாம்... -

ஸ்ரீயின் "என்னுள் நிறைந்தவனே" - காதல் கலந்த குடும்ப தொடர்...

படிக்க தவறாதீர்கள்...

“இன்னும் நீங்க அமைதியாவே இருந்தா நிலைமை கை மீறி போயிடும்… அந்த லூசுப் பொண்ணு உங்களுக்காக பெத்தவங்க ஏற்பாடு பண்ணுற கல்யாணத்தை தடுக்க போராடிட்டிருக்கா… அது தெரியுமா உங்களுக்கு?...”

சில மணி நேரம் முன்பு கேட்டிருந்தால் தெரியாது என்று தான் சொல்லியிருப்பான்… ஆனால் அவனுக்கோ, அவளின் திருமணத்தகவல் சற்று முன்னர் தானே தெரியவந்தது…

அதைக்கேட்டுத்தானே அவன் திணறி நிற்கின்றான், மேற்கொண்டு என்ன செய்ய என்று தெரியாமல்…

இப்போது அதை ஊர்ஜிதப்படுத்துவது போல் ஜனனி சொல்ல, அவனுக்கு வலித்தது மிக…

“பாவிப்பொண்ணு… உனக்காக அவ இன்னும் எத்தனை தியாகம் தான் செய்வாளோ!!!…”

குரல் கம்ம ஜனனி அடுத்து சொன்ன விஷயம், அவனை முற்றிலுமாய் புரட்டி போட்டது ஆழிப்பேரலை என…

க்ஸாம் போட்டிருக்காங்கல்லம்மா… சீக்கிரம் அப்ளை பண்ணிடு…”

ஜானவியின் அப்பா ஜானவியிடம் கூற,

“சரிப்பா…” என்றாள் அவள்…

“சரிப்பா சரிப்பான்னு ஒவ்வொரு எக்ஸாம் அப்பவும் இப்படித்தான் சொல்லுற… ஆனா பாஸ் மட்டும் ஏன்ம்மா பண்ண முடியலை உன்னால…”

“அம்மா அதுவந்து….”

“அது என்னன்னு தான்ம்மா நானும் கேட்குறேன்… உன் அப்பா, தான் படுற இந்த கஷ்டம் நாளைக்கு என் பொண்ணும் படக்கூடாதுன்னு நினைக்குறார்… பத்து ரூபான்னாலும் நான் உன் அப்பாகிட்ட தான் வாங்குறேன்… அந்த நிலைமை நாளைக்கு உனக்கும் உன் புருஷன் கிட்ட வரக்கூடாதுன்னு நினைக்குறார்… அதுல எதுவும் தப்பிருக்கா?...” என ஜானவியின் அம்மா கேள்வி கேட்டதும்

“இல்லம்மா….” என தானாகவே தலை அசைத்தாள் ஜானவி…

“உனக்குன்னு ஒரு வேலை… உன் கையிலயும் அவசரத்துக்கு கொஞ்சம் பணம் இருக்கணும்னு நாங்க விரும்புறோம்ம்மா… சின்ன சின்ன தேவைக்கு கூட நீ இன்னொருத்தர் கிட்ட கை ஏந்தி நிக்க கூடாதுன்னு நாங்க நினைக்குறோம்ம்மா… ஆனா அது உனக்கு புரிஞ்சும் நீ புரியாத மாதிரி நடந்துக்குறது ஏன்னு தான் எங்களுக்கு தெரியமாட்டிக்குது….”

“……………..”

“உன் அப்பாக்கு நிரந்தரமில்லாத ஒரு வேலை…. இப்போ உனக்கும் அதே நிலைமை ஏன்னு தான் நானும் கேட்குறேன்… படிச்ச வரைக்கும் ஒரு குறையும் வைக்காம படிச்சு முடிச்ச… ஆனா இந்த எக்ஸாம் எழுதும் போது மட்டும் ஏன் கோட்டை விடுற?...”

“……………”

“ஆரம்பத்துல கட் ஆஃப் ஸ்கோரை கொஞ்சம் தான் தொட வேண்டியிருந்துச்சு… இப்போ நீ பாஸ் ஆகுறியா இல்லையான்னு கூட எங்களுக்கு தெரியலை… என்ன தான்ம்மா உனக்கு பிரச்சினை?... படிக்க பிடிக்கலையா?... இல்ல நீங்க சொல்லுற மாதிரி இந்த கவர்மென்ட் வேலை எல்லாம் எனக்கு பிடிக்கலைன்னு சொல்லாம சொல்லுறியா?... எது உண்மை?... எனக்கு இன்னைகே தெரிஞ்சாகணும் ஜானவி… சொல்லு….” என ஜானவியின் அம்மா சற்றே குரலை உயர்த்த, அவளது விழிகளில் இப்பவோ அப்பவோ என கண்ணீர் தளும்பி நின்றது…

அதைக் கண்ட ஜானவியின் அப்பா, மனைவியை உள்ளே போக சொல்லிவிட்டு, மகளிடம் வந்தார்…

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.