(Reading time: 15 - 29 minutes)

வ திட்டினதை எல்லாம் பெரிசா எடுத்துக்காதம்மா… நீ நல்லாயிருக்கணும்ங்கிற ஆதங்கம் தான் அவளை அப்படி பேச வைக்குது… எக்ஸாம்க்கு அப்ளை பண்ணுறதுக்கு இன்னும் எத்தனை நாள் இருக்கும்மா?...”

“ஒரு மாசம் மேல இருக்குதுப்பா…”

“சரிம்மா… நீ இந்த வாரத்துக்குள்ள அப்ளை பண்ண ட்ரை பண்ணு… சரியா?...”

“சரிப்பா…”

“புக்ஸ் எதுவும் வாங்கணுமாம்மா…”

“இல்லப்பா எங்கிட்ட நோட்ஸ் இருக்கு… அது போதும்…”

“சரிம்மா…. போய் தூங்கு….”

“சரிப்பா…”

“காலையில எழுப்பணும்னா சொல்லும்மா… அப்பா எழுப்பி விடுறேன்…”

“……………”

தொடர்புடையவை: உங்களுக்கு இதுவும் கூட பிடிக்கலாம்... -

ராசுவின் "என்னை ஏதோ செய்து விட்டாய்..." - நெஞ்சுக்குள் நீ மட்டும். எல்லாம் மறந்தேன். எனை என்ன செய்தாய்...

படிக்க தவறாதீர்கள்...

“இல்லம்மா நீ ஸ்கூல், காலேஜ் படிக்கும்போதெல்லாம், எக்ஸாம் டைம் அப்போ என்னை எழுப்பி விட சொல்லுவ… அதான் கேட்டேன்…”

என தகப்பன் சொன்னதும் அவரை அணைத்துக்கொண்டாள் ஜானவி…

தானாகவே அவரது கைகள் அவளது தலையினை வருடிக்கொடுக்க,

“இன்னும் இரண்டு நாள் போகட்டும்ப்பா… அப்புறம் நானே சொல்லுறேன்… என்னை எழுப்பி விடுங்கப்பா… நான் படிக்குறேன்…”

மகளின் வார்த்தையில் முகம் எங்கும் பூரிப்பாய் சரிம்மா என்றபடி சென்றுவிட்டார் அவரும்…

அவர் சென்றதும், மௌனமாக அமர்ந்திருந்தவளின் மனதினுள் பெரும் யுத்தமே அரங்கேற, அவள் தன் போனை எடுத்து, அதில் ரகசியமாய் வைத்திருந்த தன்னவனின் புகைப்படத்தை எடுத்து பார்வையை நிலைக்க விட்டாள்…

“ஒவ்வொரு எக்ஸாம்க்கும் படிச்சிட்டு போயி என்ன ப்ரயோஜனம்?... தெரிஞ்ச கேள்விக்கும் தப்பான பதிலை தான் நான் எழுதிட்டு வரேன்… ரிசல்ட் வரும்போது கரெக்டா அந்த கட் ஆஃப் மார்க்குக்கு உள்ள என்னோட மார்க் இருக்காது… எனக்கு தெரியும் கார்த்தி… நான் மன்னிக்க முடியாத தப்புதான் செய்யுறேன்னு… ஆனாலும் எனக்கு வேற வழி தெரியலை…. நான் மட்டும் எக்ஸாம்ல பாஸ் பண்ணி, வேலையில உட்கார்ந்துட்டா, அடுத்த மாசமே அப்பா எனக்கு வரன் தேட ஆரம்பிச்சிடுவார்… சத்தியமா என்னால அதை தாங்கிக்க முடியாது… உங்களை விட்டு இன்னொருத்தரை கல்யாணம் பண்ணிக்கணும்னு நினைக்க கூட என்னால முடியாது… அதே நேரத்துல பெத்தவங்க ஆசையையும் நிராசையாக்குறேன்னு நினைக்குறப்போ ரண வேதனையா இருக்கு கார்த்தி…”

கண் மூடி அழுதவள், கண் திறந்த போது, தகப்பனின் அருகே நின்றிருக்கும் புகைப்படம் சுவரில் தென்பட,

“என்னை மன்னிச்சிடுங்கப்பா… நான் தெரிஞ்சே உங்க ஆசையை குழி தோண்டி புதைச்சிட்டிருந்தேன்… என் வாழ்க்கையில இனி நான் நினைச்சது நடக்கும்ன்ற நம்பிக்கை எனக்கு இல்லப்பா… அதனால இனி உங்க ஆசையை மட்டுமாவது இன்னும் இரண்டு மாசத்துல நான் எழுதப்போற எக்ஸாம்ல நிறைவேத்துவேன்… ஒரு மகளா உங்களுக்கு நான் இந்த சந்தோஷத்தையாவது கொடுத்துடுறேன்ப்பா…”

சொல்லிக்கொண்டே தனது கைபேசியை கீழே வைத்துவிட்டு சுவரில் தொங்கிக்கொண்டிருந்த புகைப்படத்தின் அருகே நின்று கொண்டு அழ ஆரம்பித்தாள் அவள்…

டந்து முடிந்த நிகழ்வை, ஜனனி அச்சுப் பிசராமல் அர்னவிடம் சொல்லி முடித்தாள்…

அவன் அதிலிருந்து வெளிவர போராடிக்கொண்டிருக்கையிலே, அவள் அடுத்ததாய் அவனிடம் பேச ஆரம்பித்தாள் தன் மனதிலிருந்து…

“எங்கிட்ட அவ இத சொல்லி முடிச்சதும், திட்ட தான் தோணுச்சு… ஆனாலும் நான் எதுவுமே சொல்லலை… இந்த சம்பவம் நடந்து முடிஞ்சு ஆறு மாசம் ஆச்சு… ஆனா அவ இப்போதான் இதையே சொல்லுறா… கண்டிப்பா, அவ இந்த தடவை எழுதின எக்ஸாம்ல பாஸ் பண்ணிடுவான்னு அவங்க அப்பாக்கே தெரிஞ்சிட்டோ என்னவோ, அதான் மகளுக்கு கல்யாண ஏற்பாடு செய்யுறதுல இறங்கிட்டார்…”

“உன்னை எக்ஸாம்க்கு படிக்க வைச்சவ, அந்த எக்ஸாமையும் வேணும்னே நல்லா எழுதாம விட்டிருக்கா… இதுக்கும் கல்யாணம் தான் காரணமான்னு கேட்டதுக்கு, நீ நல்லா எழுதியிருக்க மாட்டியேன்னு சொல்லுறா?... இப்படி ஒரு முட்டாள் பொண்ணை எங்கேயாவது பார்த்திருக்கியா நீ?... பார்க்கலைன்னா நல்லா பாரு… உன்னையே நினைச்சு, உனக்காகவே தன் வாழ்க்கையை குழி தோண்டி புதைச்சிட்டிருக்குறா…”

“நீ என்னை எப்படி நினைக்குறன்னு எனக்குத்தெரியலை… ஆனா எனக்கு நீ கூடப்பிறக்காத தம்பி தான்… அப்படித்தான் நான் இப்போவரை நினைச்சிட்டிருக்குறேன்… நீ என்ன காரணத்துக்காக அவளை விட்டு விலகியிருக்குறன்னு எனக்கு தெரியலை… ஆனா இனியும் அவளை விட்டு விலகி இருக்காத… அவ உன்னை ரொம்ப விரும்புறா அர்னவ்… உன்னை மட்டுமே விரும்புறா…. அம்மா அப்பா தான் உலகம்ன்னு வாழ்ந்திட்டிருந்த பொண்ணு, இப்போ அந்த உலகமா உன்னை மட்டுமே நினைக்குறா… வேற என்ன சொல்லுறதுன்னு எனக்குத் தெரியலை….”

ஆழ்மனதிலிருந்து அவள் பேச, அவன் அவள் சொன்ன உண்மையில் ஊமையாகிப்போனான்…

மேற்கொண்டு பேச முடியாது ஜனனி போனை வைத்துவிட, அர்னவின் மனதும் ஒரு சில முடிவினை எடுத்தது தீர்மானமாய்….

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.