(Reading time: 15 - 29 minutes)

சொல்லுங்க….”

“உன் மனசுல என்னதான் இருக்குது சரயூ… வெளிப்படையா எங்கிட்ட சொல்லிடேன்…”

அவன் கேட்டதும், மீண்டும் அவளிடம் ஓர் விரக்தி புன்னகை உதிக்க,

“சொல்லு சரயூ… எதுக்காக இத்தனை விரக்தி உன் முகத்துல?...”

“என்னை நினைச்சா, எனக்கு விரக்தி தான் தோணுது…”

“அதுதான் ஏன்னு கேட்குறேன்?...”

“என் கணவர் இன்னும் என்னை புரிஞ்சிக்கலையேன்னு நினைக்குறப்போ விரக்தி வராம வேற என்ன செய்யும்?...”

தொடர்புடையவை: உங்களுக்கு இதுவும் கூட பிடிக்கலாம்... -

சகியின் "பைராகி" - முன்ஜென்மம் சொல்லும் கற்பனை வரலாற்று நாவல்...

படிக்க தவறாதீர்கள்...

அவளின் கேள்வியில் அவன் புருவங்கள் உயர,

“நான் உங்களுக்கு ஒரு பையன் பெத்து தரமாட்டேன்னு சொன்னது, என் உடல்நிலையை மனசுல வச்சு சத்தியமா இல்லை… அப்படி எல்லாம் இருந்திருந்தா, தலையில ட்யூமர் வச்சிகிட்டு உங்களுக்கு ஒரு பிள்ளையை பெத்து தரணும்னு நான் நினைச்சிருக்கமாட்டேனே…”

அவள் வார்த்தையில் அதிர்ந்து போனவன், அவளருகில் வந்தான்…

“சரயூ… நீ என்ன சொல்லுற?... ட்யூமரா?... தலைவலின்னு தான சொல்லிட்டிருந்த?... ஏன் சரயூ எங்கிட்ட சொல்லலை?...”

அவன் மாற்றி மாற்றி கேள்வி கேட்கவும் தான் உறைத்தது அவளுக்கு… அவனுக்கு தெரியாமல் மறைத்து வைத்திருந்த உண்மையை அவனிடத்திலேயே கூறிவிட்டோம் என்று…

“சொல்லு சரயூ… ஏன் மறைச்ச எங்கிட்ட இருந்து?...”

“சொன்னா தேவை இல்லாம இதுவும் உங்களுக்கு ஒரு கஷ்டம்… ஏற்கனவே நான் ஒருத்தி உங்களுக்கு கஷ்டம் கொடுத்திட்டிருக்குறது போதாதா?... சொல்லுங்க…”

“அய்யோ சரயூ… ஏன் இப்படி எல்லாம் பேசுற?...”

“உண்மையை தாங்க நான் பேசுறேன்… என்னால தான உங்களுக்கு வீட்டுலயும் நிம்மதி இல்ல… வெளியேவும் நிம்மதி இல்ல… இதுல இந்த ட்யூமர் பத்தி சொல்லியிருந்தா, இன்னும் தேவை இல்லாத மனக்கஷ்டம் தான் உங்களுக்கு கிடைச்சிருக்கும்…”

“ப்ளீஸ் சரயூ… வார்த்தையால என்னை கொல்லாத….”

கெஞ்சும் பாவனையில் அவளிடத்தில் சொன்னவன்,

“டாக்டர் என்ன சொன்னாங்க?... ட்யூமர் சரி ஆகிடும்னு சொன்னாங்களா?... வேற எதும் ட்ரீட்மெண்ட் பண்ணனும்னு சொன்னாங்களா?.... சொல்லு சரயூ… கேட்குறேன்ல…”

படபடப்புடன் வினவ, அவள் அமைதியாய் இருந்தாள்…

அவள் அமைதியைக்கண்டவன் மனம் ஒரு நிலையில் இல்லாது போக, அவளின் கைப்பிடித்தான் வெகு நாட்கள் கழித்து…

“வா சரயூ…”

“எங்க?”

“ஹாஸ்பிட்டலுக்கு…”

“எதுக்கு?...”

“ப்ளீஸ்… எங்கிட்ட எதுவும் கேட்காத… வா….”

“பயப்படாதீங்க… என் ட்யூமர் என் உயிரை பறிச்சிடாது… சின்னதா தான் இருக்கு… பயப்படவேண்டாம், டேப்லட்டிலேயே கரைச்சிடலாம்னும் டாக்டர் சொன்னாங்க…”

அவள் சொன்னதும், வேதனையுடன் அவள் முகத்தைப் பார்த்தவன்,

“ஏண்டி இத்தனை நாள் எங்கிட்ட சொல்லலை?..” எனக்கேட்க அவள் பதில் பேசவில்லை…

“பொண்டாட்டியோட உடல்நிலையை கூட தெரிஞ்சிக்காம இத்தனை நாள் இருந்திருக்கேன்னு நினைக்கும்போது வேதனையா இருக்கு சரயூ… சொல்லியிருந்தாலும் இவன் டார்ச்சர் குறைஞ்சிருக்காதுன்னு நினைச்சு தான் சொல்லாம இருந்தியா சரயூ?... சொல்லு?...”

“……………………….”

“நான் பட்ட காயங்கள், என்னை எவ்வளவு மூர்க்கத்தனமா நடக்க வச்சிருக்குன்னு இப்போ எனக்கு புரியுது சரயூ……” என்றவனுக்கு அவன் சந்தித்த நிகழ்வுகள் கண் முன்னே நிழலாடியது துயரமென…

தொடரும்

Episode # 26

Episode # 28

{kunena_discuss:995}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.