(Reading time: 35 - 69 minutes)

தற்காக வெஜிடபிள் ஃப்ரைட் நூடுல்ஸ், மஸ்ரூம் பட்டர் மசாலா…..எக் ஸ்டஃப்ட் பரோட்டா…. என  இவள் கிட்சனை கட்டி மேய்த்துக் கொண்டிருந்த நேரம்….. விவன் தன் பின்னால் வெகு அருகில் நிற்பதை திடுமென உணர்ந்தாள்…. நாசியில் அவன் வாசம்…

மாய நதி ப்ராவகம் மங்கை அவள் பின்புலமெங்கும்….

இப்போது இவள் வல தோளில் உருகியது மிக மெல்லிய பரபரப்பு…..  அவன் அத்தோளில் படாமல் அதற்கு சற்று மேலாய் தலை நீட்டி இவள் அடுப்பில் செய்து கொண்டிருக்கும் வேலையை கண்டதன் உடனடி விளைவு அது…

அவனோ அதே நேரம் “ஹே இதென்ன இவ்ளவு வேலை……?” என  அப்ஜெக்க்ஷனாய் ஆரம்பித்து….. “ஆனா இந்த டைம்ல  வித விதமா சாப்ட தோணும்னு சொல்வாங்கல்ல…” என  ரியலைஷேஷனில் டோன் இறங்கி…..”இப்ப போய் வேலைக்கு ஆள் வேண்டாம்ன்னு சொல்ல வேண்டியதாயிடுச்சே…” என ஃபீல் பண்ணினான்…

தொடர்புடையவை: உங்களுக்கு இதுவும் கூட பிடிக்கலாம்... -

புவனேஸ்வரியின் "யார் மீட்டிடும் வீணை இது..." - காதல் கலந்த தொடர்கதை...

படிக்க தவறாதீர்கள்..

இந்த முறை இவளுக்குள்  சின்னதாய் ஒரு ஏமாற்ற அலை….. ‘இவ அவனுக்காக செய்றது கூட குழந்தை ப்ரெக்னென்சின்னு அந்த கோணத்துல மட்டும்தான் அவனுக்கு புரியுது….. என்ன இருந்தாலும் குழந்தைதான் அவனுக்கு முக்கியம்….. இவ இல்லையே….’

அவ்வளவுதான் பரோட்டாவை தவாவில் பிரட்டிப் போடுவதெற்கென கையில் வைத்திருந்த தோசை கரண்டியை ஓங்கியபடி சரேலென திரும்பி….. “தலையிலேயே கொத்த போறேன்… எத்தன டைம் சொல்லி இருக்கேன் நான் பேஷண்ட் இல்லன்னு… என்னப் பத்தி நீங்க ஒன்னும் பாதர் பண்ணிக்க வேண்டாம்” என விளையாட்டாய் எகிறினாள்….

சொன்னது விளையாட்டுதான் என்றாலும்….  ‘என்ன பத்தி நீங்க ஒன்னும் பாதர் பண்ணிக்க வேண்டாம்’ என்பது அவளது ஏக்கத்தின் ரோஷம்…. எதற்கு ஏங்குகிறாள் எனபதுதான் அவளுக்கு முழுதாய் புரியவில்லை….

இதற்குள்  “மம்மி…..இந்த கரண்டி ராட்ஷசி எப்பவும் என் தலையவே டார்கட் பண்ணுது….” என ‘டீச்சர் இவ என் பென்சில பிடிங்கிட்டா’ என்ற டோனில் அவன் சவ்ண்ட் விட……அதில் கொஞ்சமாய் ஏக்கம் கலைந்தவள்….

அடுத்து அவன் தன் தலை முடியைக் கோதிக்கொண்டதிலும்…… அடுத்தும் “ஸ்பெஷல் டின்னர் ஸ்பெஷலான ப்ளேஸ்ல… “ என சொல்லி,  வீட்டு மொட்டை மாடியில் இவளோடு அமர்ந்து கதை பேசி கலாய்த்து ரசித்து சாப்பிட்டதிலும் மொத்தமாகவே கலைந்து போனாள்… கரைந்தும் தான்.

அதிலும் “உனக்கு ரொம்ப நல்லா சமைக்க வருது ரியு….. யார்ட்ட பழகின…..உன் அக்காட்டயா…..நிஜமாவே இவ்ளவு டேஸ்ட்டா நான் சாப்ட்டது இல்ல…” என யதார்த்தமாய் அவன் பாராட்டியபோது விங் இல்லாமல் விண்ணைத்தாண்டி பறந்தாள்….

 இதே மூடில்தான் அவள் நைட் தூங்கச் சென்றதும்….

இதில் படுக்கும் முன் அவளது ப்ராகரஸ் ரிப்போர்ட்ஸ் சிக்னேச்சர்களை மீண்டுமாய் ஒரு முறை எடுத்துப் பார்த்துக் கொண்டவள் கண்ணில் படுகிறது அதனோடு சேர்ந்து இருக்கும் விவனது கார்ட்ஸும்…..

ஒரு கணம் அவைகளைப் பார்க்கத் தோன்றுகிறது இவளுக்கு…… அதே நேரம் அவனது ரிசல்ட் கோல்மால் வேறு நியாபகம் வந்து தடுக்கிறது…..பார்த்தா மூட் அவ்ட் ஆகுமோ…??!! 

கார்ட்ஸை எடுத்த கப்போர்டில் திரும்பவும் வைத்தவள் வந்து தன் பெட்டில் அமர்ந்தாள்….

‘அவன் பெரியப்பா கடைய இவன் நடத்தனும்ன்ற மாதிரி ஆரம்பத்தில இருந்தே கடையிலேயே இவன விட்டுட்டு……இவன் படிச்சானா…. படிக்கலையான்னு எதையும் கண்டுக்காம…..பின்ன எதுக்கு ஃபைனல் எக்‌ஸாமில் மட்டும் அவ்ளவு தில்லுமுல்லு செய்ய ஒத்துக்கிட்டாராம்….?’ என்று இப்போது ஒரு கேள்வி தோன்றுகிறது ரியாவுக்கு….

பெட்டிலிருந்து எழுந்து கொண்டாள் ரியா….

“சிங்கிள் இயர்னிங்…..எஜுகேஷன் டிபார்ட்மென்ட் ப்ரைபரி விஷயத்தில் ரொம்பவே கரப்ட்னாலும்  பெரியப்பா straight forward…..சம்பளம் தவிர வேற எந்த இன்கம்மும் கிடையாது…” இதெல்லாம் இன்னைக்கு பேசுறப்ப அப்பப்ப விவன் தன் பெரியப்பா பத்தி சொன்னது…… அப்டின்னா?...

இப்போது மீண்டுமாய் அவன் கார்ட்ஸை கையில் எடுத்திருந்தாள் இவள்….

யோசித்தபடியே  அவைகளை திறந்து பார்த்தாள் ரியா….. அவன் இன்சின்சியாரிட்டியைப் பார்த்து முன்பு நினைத்து வைத்திருந்தது போல் விவன் பார்டரில் எல்லாம் பாஸ் ஆகி இருக்கவில்லை….. அதே நேரம் பர்ஸ்ட் மார்க் வாங்கும் அளவு பக்கத்திலும் இல்லை…. எல்லாத்திலும் ஆவரேஜாய் 75% ரேஞ்சில் இருந்தான்….

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.