(Reading time: 35 - 69 minutes)

வ்வாறு அப்பெண் பணிந்து விழவும் சாடரென நிற்கிறது சிலம்ப சண்டை என்றால்…...இங்கோ ருயம்மாவிற்கு அப்பெண் காலைப் பற்றி கதறிய விதத்தில் மனம் நடுங்கிப் போயிற்று…..

“மனிதருக்கு மனிதர் இதென்ன….நானும் உன்னைப் போல் சாமானிய மானுட பிறவிதான்…” என்றபடி இப்பொழுது ருயம்மா அப் பெண்ணை கைப் பற்றி எழுப்ப முயல…..

அதற்குள் சண்டை நின்றிருந்த காரணத்தால் தன் மாமனிடம் ஓடிய அந்தப் பெண்….. அவனது இரு தோள்களைப் பற்றி உலுக்கி….  “மாமா அது நமது வேந்தர்….. பொன்னி பெருமான்…… மானகவசர்….. பராக்கிரம சக்கரவர்த்திகள்….” என திணற திணற படபடத்தாள்…

அதீத உணர்வுக்குட்பட்டவளாய் தன்னை உலுக்கிக் கொண்டிருக்கும் தன்னவளின் கரத்தை இப்போது தன் வல கரத்தால் பற்றி நிறுத்திய அவ்வாலிபனோ…..

 அவள்  சொற்களின் பொருள் அவன் இதயத்தை தாண்டி அறிவிலும் பட்டதால்….எதிரில் நிற்பவரை தீவிரமாய்ப் பார்த்தான்…..

அதே நேரம் அவனுக்கு விஷயத்தை விளக்கிவிடும் வகையில்  பாண்டிய வேந்தனின் தோள் நோக்கி விரல் நீட்டுகிறாள் அவனது காதல் பைங்கிளி…..

தொடர்புடையவை: உங்களுக்கு இதுவும் கூட பிடிக்கலாம்... -

சித்ராவின் "பச்சைக் கிளிகள் தோளோடு..." - காதல் கலந்த கிராமத்து குடும்பக் கதை...

படிக்க தவறாதீர்கள்..

அங்கு மன்னன் தன் மேலாடையாக தொங்கவிட்டிருந்த பருத்தி துகில் சற்றாய் சரிந்திருக்க….அதில் காணக் கிடைக்கின்றன அந்த எழுத்துக்கள்…… ‘அருஞ்சுனை’….. தன் தங்கையின் பெயரை பச்சை குத்தி இருந்தான் பராக்கிரமன் …..

இப்படி ஒரு செய்தியை அவ் வாலிபனுமே கேள்வியுற்றிருந்ததால்…..அதை அவன்தான் தன்னவளிடமும் கூறி இருந்ததால்….

அதை கண்டுகொள்ளவும்….நம்பியும் நம்பாமலுமாய் ஒரு வித திக்பிரமிப்போடு தன் தலையிலிருந்த முண்டாசை கையில் உருவி எடுத்துக் கொண்டு….. மாறு வேடத்தில் நின்றிருந்த மன்னவனை இரு கைகூப்பி சிரம் தாழ்த்தி வணங்கினான் அவ்விளைஞன்.

அவ் வணக்கத்தில் மரியாதைப் பணிவு இருந்ததே தவிர  பயம் ஏதுமில்லை என்பதை கவனித்தாள் ருயம்மா…. அதுவும் அவளக்கு பராக்கிரமன் மீதே மரியாதையை உண்டு செய்கிறது….

நாடாளும் வேந்தன் முன் அவன் பிரஜைகள் நிற்கும் முறை கூட அவ்வேந்தன் தன் மக்களை எவ்வாறு நடத்துகிறான் என்பதை வெளிப்படுத்தும்தானே…..

பூரிப்பும் கம்பீரமுமாய் பராகிரமனோ இப்போது “என் பிள்ளைகள் விழித்திருக்கிறார்கள் என்பது இத் தகப்பனுக்கு எத்தனை உவகையாய் இருக்கின்றது தெரியுமா? “ என்றபடி

அவ் வாலிபனின்  கூப்பிய இரு கரங்களையும் தன் ஒற்றைக் கையால் இணைத்து பிடித்துக் கொண்டவன்…. அடுத்த கரத்தால் அவ்விளைஞனை பாராட்டும் வகையாக அவன் மார்பில் ஒரு தட்டு ..அடுத்து அவன் தோளில்……பின் அவனை தோளோடு அணைத்துக் கொண்டான்…...

அவ்விளைஞனுக்கு பராக்கிரமரைவிட ஓரிரு அகவைகள் குறைவாய் இருக்கும்தான்…… ஆனாலும் அவனை மகனென்று தன்னை தந்தை ஸ்தானத்தில் நிறுத்தி பராக்கிரமன் சொன்ன விதம் ருயம்மாவுக்குள்ளும் உணர்வு ஊற்றுகளை பீரிட செய்கின்றது….

உண்மைதானே அரசன் மொத்த குடிக்கும் தகப்பன்தானே…. என்று நெகிழ்கிறது இவள் நினைவு….

அதே நேரம் மானகவசன் அவ்வாலிபனின் கையிலிருந்த  முண்டாசின் வஸ்திரத்தை எடுத்து அவ்வாலிபனின் தலையில் முறைப்படி கட்டிக்கொண்டே..…. “பாரசீக ஷிஷ்பர் வரை ஞானம்…” என அவனின் அறிவுக் கூர்மையை பாராட்ட….. அது எத்தகைய அங்கீகாரத்தையும் பூரண மன நிறைவையும் குறிக்கும் செயல் என்பது ருயம்மாவிற்கு விளக்காமலே புரிகிறது….

பூரிப்பில் விம்மியது அவள் இதயம்……

“அது வேந்தே…..சாத்து வணிகத்தில் சந்தை கூடுமிடங்களில் வெவ்வேறு பகுதி மக்களை சந்திக்கிறோமே…..அப்போது அவரவர்க்கு தெரிந்த அரசகாரியங்களை குறிந்து கலந்து கொள்வோம்…… அஃதோடு துறைமுக நகரத்தில் கடலாடும் வணிகர்கள் வாயிலாக அறிய முடிந்த செய்திகளும் ஏராளம்…” பெருமையின் சாயல் எதுவுமின்றி  விளக்கம் சொன்னான் அவ்வாலிபன்…

“நல்லது…” இவ்வாறு பாராட்டினான் பராக்கிரமன்….. பின் அவ்விளைஞனின் காதலியைப் பார்த்து….. “பெண்ணுக்கு கல்வி கொடுக்கப்பட்டிறுக்கிறது…” என்றான் அடுத்த பாராட்டாக…

இப்போது சற்றாய் நெளிந்த அப்பெண்ணோ…..”மாமன்தான் கொஞ்சமாய் கற்றுக் கொடுத்தார்” என அதற்கான பெருமையையும் அவளது மாமனுக்கே அளித்தாள்…

அக்கணம் மானகவசன் இதயத்தில் உதிக்கிறது அத்திட்டம்….. சற்றே விஷமமான திட்டம்….  ஆனால் சர்வ நிச்சயமாய் நன்மை பயக்கும் என அவனுக்கு தெரியும்…….. விளையாடிப் பார்க்க முடிவெடுத்தான் விந்தன் என இயற்பெயர் கொண்ட விந்தையான பராகிரமன்….

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.