(Reading time: 35 - 69 minutes)

+2 ஃபைனல் எக்‌ஸாமில் எதாவது லக்ல…..ஒரு பேப்பர்ல 95  ஏன் சென்டம் வந்திருந்தா கூட ஒத்துக்கிட முடியும்…..அதெப்டி ஒன்னுவிடாம எல்லா பேப்பருக்கும் இவனுக்கு லக் அடிச்சு ஃபர்ஸ்ட் ரேங்க் வருமாம்….. ?? மனம்  அதுவாய் அனலைஸ் செய்ய இறங்க….

இவள் ஸ்கூல் வேல்யூவேஷன் கொள்கையே ஸ்கூல்ல வாங்குறதைவிட +2 எக்‌ஸாமில் இவங்க  ஸ்டூடண்ட்ஸ் மினிமம் 15% ஆவது அதிகமா ஸ்கோர் செய்யனும் என்பதுதான்….

ஸ்கூல் டெஸ்ட்ல என்னமோ அவங்க சொத்த எடுத்து நமக்கு கொடுக்ற மாதிரி அப்டித்தான் கரும்பி கரும்பி மார்க் போடுவாங்க….. எதுக்குமே ஃபுல் மார்க் கொடுக்க மாட்டாங்க….எப்படி உயிரக் கொடுத்து படிச்சு எழுதினாலும் 85% ஐ எட்றதே பகல் கனாதான்…. என்பது ஸ்லோவாய் நியாபகம் வருகிறது ரியாவுக்கு……..

‘அப்டின்னு பார்த்தால் கூட விவன் +2 ஃபைனல்ஸ்ல 90% வரை வாங்கி இருந்தா கூட ஓக்கே…… ஆனா எல்லாத்திலும் சென்டம் ரேஞ்ச்ல வந்தால்ல ஃபர்ஸ்ட் மார்க் கிடைக்கும்…..’ கால்குலேஷன் செய்த மைன்ட் கருத்து தெரிவிக்க

தொடர்புடையவை: உங்களுக்கு இதுவும் கூட பிடிக்கலாம்... -

தேவியின் "பாயும் மழை நீயே..." - காதல் கலந்த தொடர்கதை...

படிக்க தவறாதீர்கள்..

‘ஓகே இதுக்கு மேல இதப் பத்தி யோசிக்கிறது நல்லதுக்கு இல்ல…. எதோ நடந்தது நடந்து முடிஞ்சாச்சு….. எப்படியும் அவன் ஒரிஜினல் ஸ்கோரே not a bad one’ என்ற நினைவுடன் இப்போது  கார்ட்ஸை வைக்க வேண்டிய இடத்தில் வைத்துவிட்டு வந்து படுக்கையில் படுத்துக் கொண்டாள்….

சற்று நேரத்தில் மெல்ல தூக்கத்திற்குள் தொலைய துவங்கும் நேரம் சட்டென நியாபகம் வருகிறது இவளுக்கு..

‘அடிக்கடி ஹோம்வொர்க் செய்யாம வந்தா பெனால்ட்டியா ஒவ்வொரு பேப்பர்க்கும் 10% மார்க் குறைக்கனும்னு ஒரு ரூல் உண்டு ஸ்கூல்ல….’

கபக் என தூக்கம் கலைய டபக் என  எழுந்து உட்கார்ந்தாள் ரியா…..

‘அப்டின்னா எல்லா வருஷமும் எல்லா பரீட்சையிலும் இவனுக்கு இன்வேரியபிளா 10% கட் செய்துறுப்பாங்க….!!!!!!! அதான் ரிப்போர்ட் கார்ட்ல மார்க் இப்டி இருக்கு….. ஸ்கூல்லயும் bright ஸ்டூடண்ட்னு நேம் இருந்திருக்காது…... ஆனா +2  ஃபைனல் எக்‌ஸாமில் அப்டி மார்க் கட் பண்ண முடியாதே..’

‘டேய் நிஜமாவே ஃபர்ஸ்ட் மார்க்தான் வாங்கினியா நீ…..?!!!!!!!!!!!!! உழுந்து புரண்டு படிச்சே எனக்கு வரலை….ஓடி ஓடியே வாங்கிட்டியாடா நீ…. !!!!!!!!!!’

ஒரு பக்கம் கொஞ்சமே கொஞ்சம் மனம் சிணுங்கினாலும்….விம்மி வெடித்துக் கொண்டு வருகிறது ஒரு சந்தோஷம் இவளுக்கு….. நிஜமாவே அவன் ஃப்ராடு இல்ல…..

‘இனிமே கண்டிப்பா நம்ம பிள்ளைங்களுக்கு நோ ஹோம்வொர்க்…..’ குறும்பும் சிரிப்புமாய் வீங்கிய பெருமிதமாய் இப்படி நினைப்புடன்தான் தூங்கப் போனாள் அன்று ரியா…..

எத்தனையோ எடை இழந்திருந்தது அவள் இதயம்……

ங்கு கனவில்…..

பராக்கிரமரால் தரையில் அமர வைக்கப்பட்ட ருயம்மா தலையை மட்டுமாய் நிமிர்த்திப் பார்க்க….அவளுக்கு மேலாய் சுற்றி சுழன்று கொண்டிருந்தன மூன்று கழிகள்……

மானகவசரின் கையிலிருந்த இரண்டும் அந்த இளைஞனின் கையிலிருந்த ஒன்றுமாய்…. மின்னல் தோற்றோடும் வேகத்தில் விர் விரென அவை…

நிமிர்ந்து பார்த்தவளுக்கு அக்கழிகளை தாண்டியும் கண்ணில் படும் மற்றொரு விஷயம் பாண்டிய வேந்தனின் வதனம்…..

நிச்சயமாய் தற்காப்புக்கோ….தண்டிக்கவோ போராடும் பாவம் அதில் இல்லை….. அங்கு இருப்பது மெல்லிய கர்வம்…. தன் மகவை சான்றோன் என கேட்கும் போதும்…… இவன் தந்தை என் நோற்றான் கொல் என கேள்வியுறும் போதும் வரும்  பெருமித கர்வம் அது….

அதோடு மகனை போருக்கு பழக்குவிக்கும் தந்தையின் வீர வாத்சல்யமும் அவன் முழு சரீரத்திலுமே விரவி வியாப்பித்திருப்பதாய் தோன்றுகிறது இவளுக்கு…. 

அதில் மானகவசனின் மனம் அப்படியே புரிய…..அதே கணம் இவளை கண்ணுற்ற அவனும்….எந்த வகையிலும் இச் சண்டைக்குள் வராதே எனும் வகையாய் கண் சாடை செய்ய…. சிலம்பங்களின் வட்டத்திலிருந்து வெளியே வர துவங்கினாள் ருயம்மா….

போரிட்டுக் கொண்டிருந்த அந்த இளைஞன் இப்போது தன் கவனத்தை இவள் மீதுமாயும் திருப்ப முயல…… அவன் கழி தன்னை தாக்கிவிடாதவாறு   லாவகமாக வெளியில் வந்த ருயம்மா…..  சண்டையிடும் இருவரையும் வெகுவாக விலகிப் போய் நின்று கொள்கிறாள்…

நடைபெறுவதை வேடிக்கைப் பார்க்கவும் செய்கின்றாள்…

ருயம்மா சிலம்ப வட்டத்தை விட்டு வெளியேறவும், தற்பாதுகாப்பாய் தன் மாமனுக்கு பின்னால் அவன் கம்பு சுழற்ற தேவையான இடைவெளியுடன் நின்று கொண்ட அந்த இளைஞனின் காதல் பெண்ணோ…… இப்போது தன் கவனத்தை  ருயம்மா மீதும் பராக்கிரமர் மீதுமாய் மாறி மாறி செலுத்திக் கொண்டிருந்தவள்…..

ஒருகட்டத்தில் “பெருமானே…. நீர்தான் பாண்டிய வேந்தரை எங்களை  மன்னிக்க சொல்ல வேண்டும்” என கூவியபடி ருயம்மாவிடம் வேக வேகமாக ஓடி வந்து…. இவளின் காலடியில் விழுந்து பாதங்களைப் பற்றியும் கொண்டாள்….

சண்டையாடிக் கொண்டிருக்கும் வேந்தனின் காலை பிடித்தால்…..அந்நேர கவன பிசகில் யார் கழி யாரை தாக்குமோ….? இவரோ மன்னரின் உடன் வந்திருப்பவர்…. ஆகையால்  நிச்சயம் அவருக்கு நெருங்கியவராய் இருப்பார்…. அதோடு தன் மீது கழி வைத்த போது கூட சீறாத வேந்தன்….இந்த பெருமானை சீண்டவும்தானே கழி எடுத்தார்…? ஆக இவர் சொன்னால் மன்னர் சினம் தணியும்…. இந்த பெருமானும் கூட நல்லவர்தான்….. சினத்தில் கூட மாமனின் கழியை முறித்தாரே தவிர தன் இடையிலிருக்கும் குறுவாளை தொடவேயில்லை…. என அத்தனை வகை நினைவுகளுடன் விரைந்து வந்து விழுந்து கிடந்தாள் அந்த காதலி….

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.