(Reading time: 35 - 69 minutes)

துவும் சிறகொடிந்த கிள்ளை போல் ஒரு சிறு பெண் துடிப்பதை பார்க்க எப்படி இருக்கிறதாம்…?

ஆடவர்கள் அவர்கள் கொள்கையென ஆயிரம் வைத்துக் கொள்வார்கள்…… காதலுற்ற பெண்ணின் வலியென அவர்களுக்கு என்ன தெரியும்….?

பொன்னிவச்சான் இப்போது அருகிலிருந்த நீர் நிலையிலிருந்து நீர் அள்ளிவர ஓட….

பாண்டிய பராக்கிரமனை திரும்பி ஒரு பார்வை பார்த்தாள் ருயம்மா தேவி….  “வேந்தே  தாங்கள் செல்லுங்கள்…. பணி முடியவும் நானே வர வேண்டிய இடம் வந்துவிடுவேன்….” இது அவளது இரண்டாம் கட்டளையோ…?

இப்போது வியப்புற்று பார்ப்பது பாண்டிய மன்னனின் முறை….. சற்று விஷமமாயும்…

தொடர்புடையவை: உங்களுக்கு இதுவும் கூட பிடிக்கலாம்... -

புவனேஸ்வரியின் "மூங்கில் குழலானதே" - காதல் கலந்த குடும்ப தொடர்...

படிக்க தவறாதீர்கள்..

“உமது பாதுகாவல் என் பிராதன கடமை “ மறுத்தான் அவன்.

“அப்படியானால் காவலனாய் கூட வாரும்” காவலனாய் என்ற பதத்தில் அவள் கொடுத்த அழுத்தம்….. காவலனாய் மட்டும் வாரும் என்கிறதோ…?

 இதழில்  மறைந்திருந்த சிறு முறுவலுடன் அவளின் கட்டளைக்கு பணிய துவங்கினான் பாண்டிய வேந்தன்……

அடுத்து பொன்னிவச்சான் முதலுதவிகள் செய்ய ஒருவாறு எழுந்து அமர்ந்தாள் மஞ்சிகை…. இன்னுமே அழுகையில் வெடித்துக் கொண்டு போகிறது அவளது வதனம்…

“மஞ்சிகை உன் மாமனுடன்தான் உனக்கு திருமணம்….அதற்கு நான் பொறுப்பு…. அதுவரைக்கும் நான் சொல்வதை மாத்திரம் நீ செய்ய வேண்டும்….” ஆளுமை குரலில் அப்படி ஒரு வாக்குறுதி அளித்து அவளை தேற்றினாள் காகதீய இளவரசி…

அவ் வார்த்தைகள் எரிந்து கொண்டிருக்கும் அவள் இதயத்தில் தேன் மாரி பொழிந்தாலும் திக்பிரமித்து விழித்தாள் மஞ்சிகை…..மன்னர் முன்நிலையில் அவரது தீர்ப்புக்கு எதிராக இப்படி ஒரு வாக்குறுதியா….?!!!!

தன் வேந்தனின் வதனத்தை யாசக பார்வை பார்த்தாள் இப்பொழுது…… பாலையின் தாகம் அவள் விழிகளில்…..அவர் என்ன சொல்வாரோ?!!

“என் இறுதித்தீர்ப்பை மீற பாண்டியத்தில் எனக்கே அனுமதி கிடையாது…” வந்த பராக்கிரமனின் வார்த்தைகளில் மட்டுமல்ல அவரது வதனத்திலும் கூட கடுமையும் கண்டமும் நிறைந்தே இருந்தன…

இப்போது “மன்னிக்க வேண்டும் மன்னா…….” என்றபடி மகா பவ்யமாய் மானகவசனை நோக்கி கரம் கூப்பி சிரம் தாழ்ந்து பணிந்து நின்றது ருயம்மாதேவி…..

 “தங்களின் தீர்ப்பை மீறும்படியாய்  நான் எவ்வாக்குறுதியும் அளிக்கவில்லை வேந்தே…… சர்வ நிச்சயமாய் அரச தீர்ப்புக்குட்பட்டுதான் இத் திருமணம் நடைபெறும்…. பிரஜைகளை ஒரு போதும் அரச தீர்ப்பை மீறும்படி செய்யமாட்டேன் இது உறுதி….” ஒருவிதமான உட்பொருள் பொதிந்த அமர்ந்த குரலில் இப்படியாயும் ஒரு வாக்குறுதியை வழங்கினாள் பராக்கிரமனுக்கு நிச்சயிக்கபட்டிருப்பவள்….

அச் செயலில் ரசனையோடான ஒரு சிறு புன்னகையை தன் இதழில் தவழவிட்டுக் கொண்டான் மானகவசன்…. “அது உண்மை எனும் பட்சத்தில் எனக்கேதும் ஆட்சேபணை இல்லை” என ருயம்மாவுக்கு அனுமதியும் வழங்கினான் அவன்….

“வச்சனாரே…… அவர் என் உறவினர்…..எனக்கு தரும் அதே கணம் மரியாதையை அவருக்கும் தந்து…அவர் கேட்டுக் கொள்வதை செய்து கொடும்….. அனைத்தையும் கண்காணிக்க நானும் உடன் வருவேன்தான்….ஆயினும் என்னை மன்னர் என நீங்கள் யாரும் வெளிப்படுத்த கூடாது….”  என பொன்னிவச்சானுக்கும் கட்டளையிட்டான்…

மஞ்சிகைக்கு நடக்கும் காரியங்களின் ஆதி அந்தம் புரியவில்லை என்றாலும் வேந்தன் தன் உடன் வந்திருக்கும் பெருமானை ஆட்சேபிக்கவில்லை என்றானதும் தன் விவாஹம் நடந்துவிடும் என தோன்ற துவங்குகிறது அவளுக்கு..…

நடைபெறும் அனைத்தையும் உன்னிப்பாய் கவனித்துக்கொண்டிருக்கும் பொன்னிவச்சானுக்கும் எதுவோ புரிந்தும் புரியாததுமாய் ஒருநிலை…

தன் நாடாள்பவனின் தற்போதைய கட்டளையையும் சிரம் தாழ்த்தி ஏற்றுக் கொண்டான் அவன்….

“நன்றி வேந்தரே…” என பராக்கிரமனின் இச்  செயலுக்கும் நன்றி கூறிய ருயம்மாதேவியோ

“மேற்கொண்டு காலத்தை விரயமாக்க வேண்டாம் வச்சனாரே…. மஞ்சிகையை உடனடியாக அவளது இல்லத்தில் பத்திரமாய் சேர்க்க வேண்டும்…. அடுத்ததாய் நாம் இங்கு வந்திருக்கும் அரையர் வைரவனை  சந்திக்க வேண்டும்…” என மளமளவென தன் திட்டத்தையும் விவரிக்க துவங்கினாள்…..

இதில் இடையிட்டது மஞ்சிகை…..

“நான் செல்லக்கிளியுடன் சென்றுகொள்வேன் பெருமானே….அது அனைத்து வகையிலும் பாதுகாப்பான செயல்….” என்றபடி ருயம்மாவையும் மற்ற இருவரையும் மாறி மாறி பார்த்தாள் அவள்…

தன் தகப்பனுக்கு தான் மாமனை சந்திக்க வந்த கதை தெரிய கூடாதென அவள் எண்ணுவதும் புரிகிறது…

திருமணம் வரையிலும் ஏதும் புது  இடையூறுகள் தோன்றாதிருப்பது அதிஅவசியம் என ருயம்மாவும் எண்ணினாலும்…..அவளுக்கு இத்தனை இரவில் இரு இளம்பெண்களை தனியாய் அனுப்புவதா என்பதே பிரதான அக்கறையாய் இருக்கிறது….

இதில் பாண்டிய பராக்கிரமன் வேறு இவளை ஒருவித பார்வை பார்த்தான்…. மகள் தகப்பனை ஏமாற்ற நீ உடந்தையா என்ற வகை பார்வை அது…

இதற்குள்…. “செல்லக்கிளி இருக்கும்போது பாதுகாப்புக்கு பஞ்சமில்லை…” என தானும் மஞ்சிகையின் சொற்களை ஆதரித்தான் அவளது மாமன் பொன்னிவச்சான்….

“அதோடு செல்லக்கிளியை இங்கே  வரசொல் கனி” தன்னவளுக்கு அறிவுறுத்தவும் செய்தான் அவன்…

“செல்லக்கிளி…”!!! என்ற மஞ்சிகையின் அழைப்பினை தொடர்ந்து……சில சர சர சப்தத்திற்குப் பின் கண்ணில் கிடைக்கிறது அது…… ஆம் அதுவேதான்…..

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.