(Reading time: 35 - 69 minutes)

ங்கி உயர்ந்த இரண்டு கொம்புகளும்…..திமிறி நிற்கும் திமிலுமாய்….ராஜ கம்பீரத்தின் இலக்கணமாய் ஓடி வருகிறது செல்லக்கிளி என்னும் காளை…..

சுற்றி நின்ற ஒவ்வொருவரையும் தலை திருப்பி ஒரு பார்வை பார்த்துக் கொண்ட அது…..இப்போது நடந்து சென்று மஞ்சிகையை உரசாத குறையாய் அவள் அருகில் சென்று நிற்கிறது…

அது வந்த வேகத்தையும் அதன் சீறும் சுவாசத்தையும் கொம்பையும் கோலத்தையும் கண்டதும் ஒரு அடி தானாய் பின் வாங்கிய ருயம்மா…..அது மஞ்சிகை அருகில் சென்று நிற்பதை காணும்போதுதான் அதையும் கவனித்தாள்…..

தன் கயிறை அறுத்தெறிந்து கொண்டு வந்திருக்கிறது அது…..  ஆனால் அதுபற்றி கேள்வி ஏதும் எழுப்பும் முன் மஞ்சிகையே விளக்கமும் சொல்லிவிட்டாள்…

“நான் அழைத்தால் மட்டும் கட்டி இருந்தாலும் இப்படி அறுத்தெறிந்து கொண்டு வந்துவிடும்…..”

தொடர்புடையவை: உங்களுக்கு இதுவும் கூட பிடிக்கலாம்... -

மீராவின் "புத்தம் புது காலை..." - காதல் கலந்த குடும்ப தொடர்....

படிக்க தவறாதீர்கள்..

“ஈன்ற முதல்நாளிலிருந்து அவளது பராமரிப்பில்தான் வளர்ந்து வருவதால் அவளுக்கு எதிராய் யாரையும் நெருங்கவும் அனுமதிக்காது……” இது பொன்னிவச்சான் சொல்லிய தகவல்…

ஆக அடுத்து மஞ்சிகை அவளது இல்லத்திற்கு செல்லக்கிளியுடன் கிளம்ப…. ருயம்மா தேவி பொன்னிவச்சான் மற்றும் மானகவசர்  புடை சூழ சந்திக்க சென்றது அரையர் வைரவனை.

அரையரை இரு நாழிகை முன்பாக ஊரவை மன்றதில் சந்தித்தேன் என்ற பொன்னிவச்சான்தான் வைரவனை சந்திக்க வழி காட்டியதும்.

அரையர் என்பவர் பாண்டியர்களின் உள்ளாட்சி அமைப்பில் ஒரு முக்கிய பதவி என்றும்…… நாட்டின் ஒவ்வொரு பகுதிக்கும் ஒரு அரையர் மன்னரால் நியமிக்கபடுவார் என்றும்….. அவர் தன் அதிகாரத்துக்குட்பட்ட பகுதி முழுவதையும் பயணாமாக சுத்தி வந்து….. அங்குள்ள ஒவ்வொரு ஊரிலும் மக்களை சந்தித்து….. அவர்கள் வழக்குகளை விசாரித்து நீதி வழங்குவார் என்றும் அறிந்திருந்த ருயம்மா தேவி….  அந்த அரையர் வழியாகவே இத் திருமணத்தை நடத்த திட்டமிட்டாள்.

மானகவசர் இவளது திட்டம் என்னவென எதுவும் கேட்கவில்லை…..பொன்னிவச்சானுக்கோ  மன்னரின் தீர்ப்பை மிஞ்சிய அதிகாரம் அரையருக்கு கிடையாது என்பது நன்றாக தெரியுமாதலால்…. இந்த மன்னரின் உறவினரிடம் அவரது திட்டத்தை குறித்து வினவ மனம் அலை மோதுகின்றது…..

ஆனால்  வேந்தன் உடன் வருகையில்…..வேந்தனின் தீர்ப்பை எதை கொண்டு உடைக்கப் போகிறீர் என எவ்வாறு கேட்பதாம்?

இப்படியான ஒரு சூழலில்தான் ருயம்மா தேவி அந்த அரையன் வைரவனை சென்று சந்தித்தாள்.

வைரவனிடம் “இவர் மன்னரின் உறவினர்….” என பொன்னிவச்சான் இவளை அறிமுகம் செய்து வைக்க….

ருயம்மா தேவியோ “இவர் என் காவலர்” என தயங்காமல் அறிமுகம் செய்தாள் பராக்கிரமனை. பராக்கிரமன் மேலிருந்த கோபம் ஒரு காரணம் என்றால்…. இதில் ஒரு உரிமையும் தொனிப்பதாக அவள் உணர ஒரு கலவை உணர்வில் கலக்கமேதுமின்றி அவள் அவ்வாறு அறிமுகம் செய்து கொண்டாள். பார்த்திருந்த பொன்னிவச்சான் சற்றாய் நடுங்கித்தான் போனான்.

ரகசிய ரசனையில் மனதுக்குள் சிரித்துக் கொண்டான்  மன்னவன்.

இப்போது பொன்னிவச்சான் மஞ்சிகை சார்பாக ஒரு வழக்கு தொடர்ந்தாள் காகதீய இளவரசி. பாண்டியத்தை பொறுத்தவரை தாய்மாமன் மகளை மணக்கும் முதல் உரிமை அவள் தாய்மாமன் மகனுக்குத்தானே உண்டு….அப்படி இருக்க மஞ்சிகையின் தகப்பனார் அதற்கு எதிர்ப்பு தெரிவிக்காமல் பரிசத்தை ஏற்க அவை ஆவண செய்ய வேண்டும். இதுதான் அவளது வழக்கு.

அதை விசாரித்த அரையனாரும்….உரிமை வகையில் பொன்னிவச்சானை தவிர்க்க மஞ்சிகையின் தகப்பனாருக்கு அதிகாரம் இல்லை…..அவர் தன் மகளுக்கு வேறு மணமகன் தேடினாலும் பொன்னிவச்சானின் அனுமதியும் அதற்கு அவசியம் என்றாலும்….. செங்கையன் பொன்னிவச்சானை விட வயதில் மூத்தவனாய் இருப்பதாலும்….அவனும் மஞ்சிகைக்கு இன்னொரு தாய்மாமன் மகன் என்பதாலும்….. அவனுக்கே மஞ்சிகை மணத்தை குறித்து முதல் உரிமை என விளக்கம் கொடுத்தார்.

ஆயினும்  பரிசம் போடுவதில் பொன்னிவச்சான் முந்திக் கொண்டான் எனில்…பரிசமிட்ட பெண்ணிற்கு மறு பரிசமிடவோ…. அவளை பெண் கேட்கவே வேறு யாருக்கும் உரிமை இல்லை….. அந்த வகையில் செங்கையன் கூட அடுத்து இவர்களது வாழ்வில் தலையிட முடியாது என்றும் வழி கூறினார்.

ஆனால் செங்கையன் எனும் இன்னொரு முறைமாமனும் இருக்கின்ற காரணத்தினால் …. பொன்னி வச்சானின் பரிசத்தை மஞ்சிகையின் தந்தை ஏற்பதும் மறுப்பதும் அவரது சுயவிருப்பம் என்றும் சுட்டிக் காட்டினார்.

இரண்டு கணம் இந்த காரியங்களை குறித்து தீவிரமாய் சிந்தித்துக் கொண்ட ருயம்மா தேவி  மறுநாள் மஞ்சிகை பொன்னிவச்சான் பரிசத்திற்கு அந்த அரையருக்கு அழைப்பு கொடுத்துவிட்டு கிளம்பிவிட்டாள்.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.