(Reading time: 35 - 69 minutes)

தன் துவக்கமாக இப்போது அவன் வதனத்தில் விரும்பாமையின் வெளிப்பாடு…… அப்பெண் சொல்வது உண்மைதானா என ஒரு விசாரணை பாவமாக  அவன்  அவ்வாலிபனை  நோக்கினான்…..

பராக்கிரமனின் பார்வை மாற்றத்தின் காரணம் ருயம்மாவுக்கு புரியவில்லை….. அந்த இளைஞனுக்கும் புரியவில்லை போலும்…..  பெண் கல்வியை மன்னன் ஏற்கவில்லையோ என்ற நினைவில், வேந்தனுக்கு ஏற்ற வகையில் விளக்கமாகவே விடையளிக்க முயன்றான் அவன்….

“ இடைவனப்பும் தோள்வனப்பும் ஈடில் வனப்பும்,

நடைவனப்பும் நாணின் வனப்பும் - புடைசால்,

கழுத்தின் வனப்பும் வனப்பல்ல, எண்ணோ(டு)

தொடர்புடையவை: உங்களுக்கு இதுவும் கூட பிடிக்கலாம்... -

சகியின் "மனதோர மழைச்சாரல் நீயாகினாய்" - காதல் கலந்த தொடர்கதை...

படிக்க தவறாதீர்கள்..

எழுத்தின் வனப்பே வனப்பு….. என நம் முன்னோர் ஆயிரமாயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே பெண்ணின் அழகென்பது அவளது சரீரத்தில் இல்லை……அவள் கற்கும் கல்வியில்தான் இருக்கிறது என சொல்லி சென்றிருக்கின்றனரே…..

பெண் கல்வியும் பெண் புலவர்களுமாய் இருந்ததுதானே பாண்டியம்….அது தானே தமிழர் பாரம்பரியமும்…. சற்று முன் ஏதோ சில மன்னர்கள் சுயலாபத்திற்காக ஒரு பிரிவினர்க்கு மட்டும் கல்வி  மற்ற  ஜாதி ஆண்களுக்கும், எந்தப் பெண்ணுக்கும் கல்வி கிடையாது என சட்டமியற்ற….. அதில்தானே வீழ்ந்தோம்…..

வீழ்ந்தவர்கள் ஆதிநிலைக்கு எழ வேண்டும் எனவே எண்ணுகிறேன்….. பராக்கிரம மன்னரும் பழையகால பாண்டிய முறைமைகளை மீட்டெடுக்கவே விளைவதாக கேள்வியுற்றேன்…..” என வெகு விளக்கமாய் தன் செயலை நியாயப்படுத்தினான் அவ் வாலிபன்….

 அவனது கூற்றை செவியுற்றதும் ருயம்மாவுக்கு பாண்டியத்தில் பெண்களின் நிலை பற்றிய எண்ணம் மனம் நிறைக்கிறது…..பராக்கிரமன் காணும் பண்டைய பாண்டிய கனவும் முழுதாய் புரிகின்றது…. ஆனால் இப்போது எது மானகவசன் மனதிற்கு ஏற்புடையதாக இல்லை என்பதை  மட்டும் அவளால் ஊகிக்க இயலவில்லை…

ஆம் இன்னுமே  மானகவசன் வதனத்தில் ஏற்பின் சாயை எதுவும் உதிக்கவில்லை….

தற்போது சினமற்ற சிறு முறுவலுடன் இலகுதொனியில் விவரிக்க முயன்ற பாண்டிய வேந்தன்..….

“பெண் கல்வி என்பது தமிழர் பாரம்பரியம்தான்….அதை மீட்டெடுப்பதிலும் தவறில்லைதான்…… ஆனால் இத்தனை கற்றுக் கொடுக்க அப்பெண்ணை எவ்வளவாய் நீ தனிமையில் சந்தித்திருக்க வேண்டும்…..

காதல் என்ற பெயரிலோ அதில் கல்வி என்ற பெயரிலோ காரணம் எதுவாய் இருந்தாலென்ன…… அவளது தந்தைக்கு தெரியாமல் இப்படி தனிமையில் சந்திப்பது  நியாயமாய் தெரிகிறதாமா உனக்கு…..?

முன்பே சொன்னேன் நான்….. அரசன் என்பவன் தன் அனைத்து குடிகளுக்கும் தகப்பன் என…..  அவ்வகையில் அப்பெண்ணுக்கும் தகப்பனாகிறேன் நான்….. ”  எனும் போது அவனது இறுதி வாக்கியத்தில் எஃக்கிறும்பினை குரலாக்கி இருந்தான்………

இதற்கு என்ன விடையென விளங்காமல் இங்கு விக்கித்து நின்றது ருயம்மா தேவி…..  இத்தனை காலத்திற்குள் அக்காதலர்களின் காதலை மானசீகமாக ஆதரிக்க துவங்கி இருந்த காகதீய இளவரசிக்கு…….பராக்கிரமன் இவ்வாறு அக்காதலை எதிர்க்க கூடும் என்றே தோன்றி இருக்கவில்லை…. ஸ்தம்பித்துப் போய் நின்றாள்….

அவள் தேசத்திலும் காதல் என்பது குற்றமாகத்தானே கொள்ளப்படுகிறது…. ஆக மானகவசரின் கூற்று முழு தவறாக தெரியவில்லை எனினும் அவளால் அதை ஏற்றுக் கொள்ளவும் இயலவில்லை…

ஆனால் சற்றும் தளராத அவ்விளைஞனோ….. “காதலும் அதில் களவு காண்பதும் ஆதி தமிழனிலிருந்து அனைவரும் செய்வதுதானே வேந்தே….அகத்துறை பாடல்கள் அனைத்தும் இதற்கு சாட்சியாகிறதே…..” என இன்னுமே நம்பிக்கையோடே வாதாடினான்….

இக்கணம் அவ் வாலிபனை பார்த்த  மானகவசரின் பார்வையில் மெச்சுதல் என எதுவும் இல்லை….ஒருவித தீர்க்கம் மட்டுமே விஞ்சி நின்றது….

“பழமை… பாரம்பரியம்…. கலாச்சாரம்…. இந்த ஒரு காரணத்திற்காகவே எல்லாவற்றையும் பின்பற்றிவிட முடியாது அப்பனே….. அந்த அக துறை பாடல்களில்தான்….களவு கண்ட காதலன் அக் கன்னியை மணந்து கணவனானபின் பரத்தையுடன் புனலாடுவதும்,  அவன் காதல் மனைவி கண்ணீர் வடிப்பதும் கூட கூறப்பட்டுள்ளது……

அதனால்தான் அதன் பின் வந்த பெற்றவர்களும் பெண்களும் இதற்கு மாற்று வழிகள் சிந்திக்க துவங்க…. இப்போதைய இடுக்கமான திருமண பழக்கங்கள் உண்டாயின…. அனுபவத்தில் பாடம் படிப்பதும் அவசியம்…. நல்ல மாற்றங்கள் எப்போதும் வரவேற்க தக்கவையே….” என அவ்வாலிபனின் வாதடலுக்கு முற்றுப் புள்ளி வைத்த மானகவசன்…

 “உனது பெயர் என்ன…?” என வாள்குரலில் விசாரிக்கவும் துவங்கினான்….

ருயம்மாவுக்கு சூழ்நிலை திரும்பும் வகை மனதிற்கு ஒவ்வவில்லை…. எனினும் மானகவசனின் மீதிருந்த நம்பிக்கையில் மௌனமாகவே அதை பார்த்திருந்தாள்.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.