(Reading time: 32 - 64 minutes)

கைகுட்டையால் முகத்தை துடைக்கும் சாக்கில் நொடி நேர இடைவெளி விட்டவன், பின் அவளை நோக்கி,

“பாய்ஸ் ஆர் பாய்ஸ் சசி உனக்கு சொன்னா தானே? நீ வேணா  நான் பாய்ன்னு சொல்லிக்கலாம்! எல்லாரும் அப்படி நினைக்க மாட்டாங்க!”

அதாவது என்னால் அப்படி நினைக்க முடியலை என்பதை சொல்லாமல் சொன்னான்! தான் கொண்ட காதலுக்கு துரோகம்! இவள் கொண்ட நட்பிற்கும் துரோகம்!!!  மனதளவில் தளர்ந்தே போனான்..

அவனே அறியவில்லை தன் சொல்லும், செயலும் அந்த சோர்வை பறை சாற்றுவதை.... ஆனால், அவனையே பார்த்துக் கொண்டிருந்த அவள் விழிகள் அதை படித்து விட்டது!

தொடர்புடையவை: உங்களுக்கு இதுவும் கூட பிடிக்கலாம்... -

ப்ரீத்தியின் "அடையாளம்" - காதல் கலந்த குடும்ப தொடர்...

படிக்க தவறாதீர்கள்..

‘சசி என்கிட்ட தனியா பேசுனது இவருக்கு தெரிஞ்சு ஹார்ட் ஆகி இருக்கார்’, என்று நினைத்தவளை, அது தான் இவனை காயப்படுத்தி தன்னை தவிர்த்து ஒதுங்க வைத்ததோ என்று நினைக்க வைத்தது!

ஆம், அதற்கு பின் அவனைப் பார்த்தது அந்த வொர்க்ஷாப்பில் தானே!

‘அப்ப கூட விரட்டினான்! நான் தான் கேட்காம போய் அவன் பாஸ்வேர்ட்டை உளறி வைச்சு... திட்டு வாங்கி..’

என்று எண்ணியவளுக்கு அன்று அவன் திட்டியதில் கண் கலங்க வெளியேறிய பின்.. தன்னை சமாதானம் செய்ய வந்த சுகுமார் ஆதங்கபட்டது மனதில் நிழலாடியது.

‘அன்னைக்கு லிஃப்ட்ல வைச்சு தல கோக்கை லவ் பண்றார்ன்னு நீ கிளப்பி விட்ட பாரு அது தான் மூலக் காரணமே! அவர் பாஸ்வேர்ட்ல கூட கோகிலாவை கேவலமா கனெக்ட் பண்ணி பேசுறாங்க! நியாயமா அவர் தான் அழுது இருக்கணும்!’,

என்று சுகுமார் சொன்ன பொழுதும் சரி.. அதன் பின் தன் செயலுக்கு மன்னிப்பு வேண்டி ஆர்யமனிடம் பேசி விட தவித்த பொழுது சரி அவன் விலகல் நியாயமாக படவில்லை!  

ஆனால், இப்பொழுது???  அவன் முகத்தை பார்க்க பார்க்க...

‘என்னால்! என் மடத்தனத்தால்.. இவனை நிறையவே கஷ்டபடுத்திட்டேன்!!!’

விம்மியது உள்ளம்!!!! அத்தோடு தன் அன்பை அவன் ஏற்க வேண்டும் என்ற பரிதவிப்பும் போராட்டமும்  அப்படியே முடங்கி போனது!

அப்பொழுதும் தன்னால் முடிந்த அளவு அவன் கவலையை போக்கலாம் என்று அந்த உரையாடலுக்குள் தன்னை திருப்பியவள்...

“பாய்ஸ் ஆர் பாய்ஸ்! பட், யு ஆர்- எ- மேன்!”, என்று அவன் பெயரை பிரித்து முன்னர் ‘எமன்’ என்றவள் இப்பொழுது ‘எ மேன்’ புது பொருள் உணர்த்தி,

“சசி சொல்றதை எல்லாம் அப்படியே கேட்பேன்னு நினைச்சீங்களா?”, என்றாள் நிமிர்வுடன்!

அவள் யோசிக்கும் கோணம் இவனுக்கு தெரிய வாய்ப்பில்லை! எனவே,

‘நான் சொல்ல வர்ற விஷயத்தை புரிஞ்சிக்காம... சசியை பத்தி பேசிகிட்டு இருக்கா’, என்ற ஆற்றாமை தான் வந்தது அவனுக்கு!

“இந்த யோசனை ஃபிலோமினாகிட்டலே இருந்திருக்கணும்! கோவில் மாடாட்டம் புத்திங்கிறதே இல்லாம அவ பேச்சை கேட்டு உன்னாலே எல்லாருக்கும் பிரச்சனை...!!!!” 

சுள்ளென்று எரிந்து விழுந்தான்.

‘உன்னால் பிரச்சனை’ என்று அவன் வாயே உரைத்து விட்டதில்

சுளீரென்று வலியெடுக்க... அஞ்சனாவின் மனம் அப்படியே விழுந்து விட்டது! இந்த இரவு மட்டும் எத்தனை முறை அழுதிருப்பாள்!!!!  என்னவோ அவன் சொன்னதும் அழுக கூட தோன்றவில்லை!

இறுக்கம்! அப்படி ஒரு மன இறுக்கம்!!!  

தான் பேச பேச அவள் முகம் மாறுவதை கவனித்த ஆர்யமனை..

‘தப்பை நீ  செய்துட்டு அவ மேல கோபப்பட்டு என்ன புண்ணியம்! பாவம்டா அவ!!! அவளுக்கு புரிய வைக்க ஜென்மத்திலும் முடியாது! பேசாம விலகிப் போயிடு!’

எச்சரித்தது அவன் மூளை! மறுபடியும் பிழை செய்து விடக் கூடாது என்ற தெளிவில்!

“வீடு எங்க?”, அவளைப் பார்த்து வினவ.. அஞ்சனாவிற்கு பதில் சொல்ல வாய் வரவில்லை! மெதுவாக அவள் பார்வையும்.... கையும் அவன் பின்னால் சில எட்டு தூரம் இருக்கும் வீட்டை சுட்டியது! அவள் காட்டிய திசையில் பார்வையை வைத்து,

“ஓ... இங்க தானா!!! சரி! பார்த்து போயிடு! நானும் கிளம்புறேன்”,

என்று வண்டியை கிளப்ப...

‘கை கழுவிகிறானே!!!’, தவித்தது அவள் மனம்! வெறுமனே அவனைப் பார்த்து தலையசைத்தவள்... மேலே எதுவும் பேசாது அவனை கடந்து நடக்க ஆரம்பித்தாள்!

இத்தனை நாளில் அவன் காட்டிராத சுபாவம் அது! வருத்தமாக இருந்தாலும் அவளை தடுக்கவில்லை.. தேற்றவில்லை... அப்படியே கிளம்பு விடுவோம் என்று அரை வட்டமிட்டு வண்டியை திருப்பினான் அவள் சென்ற திசையில்! பார்வை இன்னும் அவளிடம் இருந்து விலகாமல் அவளையே  ஒரு எதிர்பார்ப்போடு பார்த்திருந்தது!

அவனை கடந்து வந்தவளின் எண்ணம் அவனை நோக்கியே இருக்க..  மூன்றாவது எட்டு வைக்க முன் சென்று கால் பின் சென்று... அவள் எண்ணம் போல அவளும் அவனை நோக்கி திரும்பினாள்!

அவன் எதிர்பார்ப்பு நிறைவேறியதோ!!!!  திரும்பியவளைக் கண்ட அவன் கண்கள் பிரகாசித்தன! ஆனால், அடுத்த நொடி

“ஸாரி ஆர்யா! மை லாஸ்ட் ஸாரி!!!!”

என்னவோ மாதிரி குரலில் உரைத்ததும்... அந்த கண்களில் அப்படி ஒரு தீவிரம்!!! விருட்டென்று சீறிய வண்டியுடன்  அருகே வந்தவன் அவளை கூர்மையாக நோக்கி...

‘இப்போ ஸாரி சொல்லலைன்னு யார் அழுதது??’,

என்றான் அழுத்தத்தை பார்வையிலும் சேர்த்து!!!

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.