(Reading time: 32 - 64 minutes)

தை பார்த்துக் கொண்டிருந்த முகுந்த்திற்கு யோசனை எல்லாம் ஆர்யமன் மீதே!!!

‘ஆர்யமனுக்கு ஏன் அஞ்சனா மேல ஒரு சாஃப்ட் கார்னர்??’,

முகுந்த்தின் மனதில் பல நாள் ஓடிய கேள்விக்கு விடை தெரிந்து விட்டது. ‘ஆக, இவ ஹர்ஷாவோட கசின்னு எப்படியோ தெரிஞ்சுகிட்டு தான் அவளை ரூட் விட முயற்சி செய்திருக்கான்’, என்று!!!

தன் யூகத்தை சரி பார்க்க எண்ணி இவர்கள் பேச்சில் இடைபுகுந்தவன்,

“அது உனக்கு தான் சசி! இன்னொரு ஃப்ரண்ட் ஆர்யமனுக்கு இது எப்போவோ தெரியும்!”

சசியிடம் ஆரம்பித்து அஞ்சனாவிடம் முடித்து... அவள் என்ன சொல்கிறாள் என்று பார்க்க...

தொடர்புடையவை: உங்களுக்கு இதுவும் கூட பிடிக்கலாம்... -

பிந்து வினோத்தின் "மலர்கள் நனைந்தன பனியாலே..." - காதல் என்பது இரு மனமுடிச்சு... εїз!

படிக்க தவறாதீர்கள்..

அந்த கேள்வியில் ஹர்ஷ்ஷிற்கும் ஆர்யாவுக்கும் உள்ள தொழில் தொடர்பை கண்டு பிடித்து விடுவானோ என்று அஞ்சியவள்,

“அவர் லீட் ங்கிறதாலே தெரிய படுத்த வேண்டியதாகி போச்சு!”,

என்றாள் மழுப்பலாக! அந்த பதிலில் முகுந்த் தன் யூகம் தான் உண்மை என்று உறுதியாக நினைத்தான். இவளை நன்றாக பார்த்து கொள்வது போல ஹர்ஷவர்தனிடம்  பேர் வாங்க முயன்றிருக்கிறான்.

‘சும்மா ஏதாவது செட் செய்து... காப்பாத்துறது மாதிரி படம் போட்டு...இந்த  பொண்ணை வைச்சு ஈஸியா ஹர்ஷவர்தனை குல்லா போட்டு முன்னேறிகிட்டே இருக்கான்! நாம இதை உட்கார்ந்து சும்மா வேடிக்கை பார்த்துகிட்டு இருக்கிறோம்!’ என்ற பொறாமை வந்தது அவனுக்கு!

அஞ்சனாவின் மீது ஆர்யமனுக்கு இருக்கும் பார்வை அவளுக்காகவா? அவன் வளர்ச்சிக்காகவா? எதுவாக இருந்தாலும் அது தன் வளர்ச்சிக்கு சரியல்ல என்றே நினைத்தான் முகுந்த்!

சசிக்கு ஹர்ஷவர்தன் அஞ்சனாவை ஊருக்கு போக சொன்னான் என்பதே மனதில் நிற்க..

ப்ச்.. எல்லாம் என்னாலே.... நான் ட்ரிப் போகாம இருந்திருக்கணும்! அஞ்சுக்கு இந்த ப்ராப்ளம் வந்திருக்காது’, என்று எண்ணிக் கொண்டிருந்தவளுக்கு...

முகுந்த் ஆர்யமனை பற்றி விசாரிப்பதில் பிடித்தம் இல்லை!

“ஆர்யா அவளுக்கு க்ளோஸ்ன்னு தெரியாதா! விடு முகுந்த்! சும்மா அதையே நோண்டிகிட்டு!”, என்று தடுத்தவள்.. அஞ்சனாவிடம்,

“அந்த ஃபிலோ கேங் மோசம் தான்! அதுக்காக எல்லாரும் அப்படி இருப்பாங்களா? இங்க எத்தனை பொண்ணுங்க வேலை பார்க்கிறோம். எல்லாருக்கும் அப்படியா நடக்குது? இதுக்கு பயந்து ஹர்ஷவர்தன் ஏன் போக சொல்றார் அஞ்சு? அது அவர் கம்பெனி தானே! உனக்காக நான் வேணா பேசட்டா அவர்கிட்ட?”,

கேட்டாள் அவளை பிரிய மனதில்லாமல்! அவள் எண்ணம் புரிந்தாலும், மறுத்தாள் அஞ்சனா!

“இருக்கட்டும் சசி! குதிரை நேத்தே அப்செட்டா இருந்தான். ஏற்கனவே பிஸ்னஸ் ஸ்போர்ட்ஸ்ன்னு தடுமாறிகிட்டு இருக்கிறான்! என்னாலே அவன் நிம்மதி கெட வேண்டாம்!”,

தீர்மானமாக சொன்னவள்.... “வீட்டில் இருந்து  வொர்க் பண்ணா  நாமளும் டச்ல இருக்கலாம்! மாசம் ஒரு முறை  நான் இங்க வர்றேன்.. அடுத்த முறை நீ அங்க வா.. சிம்பிள்!”, என்ற தீர்வையும் கொடுத்தாள்!!!

அதை அரை மனதாக ஏற்றுக் கொண்ட சசியிடம்...

“இந்த லாஸ்ட் டே வை மறக்கவே முடியாத அளவுக்கு கொண்டாட வந்தா.. நீ இப்படி முகத்தை வைச்சுகிட்டு!!!”,

என்றவள் முகுந்த்திடம் திரும்பி,

“செந்தாமரை இன்னைக்கு நான் ஊருக்கு போறதுக்குள்ளே சசியை ஹேப்பியாக்கிடுங்க! இல்லை உங்களை டைவர்ஸ் பண்ணிட்டு... என் கூட பேக் அப் ஆகிடுவா! எங்க பேமிலில எலிஜிபிள் பேச்சிலர்ஸ் நிறைய பேர் இருக்காங்க! பி கேர்ஃபுல்!”

பத்திரம் காட்டி அவள் போட்ட மிரட்டலில்... அதுவரை ‘இந்த பொண்ணு ஊருக்கு போயிட்டா ஆர்யமன் அப்படியே விட்டுடுவானா? இல்லை அவங்க வீட்டு மாப்பிள்ளையாகவே போக அடியை போடுவானா?’

என ஆர்யமனின் அடுத்தகட்ட நடவடிக்கையைப் பற்றி தீவிர யோசனையில் இருந்தவன்...

தன்னை பற்றி பேசுகிறார்கள் என்பதை உணர்ந்து, “ம்ம்ம்.. என்னது”, பாதி தூக்கத்தில் விழித்துக் கொண்டவனாக கேட்டதும்...

சசி, “இது தேறாது! இப்பவே டைவர்ஸ் கொடுத்திடலாம்!”, என்று கிண்டலடித்து சிரிக்க... அவள் சிரிப்பில் அஞ்சனா இணைந்தாள்.

பாவம், முகுந்த் ஒன்றும் புரியாமல் சிரித்து வைத்தான். இவர்கள் அலுவலகத்திற்கு வந்து சில நிமிடங்கள் கடந்த பின்...

அந்த அலுவலக வாயிலில்...

“இன்னைக்கு மொத நாள்! பார்த்து டா!!! எவன் எவன்கிட்டயோ கெஞ்சி கதறி கஷ்டபட்டு வாங்கின வேலை!!!”, என்றான் பைக்கில் பரணிதரன் அவனை வந்து இறங்கி விட்ட அவன் நண்பன் மாணிக்கம்! இதே வாசலில் நின்று ஆர்யமனிடம் அன்று கெஞ்சியதை நினைவில் வைத்தவனாக!

“சரி மச்சான்! பார்க்கலாம்!”, என்று மாணிக்கத்தை அனுப்பி வைத்தவனுக்கும் ஆர்யமனை நினைத்ததும், ‘வந்த அன்னைக்கே காட்டு காட்டுன்னு காட்டினானே’,

அவனை எதிர்கொள்ளவே பயமாக தான் இருந்தது!

பரணிதரனுக்கு இன்னும் ஐடி கார்ட் வழங்க படாததால், தினேஷ் அவனை வரவேற்பரையில் காத்திருக்க சொல்லியிருந்தான்! அவனும் அங்கு வருவோரை வேடிக்கை பார்த்த படி அமர்ந்திருந்தான்.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.