அலுவலகத்திற்கு போலீஸ் ஜீப்பில் இருந்து அஞ்சனா இறங்குவதை பார்த்த முகுந்த், உடன் வந்த சசியிடம்,
“என்ன உன் ஃப்ரண்ட் ஜீப்ல வந்து இறங்குறா! நம்ம சிட்டி கமிஷனர் தானே அது?”, என்று அந்த ஜீப்பை நோட்டமிட்டு கேட்டான். அவன் பார்வையை தொடர்ந்த சசி, அவன் சொன்னதும் அதிர்ச்சியில் வாய் பிளந்தாள்,
“அவங்க அங்கிள் போலீஸ்மேன் சொல்லியிருக்கா!!! அது கமிஷனரா??”, என்று!!!
“ஒரு மாசமா ஃபெவிகால் போட்டது போல அவ கூடவே தானே இருக்கே! இதை கூட தெரிந்து வைச்சிக்க மாட்டியா?”,
முகுந்த அவளிடம் சொல்லி முடிக்கும் சமயம்.. அஞ்சனா அவர்களைப் பார்த்து விட்டாள்,
“ஹே.. ட்ரிப் எப்படி போச்சு! ட்ரிப்ல நீ எதிர்பார்த்த மாதிரி நம்ம செந்தாமரை மேரேஜ் ப்ரபோஸ் செய்துட்டாரா???”
தொடர்புடையவை: உங்களுக்கு இதுவும் கூட பிடிக்கலாம்... -
தேவியின் "பாயும் மழை நீயே..." - காதல் கலந்த தொடர்கதை...
படிக்க தவறாதீர்கள்..
என்று சசியை பார்த்து கேட்டுக் கொண்டே அருகில் வர... இவளிடம் ரகசியமாய் சொன்னதை அவன் முன்னே போட்டு உடைப்பதை கண்ட சசி,
“ம்ம்.. ரகசியத்தை உன்கிட்ட தான் சொல்லணும்!”, என்று அலுத்துக் கொள்ள.. முகுந்த் சிரித்தே விட்டான். அதைக் கண்ட சசி,
“சிரிக்கிறதை பாரு... ப்ரபோஸ் பண்ணுன்னு கேட்ட பிறகும், எனக்கு என்னன்னு இருக்கிற!!!”, அவனை செல்லமாக கடிந்தாள்.
இதைப் பார்த்த அஞ்சனா,
“சோ.. சேற்றில் மலர்ந்த செந்தாமரை இப்போ சேற்றில் பாத் எடுக்கிற பஃபலோ ஆகிட்டார்!”, என்றதும் முகுந்த்திற்கு,
‘நெக்ஸ்ட் பப்ளிக்ல பஃபலோன்னு கூப்பிட்டு மானத்தை வாங்குவாளோ’, என்ற பயம் வர பேச்சை மாற்றினான்.
“கமிஷனர் ஜீப்ல வர்ற! அவர் என்ன உங்க சொந்தமா?”
இவள், “சொந்தம் அன்ட் பேமிலி ஃப்ரண்ட்ஸ்!” என்க..
“ஏன் உன் கார் என்னாச்சு?” - சசி கேட்டாள்.
“அது..... “, என்று இழுத்தவள்...
“ஃபிலோ கூட பப் போய் ஒரு பிரச்சனை ஆகிடுச்சு! அதான் அங்கிள் கொஞ்சம் பயந்து அவங்களே ட்ராப் பண்றாங்க”
என்று சொன்னதும்,
“ஃபிலோனா... அந்த ஃபிலோமினா.... அவ சரி கிடையாதே!!!!”, என்று பதறிய சசி,
“நீ எப்படி அவ கூட பப்க்கு எல்லாம்....ஏதாவது கலந்து கொடுத்துட்டாளா?”
பதறிய சசியிடம் நடந்ததை கூறிய அஞ்சனா, அந்த சமயம் பப்பிற்கு தற்செயலாக வந்த ஆர்யமன் தன்னை காப்பாற்றி விட்டதாக சொல்ல..
முகுந்த் செவியோ கூர்மையானது!
அஞ்சனா மேலும்,
“மேக்ஸ் சாஃப்ட் என் கசின் கம்பெனின்னு தான் வீட்டில் விட்டாங்க. இப்போ அவனே கிளம்புன்னு சொல்லிட்டான்.“,
என்றதும்... சசி திகைக்க... முகுந்த்தோ தீவிரமானான்! அஞ்சனாவை நோக்கி,
“கசின்னா யாரு?? ஹர்ஷவர்தனையா சொல்றே??”,
வேகமாக அவன் கேட்ட விதத்தில் பயந்தே போன அஞ்சனாவின் தலை மேலும் கீழுமாக அசைய.....
அதிர்ச்சி விலகாத சசி, “அப்போ அந்த குதிரை ஹர்ஷவர்தனா???!!!”,
குற்ற உணர்வு மேலெழுந்தது அஞ்சனாவிற்கு. “ம்ம்ம்”, என்று தலையசைத்தவளைக் கண்டதும்,
‘என்கிட்ட சொல்லவே இல்லை!!!!’,
அந்த ஏமாற்றத்தை அப்பட்டமாக சசியின் முகம் காட்ட...
“சொல்ல கூடாதுன்னு இல்லை சசி!!”,
தன்னிலை விளக்கம் கொடுக்க முனைந்தாள் அஞ்சனா.
“எங்க பேமிலி நடத்துற ஸ்கூல், காலேஜ்ல படிச்சதால யாருமே என் கூட கேஷ்வலா பழக மாட்டாங்க! எனக்கு கிடைச்ச ஃபர்ஸ்ட் ஃப்ரண்ட் நீ! உண்மையை சொன்னா எங்கே தள்ளி போயிடுவியோன்னு பயந்து தான் சொல்லலை!!”
“இப்போ சொல்லாம இருந்ததால உன்னை லூஸ் பண்ணிடுவேனோன்னு பயமா இருக்கு!”
கலக்கத்துடன் அஞ்சனா சொல்வதைக் கண்டதும் இளகிப் போனாள் சசி!
“சொல்றதும் சொல்லாததும் உன் இஷ்டம்! இதுக்காக சின்னபிள்ளைதனமா ஃப்ரண்ட்ஷிப்பை விடுவாங்களா?!”,
வருத்தம் இருந்தாலும்.. நட்பை இழக்க விரும்பாமல்... அவளை எந்த குறையும் சொல்லாது பெருந்தன்மையுடன் ஏற்று கொண்டாள் சசி!