(Reading time: 32 - 64 minutes)

ப்பொழுது தன் தோழியிடம்  பேசிய படி வந்த ஃபிலோமினா ரேகையை பதிவிட அலுவலக கதவு திறக்கவில்லை. பின், தனது அக்சஸ் கார்ட்டை தேய்க்க அப்பொழுதும் கதவு  திறக்காதது கண்டு துணுக்குற்றாள்!

உடனே அங்கிருந்த ரிசப்ஷனிஸ்ட்டிடம் வந்து கேட்க,

“வெயிட் பண்ணுங்க! ஹச். ஆர் பேசுவாங்க” என்றவளது பேச்சில்  அலட்சியம் தெரிய, ஒரு பயப்பந்து உருண்டது ஃபிலோமினா வயிற்றில்!

 ‘பப் பிரச்சனை ஆபிஸ் வரைக்கும் தெரிஞ்சிடுச்சா..’, என்ற சந்தேகத்துடன் வந்து அமர... அதை ஊர்ஜித படுத்தவது போல அடுத்து வந்த அவள் நண்பர்கள் இருவரின் கார்ட்டும் வேலை பார்க்கவில்லை. அதை கவனித்த ஃபிலோமினா அவர்களை அழைத்து,

“நமக்கு ஆபிஸ்க்குள்ள போக அக்ஸஸ் கொடுக்கலை! ஹச். ஆர். வந்து இப்போ பேசுவாராம்”

தொடர்புடையவை: உங்களுக்கு இதுவும் கூட பிடிக்கலாம்... -

சகியின் "மனதோர மழைச்சாரல் நீயாகினாய்" - காதல் கலந்த தொடர்கதை...

படிக்க தவறாதீர்கள்..

என்றதும்...

“ஏன்? என்ன ப்ராப்ளம்???”, இருவரும் கேட்க...

“தெரியலை! எனக்கு என்னமோ அது நேத்து நடந்த பார்ட்டில வந்த ப்ராப்ளம்ன்னு தோணுது”, என்றாள் அவள். அந்த நண்பர்களும் பார்ட்டிக்கு வந்திருந்தனர். ஆனால், சீக்கிரமாகவே கிளம்பி விட்டதால் அவர்களுக்கு தெரிய வாய்ப்பில்லை என்பதால்,

“நீங்க போனதுக்கு பிறகு அந்த அஞ்சனாவால பிரச்சனையாகி... போலீஸ் நம்ம ஃப்ரண்ட்ஸ் எல்லாரையும் அடிச்சு துவைச்சு அசிங்க படுத்திட்டாங்க! எனக்கு என்னமோ அவ இங்கயும் ஏதோ கம்ப்ளைன்ட் கொடுத்திருப்பான்னு நினைக்கிறேன்!”, என்றாள் ஃபிலோமினா ஏமாற்றத்துடன்!

“அதனால....??”, என்பது போல அவன் பார்க்க...

“நம்மளை ஃபயர் பண்ணி இருக்காங்கன்னு தோணுது!!!!”, என்றாள் அவள்!

“என்னது!!!”, அதிர்ந்தனர் அவள் நண்பர்கள்..

இவர்கள் நின்று பேசியது பரணிதரன் முன்னால்! முதல் நாள் அங்கு வேலைக்கு வந்தவன்.. ‘ஃபயர் பண்ணிட்டாங்க’, என்ற இவர்கள் பேச்சை கேட்டு அரண்டே போனான்..

“நாமளா கூப்பிட்டோம்!!! அவளா தானே வந்தா! கடைசியில் நம்மளை மாட்டி விட்டா! காசு இருக்கிற திமிரா அவளுக்கு??”,

வேலை போய்விட்ட கடுப்பில் சற்றே சத்தமாக கேட்டான் ஃபிலோமினாவின் நண்பன்.

“எப்படி இன்னொசென்ட்டா பேசுனா தெரியுமா? இப்படி பண்ணுவான்னு நினைக்கவே இல்லை”, அதிர்ச்சி மீளாது நின்றாள் ஃபிலோமினா.

“ஹூம்ம்... இப்படி பார்க்க ஹா ஹா ஹாசினி ஒண்ணுமே தெரியாதா மாதிரி இருக்கிறதுங்க தான் விளைஞ்சதுங்களா இருக்கும்! இதெல்லாம் ஸ்கூல்லே .........”

காது கூசும் விமர்சனம் அவள் நடத்தையில் ஆரம்பமானது அந்த இடத்தில்! 

“பார்ட்டிலே எல்லாருக்கும் ஊத்தி கொடுத்து கூத்தடிச்சவ... இப்படி ஊத்தி மூடுவான்னு யார் கண்டது???? ஹரி கூடவும்.... யோகு கூடவும் மாறி... மாறி.. க்ளோஸ்சா இருந்திட்டு..... கடைசியில் போலீஸ் வந்ததும் பெரிய பத்தினியாட்டம் அப்படியே பிளேட்டை மாத்திட்டாளாம்...” -

பாதி போதை தெளிந்த பின் தான் கேட்டு தெரிந்ததை அப்படியே நண்பர்களிடம் ஒப்பித்தாள் ஃபிலோமினா.

வேலை பறிபோன ஆதங்கத்தில்... பலரும் வந்து போகும் வரவேற்பறையில்   வாய் கூசாது ஒரு பெண்ணின் நடத்தையை சிதைக்க ஆரம்பித்தனர்  ஃபிலோமினாவும் அவள் நண்பர்களும்!

அங்கிருந்த பல காதுகளில் இது விழுந்தது.... பரணிதரனுக்கு இன்னும் தெளிவாக!

லுவலகத்திற்குள் நுழைந்ததுமே கிளையன்ட் கால் இருக்கிறது என்று முகுந்த் சென்று விட, காலை சிற்றுண்டியை சாப்பிட சென்ற சசிக்கு துணையிருந்தாள் அஞ்சனா.  சும்மா ஒரு டீயை வாங்கி சுவைத்தவாறு அவளுடன் அரட்டை அடித்துக் கொண்டிருந்த அஞ்சனாவின் அலைபேசிக்கு ஒரு குறுந்தகவல் வர.... அதை படித்தவள் முகம் தீவிரமானது!

அதைக் கண்டதும், “என்ன அஞ்சு? எதுவும் ப்ராப்ளமா?”,

கேட்டாள் சசி சிறு பதட்டத்துடன்.

“எஸ்!!! பெரிய ப்ராப்ளம்!!”,

“சீக்கிரமா வா!”, என்று பாதி சாப்பாட்டில் இருந்தவளை கையை பிடித்து இழுக்க.. “இரு! இரு! கை கழுவிக்கிறேன்”, என்று கையை உருவி கொண்ட கை கழுவ சென்ற சசிக்கு அவள் பெரிய அவகாசம் எல்லாம் கொடுக்கவில்லை!

“சீக்கிரம் வா சசி! எனக்கு பயமா இருக்கு”, என்று வேக வேகமாக மொட்டை மாடிக்கு அழைத்து சென்றாள்.

பதறி அடித்து கொண்டு சசியும் அவளுடன் செல்ல.. அந்த மொட்டை மாடிக்கு கூட்டமாக குழுமியிருந்த மொத்த ஊழியர்களும்... இவர்கள் வந்ததும்  கோரஸாக கத்த..

என்ன ஏதென்று புரியாமல் சசி விழிக்க...

முகுந்த் மண்டியிட்டான் சசி முன்!!!

“வில் யு மேரி மீ”, என்று மோதிரத்தை நீட்ட.. மறுபடியும் கோரஸாக கத்தினர். ஆனந்த அதிர்ச்சியடைந்த சசி அதை ஏற்றுக் கொள்ள..

அலைபேசியில் அந்த நிகழ்வை பதிய ஆரம்பித்தாள் அஞ்சனா..

அவர்களை ஃபோகஸ் செய்வதற்காக மாடி வாயில் வழியை அடைத்த படி நின்று படம் பிடித்துக் கொண்டிருக்க...

“எக்ஸ்க்யூஸ் மீ! அஞ்சனா”, என்று தினேஷ் சொல்லவும்....

சற்றே நகன்று அவனை பார்த்து புன்னகைக்க திரும்ப... அவன் பின்னே... பரணிதரன்! அவள் தேடிய பரணிதரன்!!!

அவன் விழியில் விழுந்ததுமே கண்டு கொண்டாள் அவனை!! அந்த அளவிற்கு அவன் முகத்தை ஆழ பதிந்திருந்தாள்.

பெல்லி பாய் கடைசி நாளில் அவனை காட்டி விட்டார் என்றதும்... இறுகி போயிருந்த மனத்திற்குள்  சிலுசிலுவென்று தென்றல் வீச... சிரிப்பிற்கும் அழுகைக்கும் நடுப்பட்ட உணர்ச்சியில் பேச்சு வராது அப்படியே நின்று விட்டாள்!!! மனம் மட்டும் நிதானமாக உச்சரித்தது...

‘பரணிதரன்.. பரணி நட்சத்திரம்... மேஷ ராசி’, என்று!

அந்த நாமத்தை உரியவனுக்கு.... அஞ்சனா என்ற தினேஷ் விளிப்பில்... இத்தனை நேரம் தன் செவியில் விழுந்த வரவேற்பரை விமர்சனங்களின் நாயகி இவள் தான் என்பது தெளிவாக தெரிய...  ‘அஞ்சனா’, தனக்குள் சொல்லி பார்த்ததும் முகம் தானாக சுழித்தது! 

உன் பேர் சொல்ல ஆசை தான்!!

உள்ளம் உருக ஆசை தான்!!!!

ஒரு வழியா அஞ்சனா ஆர்யாவை பிரிச்சு விட்டு பரணியை உள்ள இறக்கிட்டேன்!!! இதோட அப்படியே  நிகழ் காலத்துக்கு போகலாம்ன்னு பார்க்கிறேன்... அங்கே நம்ம பாலாஜி பையனுக்கு ஸ்ருதியை கண்ல காட்டலாம்ன்னு யோசனை! What do you think????

தொடரும்

Episode 22

Episode 24

{kunena_discuss:922}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.