(Reading time: 32 - 64 minutes)

த்தனையும் செய்தாள் - பப்பில் தான் பார்த்த போலீஸ் அதிகாரி தான் ஸ்ரீ வாசன் என்பது தெரியாமலே!

அதன் பின் குளித்து விட்டு அலுவலகம் கிளம்ப தன் அறைக்கு வந்த அஞ்சனாவின் அலைபேசி சிணுங்க எடுத்து பார்த்தாள் - அழைத்தது ஹர்ஷவர்தன்.

அவன் உற்சாகமாக அந்த அழைப்பை எடுத்து பேச ஆரம்பிக்க. அவனோ உற்சாகமின்றி,

“அந்த பப் இன்ஸிடென்ட்ல உனக்கு எதுவும் பிரச்சனை இல்லை தானே..?”,

என்று கேட்டதும் அஞ்சனாவிற்கு புரிந்து விட்டது ஆர்யமன் சொல்லி இருக்கிறான் என்பது!.

“அதெல்லாம் சப்பை மேட்டர்! இதுக்கு போய் ப்ராக்டிஸ்ல இருக்கிற உன்னை ஏன் டிஸ்ட்ராக்ட் பண்றார் இந்த ஆர்யா!”,

என்றாள் சலிப்புடன்!

தொடர்புடையவை: உங்களுக்கு இதுவும் கூட பிடிக்கலாம்... -

மீராவின் "புத்தம் புது காலை..." - காதல் கலந்த குடும்ப தொடர்....

படிக்க தவறாதீர்கள்..

“அவன் சரியா தான் சொல்லி இருக்கான்! நீ இதுக்கு மேலே அங்கே இருக்காதே! உடனே ஊருக்கு கிளம்பு!”

என்றான். அவளுக்குமே நேற்றைய அனுபவம் தீயை தொட்டது போன்றதொரு பயத்தை உருவாக்கி இருக்க..

“நீ சொன்னாலும் சொல்லலைனாலும் ஊருக்கு போயிடலாம்னு தான் நினைச்சிருக்கேன் குதிரை! என் டீம், என் ஃப்ரண்ட்ஸ்கிட்ட ஒரு வார்த்தை கூட சொல்லாம கிளம்பினா நல்லாவே இருக்காதுன்னு தான் ஆபிஸ் போறேன்!!”,

எத்தனை ஆசையாக வந்தவள்... இப்பொழுது தானே போகிறாள் என்றால் கண்டிப்பாக அவளை அது வருத்தி இருக்கிறது என்பதை உணர்ந்த  ஹர்ஷவர்தனுக்கு ‘என் பேரோலில் இருந்துகிட்டு என் கசின்க்கே  இந்த நிலையை கொண்டு வந்தவங்களை விடக் கூடாது’, என்ற ஆவேசம் வந்தது. அதை அவளிடம் வெளிப்படையாக காட்டாமல்,

“இனி ஒரு நாள்ன்னா கூட இனி நீ ஹர்ஷாவோட கசின்னா தான் மேக்ஸ் சாஃப்ட்ல இருக்கணும்”, என்றான் முடிவாக!

அவன் சொன்னதை கேட்டவளுக்கு சசி இதை எப்படி  எடுத்து கொள்வாளோ என்ற கவலை உண்டானது!

சிறிது நேரம் அவனிடம் பேசி விட்டு அலுவலகத்திற்கு செல்ல தயாராகி வந்து நின்றாள்.

அதைக் கண்ட கமிஷனர், இத்தனை நடந்த பின்பும் பின்வாங்காமல் அலுவலகம் செல்பவளின் தைரியத்தை மனதிற்குள் பாராட்டினாலும் அவளை பத்திரமாக பார்த்து கொள்ள வேண்டும் என்ற அக்கறை கூடுதலாக வர....

“குட்டி, நானே ட்ராப் பண்றேன்!”, என்றார் அஞ்சனாவிடம்.

‘என்னைக்குமில்லாத அதிசயம்!’, என்று கணவனை சைலஜா அதிசயமாக பார்த்தார்.

அஞ்சனா, “கோவிலுக்கு போயிட்டு போகணுமே! உங்களுக்கு ஓகேவா? ”, என்று கேட்க...

கமிஷனர், “கோவிலுக்கா? என்ன விசேஷம்?”, அவளைப் பார்த்து கேட்டதும்,

இதை சாக்கிட்டு கடமை கடமை என்று ஓடும் கணவர் பின்வாங்கி விடுவாரோ என்று இடைபுகுந்த சைலஜா,

“இன்னைக்கு மாசப் பிறப்பு! மார்கழி மாசம் ஆரம்பிக்குதுல! குட்டியை கூட்டிட்டு போங்க!”, என்று (மி)விரட்டினார் கணவனை!

அதுவரை ஸ்ரீவாசனிற்காக வேண்டி வரலாம் என்று தான் கோவில் போக நினைத்திருந்தாள் அஞ்சனா! சைலஜா சொன்னதும் தான் பரணிதரனை பார்த்து ஒரு மாதம் நிறைவடைவது மண்டைக்குள் உரைக்க... காதலிக்க வேண்டும் என்ற ஆசை மொட்டு கூட விடாது.. மலடாகி போய் விடுமோ என்ற கவலை அவளை  பெரிதாக தாக்கியது!

‘பெல்லி பாய் என்னாலே உன் கூட போராட முடியலை! அதுக்காக உன்னை விட முடியுமா??? பரணியை காட்டாம போனா என்னை தேத்த அப்புறம் யார்கிட்ட போவேன்!!!’,

கோவிலில் இப்படி வேண்டுதலை வைத்து  விட்ட பின்பும் மனதில் இருந்த விரக்தி அகலவில்லை!

அதன் பின் காரில் அமர்ந்ததும், கமிஷனர், அவளிடம் ஆர்யமனை பற்றி விசாரிக்க ஆரம்பித்தார். அவரை பேச வைக்க இவள் தான் கேள்வி கேட்பாள். இப்பொழுது தலை கீழாக இருக்கிறதே என்ற யோசனையில்,

“ஏன் அங்கிள் ஆர்யாவை இவ்வளோ விசாரிக்கிறீங்க?”

என்று கேட்டே விட்டாள்.

“நீ அமைதியா வர்ற.. அதான் உன் டெக்னிக்கை ஃபாலோ பண்றேன்!!!”,

என்று புன்னகையுடனே சொன்னவர் பின்,

“ஆர்யமன், ஸ்ரீவாசனை அட்மிட் பண்ண வாசு கூட வந்திருந்தான். ஹி இஸ் ஸ்மார்ட் அன்ட் சீரியஸ் டூ! உங்க வீட்டில இருக்கிற பொண்ணை டிரைவரை மட்டும் நம்பி அனுப்பி வைக்கிறீங்க! ஒரு செக்யூரிட்டி போடணும் கூடவா தோணலைன்னு என்னையே கேள்வி கேட்கிறான்!!!”

அவனை குறை கூறவில்லை அவர். ஒரு பாராட்டாக தான் சொன்னார்.

அதை கேட்டதும் இவள் மனதில் இருந்த விரக்தி சற்றே ஒதுங்கி போனது.. “ஆர்யா சீரியஸ் பெர்சனாலிட்டி ஓகே! ஸ்மார்ட்ன்னு எப்படி சொல்றீங்க??”

என்று கேட்டதும், அவர், “உன் ஃபோன்னை ட்ராக் பண்ணி அதை யாரும் மிஸ்யூஸ் பண்ணாத படி லாக்கும் செய்திருக்கான்! அது கூட டெக்னாலஜின்னு எடுத்துகிட்டாலும்... நீ பத்திரமா கிடைச்சது அவன் ஸ்மார்ட்னஸ்னாலயும் தான்!”,

என்று சொல்லும் போது, இவள் பாதுகாப்புக்கு ஒருத்தரை போட்டு இருந்தால் பிரச்சனை வந்திருக்காது என்ற ஒரு வருத்தம் அவருக்கும் வர தான் செய்தது.

“ஆர்யாவிற்கு வசிஷ்டர் வாயால் பிரம்ம ரிஷி பட்டமே கிடைச்சாச்சு”, என்று சொல்லி சிரித்தவள்..

“எனக்கு என்னவோ ஆர்யாவோட கைன்ட்னஸ் மட்டும் தான் கண்ணுக்கு தெரியுது!!” அவன் சத்தியம் செய்த காட்சி மனதில் நிழலாட இனிப்பும்.. கசப்பும் ஒரு சேர உணர்ந்தாள்.

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.