(Reading time: 32 - 64 minutes)

துக் கூடத்தில் ஹரிபிரசாத்தின் அலைபேசி கிடைக்காமல் அங்கிருந்து கிளம்பிய வாசு, ஸ்ரீ வாசனை தொடர்பு கொண்டு அதை சொல்ல,

‘அது திருடு போயிருக்கலாம்’ என்று கணக்கிட்ட ஸ்ரீ வாசன்... ‘பப்க்கு வந்தவங்க பயத்தில் தப்பிச்சா போதும்ன்னு நினைச்சு இருப்பாங்க. அங்கே வேலை பார்க்கிறவங்க யாராவது தான் எடுத்திருக்கணும்!’, என்று எண்ணிக் கொண்டே,

“பப்ல அரெஸ்ட் பண்ணவங்களை நல்லா கவனிச்சு அனுப்பி விட்டாச்சு! மத்தபடி, கேஸ் ஃபைல் பண்ணலை. அதனாலே எவிடென்ஸ் தேவை படாது! எனிவே ஃபோனை மிஸ்யூஸ் செய்றதுக்கு முன்னாலே ட்ராக் செய்யணும். நீங்க உடனடியா சைபர் க்ரைம் ஆபிஸ்க்கு வாங்க! நானும் அங்கே வர்றேன்!”

என்று உத்தரவிட்டு அலைபேசியை வைக்க....

‘அடப்பாவிங்களா.. அத்தனை பேரும் வெளியே வந்துட்டானுங்களா..’, என்றெண்ணியவனுக்கு  ஹரிபிரசாத்தின் உக்கிரம் மனதிலே நிற்க... வேகமாக ஆர்யமனை அழைத்தான்.

தொடர்புடையவை: உங்களுக்கு இதுவும் கூட பிடிக்கலாம்... -

சிவாஜிதாசனின் "அமேலியா" - காதல் கலந்த குடும்ப தொடர்....

படிக்க தவறாதீர்கள்..

அஞ்சனாவை விட்டு விட்டு அப்பொழுது தான் வீடு திரும்பி இருந்தான் ஆர்யமன். வாசு சொன்ன அனைத்து விவரத்தையும் கேட்டவன் கடைசியில் அவன்,

“மாப்ளே அந்த மினிஸ்டர் பையன் உன்கிட்ட அடி வாங்கின வெறில இருந்தான்டா.. ”

என்றதும்...

“நான் அதை விட வெறில இருக்கேன். அந்த நாய் மட்டும் என் கண்ணில் பட்டா...!”, என்று சினந்து...  பின் தன்னை அடக்கியவனாக,

“சரி! அவன் ஃபோன் டீடைல் சொல்லு. ரிமோட்லே அதை ஹேக் பண்ணி அவனை எதுலயாவது சிக்க வைக்கிறேன்”,

இது அவனால் சாத்தியமே இருந்தாலும் ஒரு பேச்சுக்காக சொல்ல.. அதை உண்மை என்று நம்பிய வாசு ஆடி போய் விட்டான் .

“டேய்.. சும்மா இரு! பெரிய இடத்து விவகாரம்! ஏற்கனவே நாய் பொழப்பு! அதுலயும் மண்ணை போட்டுடாத! நாங்களே பார்த்துக்கிறோம்!”

என்று பயந்து கொண்டு விடைபெற...

ஒரு பேச்சுக்கு சொன்னதுக்கே இந்த பயம் பயப்படுறான்.  அந்த பயத்தை விதைத்த அரசியல்வாதிகள் மீது கடும் கோபம் எழுந்தது! சராசரி மனிதனுக்கு உள்ள கோபம் தான்! அந்த ஹரி பிரசாத்தை பிடிக்க நாம ஏன்  எதிக்ஸ் பார்க்கணும். அவன் பொறுக்கித்தனத்தை எல்லாத்தையும் கண்டு பிடிச்சு பப்ளிக்ட்ட ரிலீஸ் செய்தா அவன் அப்பன் எப்படி பாலிடிக்ஸ் பண்ணுவான்?’

என்று நினைத்துக் கொண்டே வேர்வையில் நனைந்திருந்த சட்டை கழற்றியவன்... அப்பொழுது தான் கவனித்தான்..

அதில் ஒட்டியிருந்த குங்குமத்தை...

அதற்கு சொந்தமானவள் தன் தண்டு வடத்தில் சாய்ந்த பொழுது ஒட்டியிருக்கலாம் என்று அந்த நினைவு உயிர் பெற.. அந்த சமயம் கற்று கொண்ட மோகமும் உயிர் பெற்று.. இப்பொழுதும் இவன் உணர்ச்சிகளை தாக்கியது!  உயிர் காட்டை எரிக்கும் உணர்வு என்று புரியாது..

‘தப்பு பண்ற!’,

மனம் அடித்துக் கொள்ள...

“ச்சே! என் சட்டையை மட்டுமா.. புத்தியையும் பாழாக்குறா!!!’ என்று எரிச்சலுடன் அந்த சட்டையை வீசி எரிந்தான் குப்பை தொட்டியில்!!

அதோடு அஞ்சனாவை மனதில் இருந்து அகற்றி விட்டோம் என்று  அதிகாலை விமான பயணத்திற்கு தேவையானவற்றை எடுத்து வைத்து விட்டு படுக்க சென்ற பொழுது பன்னிரெண்டை தாண்டி இருந்தது.

நான்கு மணிக்கு அலாரம் வைத்தவனுக்கு இனி நாம மேக்ஸ்சாஃப்ட்டை நினைத்து கூட பார்க்க தேவையில்லை என்று எண்ணிக் கொண்டான்.

ஆம், கம்பெனி கை மாறுவதற்காக தான் இத்தனை நாள் காத்திருந்தான். அடுத்து அவன் கையாண்ட ப்ராஜெக்ட்டை மாற்றி விட காத்திருந்தான். இரண்டுமே வெற்றிகரமாக முடிந்தது!

இனி தன் மென்பொருள் தயாரிப்பில் முழுக் கவனம் செலுத்தலாம்! அடுத்த ஆண்டு இறுதிக்குள் இந்த ஆண்டை விட இரண்டு மடங்காக்க வேண்டும் லாபத்தை!

ஒரு கணம் அவன் மேற்கொள்ளும் முயற்சிகள் வெற்றி பெற்றால் அதில் எத்தனை பேர் மகிழ்ச்சி அடங்கி உள்ளது என்று நினைத்து பார்த்தான். என் வாழ்கை இதற்காக தான்! இது தான் என் வாழ்க்கை!!!!

தனக்குத் தானே சொல்லிக் கொண்டு கண்களை மூடியவனுக்கு.….

‘இன்னும் நாலு மணி நேரம் தான்...’, என்ற நினைவோடு அஞ்சனாவின் முகம் வந்து போக... அது ஒரு பயத்தை விதைத்தது! என்னவோ சரியாக படவில்லை!  

‘இனி அஞ்சனாவிற்கு இப்படி ஒரு ஆபத்து வந்தால்...’

அவனையும் அறியாத படபடப்பு உண்டாக படுக்கையை விட்டு எழுந்தவன்   உடனடியாக ஹர்ஷவர்தனை அழைத்தான்..

“உங்ககிட்ட அஞ்சனாவை பத்தி பேசியே ஆகணும்”, என்று ஆரம்பித்து..

“ஊரு உலகம் தெரியாம இருந்தா கூட பரவாயில்லை! மனுஷங்களை கூட எடை போட தெரியாம இருக்கிறவளை எந்த தைரியத்தில் சென்னைக்கு அனுப்பி வைச்சீங்க?”,

என்று திட்ட ஆரம்பிக்க ஹர்ஷவர்தனுக்கு கோபம் வந்தது உண்மை! 

ஆனால் அதைத் தொடர்ந்து பப்பில் நடந்த சம்பவத்தை சொன்னதும் திகைப்பும் பயமும் உண்டானது! கூடவே அஞ்சனாவிற்காக வருந்தவும் ஆரம்பித்தது அவன் மனம்!  ஆர்யமன்,

“உங்க கசின்ங்கிற அடையாளம் கூட இல்லாம ஆபிஸ்க்கு அனுப்பி வைச்சது தான் இத்தனைக்கும் காரணம்! முதல்ல அவளை ஊருக்கு மூட்டை கட்டுங்க!”,

அவன் செய்த தவறை ஆர்யமன் சுட்டி காட்டவும் ஹர்ஷவர்தனுக்கு மனக் குன்றல் வர...

“ஸ்யூர்! நான் இப்பவே பேசுறேன்”, என்று அவளை அழைக்க ஆயத்தமாக..

“இப்ப எதுக்கு?????”

“காலையில் பேசுங்க!!!”, என்றான் அதிகாரமாக!

தாமரை இலையும் தண்ணீரும் போல பட்டும் படாமலும் இருக்கும் ஆர்யமனின் கோபமும், அதிகாரமும் கலந்த இந்த பேச்சு ஹர்ஷவர்தனுக்கு வித்தியாசமாக பட்டது!

ஒரு வேளை அஞ்சனா மூலம் அதிகம் தொந்தரவு செய்து விட்டதால் இப்படி பேசுகிறானோ... யோசித்தவனுக்கு கம்பெனியையே கைமாறுவதற்குள் அவனுக்கு தான் எத்தனை சிக்கல்கள்! அதையே  வெளிபடுத்தியது கிடையாதே! 

அப்படியே அவனை பார்த்திருந்ததாலோ என்னவோ ஹர்ஷவர்தனுக்கு அவனின் இந்த அணுகுமுறை சுத்தமாக பிடிக்கவில்லை! அதிலும் அவன் சொன்ன கடைசி வரியை கேட்டதிலிருந்து,

‘என் கசின்கிட்ட எப்போ வேணாலும் பேசுவேன்! இவனுக்கு என்ன?’

என்ற கொக்கரிப்பு தானாக வந்தது!

ஹர்ஷவர்தனின் மன நிலை அறியவில்லை ஆர்யமன்! அவனிடம் பேசி விட்டு படுக்க சென்றவனை வாசுவின் அழைப்பு கலைத்தது...

“சொல்லுடா”, என்றவன்.. மறுமுனையில் அவசர கதியில் வாசு சொன்ன செய்தியில் அதிர்ந்தான்!

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.