(Reading time: 48 - 95 minutes)

ரியு!!!....ரியுமா….. கொஞ்சம் விழிச்சுக்கோயேன்…… உள்ள வந்து சாப்ட மட்டும் செய்துட்டு தூங்கிடு…..” அரையும் குறையுமாய் இது காதில் விழ….அதில் புரண்டு படுக்க முயன்று காரில் அதற்கு வாகுபடாததால் … மெல்ல விழித்துப் பார்த்தாள் ரியா…..

கார் கதவை திறந்து பிடித்தபடி இவளை அழைத்துக் கொண்டிருந்த விவன் கண்ணில் பட கூடவே தெரிகிறது இவர்கள் வீட்டு போர்டிகோ..

“ஹோட்டல் போகலையா…? நீங்க ஏன்பா சாப்டலை….? “ தூக்க கலக்கத்தோடே காரை விட்டு இறங்கியபடி இவள் கேட்க….

“அதெல்லாம் ஹோட்டல் போய் உன்னை எழுப்பி பார்த்தேன்….. நீ விழிக்கல….. சிற்பி சாரும் ராகாவும் அந்நேரம் கால் பண்ணாங்க…. அவங்க வெட்டிங் இன்விடேஷன் குடுக்க நம்ம வீட்டுக்கு வர்றாங்களாம்…. சரி இந்த டைம் வர்றாங்க…அவங்க கூட சேர்ந்து லஞ்ச் சாப்டலாம்னு எல்லோருக்கும் வாங்கிட்டு வந்துட்டேன்….” சொல்லியபடியே இவளோடு வீட்டிற்குள் வந்தான் அவன்.

“ஹேய்… அவங்க வெட்டிங் பக்கத்தில் வந்துட்டுல்ல….” என தன் சந்தோஷத்தை வெளிப் படுத்திக் கொண்ட இவள்…

தொடர்புடையவை: உங்களுக்கு இதுவும் கூட பிடிக்கலாம்... -

தீபாஸ்ன் "பெண்ணே என் மேல் பிழை" - காதல் கலந்த குடும்ப தொடர்....

படிக்க தவறாதீர்கள்..

திரும்பி அவன் முகத்தைப் பார்த்து….. “அவங்க வெட்டிங்க்கு நீங்களும் கூட வருவீங்கல்ல விவன்….” என ஆசையாக கேட்க..

”பின்னே என்னை இப்டி ஒரு கரண்டி ராட்சசிட்ட முன்ன நின்னு மாட்டி விட்டவங்களாச்சே…” என்று வருகிறது பதில்… அவன் முகத்தில் ஒரு அரை சிரிப்பும் கால் குறும்பும்..

வாயை இழுத்து அவனுக்கு இவள் பழிப்பம் காட்ட…. அவனோ கையிலிருந்த பார்சல் கவர்களை  டைனிங் டேபிள் மீது வைத்துவிட்டு….. சில ப்ளேட்ஸ் மற்றும் ஸ்பூன்ஸை எடுத்து வந்தான்…

“நீ இப்ப சாப்டுறு ரியு…. அவங்க இன்விடேஷன் குடுத்துட்டே வந்துட்டு இருக்காங்க…..வந்து ரீச் ஆக முன்ன பின்ன ஆகும் ….” என்றபடி ஒரு பார்சல் பாக்‌ஸை எடுத்து திறக்கவும் ஆரம்பித்தான்…

ஹேண்ட் வாஷ் செய்துவிட்டு வந்து அமர்ந்த ரியாவோ…. இரண்டு ப்ளேட்களை எடுத்து வைத்தவள்…..” நீங்களும் இப்ப கொஞ்சம் சாப்டுங்க…….தென் அவங்க வரவும் அவங்களுக்கு கம்பெனி கொடுக்கலாம்….” என்றபடி அடுத்த பார்சலை எடுக்க

“ப்ச்…அது சரி வராது ரியு….நீ சாப்டு....நான் அவங்க கூட சேர்ந்தே சாப்டுகிறேன்….இன்னும் கொஞ்ச நேரம் தானே….” என்றபடி இவள் அவனுக்காக எடுத்த  பார்சலை வாங்கி வைத்துவிட்டான் விவன். அதோடு இவளுக்கானதை ப்ளேட்டில் வைத்து இவள் முன்பாக வைத்தான்…

“டோக்ளாஸ்…..சாப்டு பாரு…நீ கேட்டது போல கொஞ்சம் இருக்கும்…. வெட்டா இட்லி போல ஸ்வீட்டா….” அவன் சொல்ல சொல்ல இவளுக்கு அதைப் பார்க்கவே ஆசையாக இருக்கிறது….

“சரி சாப்பாடு சாப்டலைனாலும் இதையாவது ரெண்டு பீஸ் சாப்டுங்க…..”

“இல்ல…… அது உனக்கு எவ்ளவு தேவை படுமோ…. நான் அப்றமா சாப்டுகிறேன்….” அவன் இன்னுமே பிடிவாதமாய் சொல்லியபடி டேபிளைவிட்டு விலகிப் போக…..

இவள் அவனுக்காக ஒரு பீஃஸை கையில் எடுத்திருந்தவள்… சட்டென ஃப்ளோ ஆஃப் ஆக்க்ஷனில் அவனை நிறுத்தும் விதமாக அவன் கையை நீட்டி பிடித்துவிட்டாள்…. பிடிக்கவும்தான் சட்டென உணர்ந்தவளாக……அவசரமாக தன் கையை அவள் உதறிக் கொள்ள…..

ரியாவின் இந்த தடுமாற்றத்தை முதன் முறையாக கவனித்தான் விவன்….

அவ எமோஷனாகிறப்ப அவனிடத்தில் அவள் இயல்பாக ஒண்டுவாள்…. முதல்ல ஹாஸ்பிட்டல்ல வச்சு ப்ரெக்னென்சி கன்ஃபார்ம்னு தெரியவும்….என்ன செய்வேன்னு இவன் கையதான வந்து பிடிச்சா….? அடுத்தும் கண்மணி வீட்ல வச்சு வாமிட் ஆனப்பவும்…..ரொம்ப முடியலைனதும் இவன் மேல சாய்ந்து கொண்டதும் உண்டு…..

இப்ப என்ன ஆச்சு இவளுக்கு…?

“கனவு எதுவும் கண்டியா ரியு….” எதாவது இது சம்பந்தமா கனவு வந்திறுக்குமோ என்ற நினைவில் அவன் கேட்க…

ரியாவுக்கோ….. தூக்க கலக்கத்துல கனவோட எஃபெக்ட்ல என்னை சாப்ட சொல்றியா என அவன் கேட்பதாக புரிந்து வைத்தது அது…

கனவு வந்தாதான் இவன கேர் எடுக்கனாமா நான்…. என அதில் கொஞ்சம் கோபமும் வந்து நின்றது அவளுக்கு…

ஆக “ம்….எங்க பூர்விக்கா  எப்பவும் சாப்ட முன்ன எங்க மிய்யூக்கு சாப்பாடு கொடுத்துட்டுதான் சாப்டுவாங்க….அது போலதான் இது…” என முகம் சிலுப்பினாள் அவள்…

“மிய்யூவா…?”

“ஆமா…அது அக்கா வளத்த குண்டு rat” என்றுவிட்டு டேபிள் நோக்கி வந்தாள் இவள்….

“என்னது rat ஆ?”

“ஆமா அசப்புல கொஞ்சம் உங்கள போல வேற இருக்கும்….” இன்னுமாய் தாக்கினாள்.

வாய்விட்டு சிரிக்க தொடங்கி இருந்தான் விவன்…

“எம்ப்டி ஸ்டொமக்ல ரொம்ப நேரம் இருக்காதீங்கன்னா…. ரொம்பவும்தான்…” என சலித்தபடி அவனுக்காக எடுத்திருந்த பீஸை இவள் வந்து மீண்டும் தட்டில் வைக்க….

இப்போது வேகமாக வந்து அதை எடுத்து தன் வாயில் வைத்துக் கொண்ட விவனோ  “உன் டெஸ்ட் rat சாப்டுட்டு தாயே….இனியாவது சாப்டு….” என்றபடி சிரித்தான்.

“க்கும்….”என தொண்டையை செருமியபடி…..”மே ஐ கம் இன்…” என இப்போது அறை வாசலில் நின்று கேட்டது ராகா….

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.