(Reading time: 48 - 95 minutes)

தன் பின் இவள் எதற்கும் நின்றிருக்க மாட்டாளாய் இருக்கும்….. ஆனால் எதிர்பட்ட மஞ்சிகையின் நிமித்தம் நிற்க வேண்டியதாயிற்று…… மஞ்சிகையின் முகமோ மெத்த அதிர்ச்சியில் விதிர்விதிர்த்து காணப்பட்டது……

“அ..ரச….. அவர் செல்லக்கிளியுடன்….. நான் இதை …..எனக்கு இது இப்படி என தெரியாது பெருமானே….” மஞ்சிகைக்கு மன்னரே களமிறங்குவார் என தெரியாது போலும்….

“தாங்கள்……மன்….வே…. பெருந்தகைக்கு….. அவருக்கு மணவினை……விவாஹ பேச்சு…..” என மீண்டுமாய் குழறிய மஞ்சிகை…….பின் அவளுக்கும் சந்தேகம் தோன்றும்தானே…….காளை இவளுக்கு கொடுக்கப்பட்டிறுக்க…..அதை மன்னர் அடக்குவதென்றால்?

ஆயினும் தன் நிலை உணர்ந்தவளாய்…” மன்னிக்கவும்…. இவ்வகை ரகசியத்தை நான் கேட்க கூடாது….” மன்னிப்பும் கேட்டாள் மஞ்சிகை…

“போர் பயிற்சிக்காய் கூட இதை விளையாடுவராமே…” எதையோ சொல்லி சமாளித்தாள் ருயம்மா…

தொடர்புடையவை: உங்களுக்கு இதுவும் கூட பிடிக்கலாம்... -

பிந்து வினோத்தின் "என்றென்றும் அன்புடன் - 02..." - காதல் கலந்த தொடர்கதை...

படிக்க தவறாதீர்கள்..

அந்த வினாடியே மகிழ்ச்சியின் ஒளி வெள்ளம் திரும்ப வந்துவிட்டது மஞ்சிகைக்கு….. “ஆம் அதுவும் உண்டுதான்…” ஒத்துக்கொண்டாள் அவள்.

மற்றவரிடம்  செல்லக்கிளி எத்தனை ஆர்பாட்டமாய் சீறுகிறது….? எந்த சூழலிலும் மஞ்சிகையிடம் மட்டும் குழையும் அதை அவளிடம் இருந்து எதற்காக பிரிப்பதும் படு நியாயமற்றதாய் தோன்றுகிறது ருயம்மாவுக்கு….

ஆக சற்று நேர சம்பாஷணைக்குப் பின்…. “செல்லக்கிளி மேல் உனக்கு எத்தனை பிரியம் என எனக்கு தெரியும் மஞ்சிகை….அதை எனக்கு கொடுப்பதென்றால்…..நிச்சயமாய் உன் இதயத்தில் எனக்கான இடம் புரிகின்றது…..ஆயினும் நீயே சிந்தித்துப் பார்…..எனக்கு காளைகள் பற்றி எதுவும் தெரியவில்லை….இங்கு அதை நான் எவ்வாறு பராமரிப்பேன்…. அதை பராமரிக்கும் உதவியை நீ எனக்கு செய்வாயா….?” என மஞ்சிகை மனம் ஒப்பும்படி பேசி…. செல்லக் கிளியை அவளிடமே ருயம்மா தேவி ஒப்படைத்து முடிக்கும் போது மானகவசர் இவள் அருகில் வந்திருந்தார்…..

ருயம்மாவிற்கு அவர் மீதிருந்த சினத்தில் அவர் வரும் முன்னும் எங்காவது சற்று தூரம் சென்றுவிட வேண்டும்…..சற்றாவது அவர் தேடி அலையட்டும் என்றெல்லாம் இருந்தது சினம்…

இப்பொழுது என்ன செய்வாளாம்…?

முறையாய் பொன்னி வச்சான் மஞ்சிகையிடம் விடைபெற்று மானகவசரிடம் மட்டும் முகம் கொடுத்தும் பேசாமல் தாங்கள் தங்கி இருக்கும் இடம் வந்து சேர்ந்தாள் பெண்…

இருவருக்கும் அமர்ந்து பேசும் சூழல் உண்டாகவும்….”ஏது ருயம்மரே ஏன் இத்தனை சினம்?” என புரியாது வினவினான் பாண்டிய வேந்தன்….

“இத்தனை விபரீதமான காரியத்தை தாங்கள் செய்வீர் என நான் சற்றும் எதிர்பார்க்கவில்லை….” என கிடைத்தது அவரது கேள்விக்கு விடை….

 “இது ஒன்றும் விபரீத காரியமில்லை ருயமரே……ஏறுதழுவலுக்குப் பின் பல நியாயமான காரண காரியங்கள் இணைந்தே கிடக்கின்றன…..” என கூறியபடி……அருகிலிருந்த இருக்கையை அவளுக்கு சுட்டிக் காண்பித்தான் மானகவசன்….

“ பொறுமையாய் கேட்டால் ஏற்ற விளக்கம் கொடுக்கிறேன்….” எதிர் இருக்கையில் சென்று தானும் அமர்ந்து கொண்டான் மன்னன்….

இருக்கையில் அமர்ந்த ருயம்மா வதனத்தில் அப்பட்டமான திருப்தி இன்மை….. எந்த காரணமும் இதை நியாயபடுத்த இயலும் என அவளுக்கு தோன்றவில்லை….

‘வேட்டைக்கு செல்பவனுக்கு கூட ஆயுதம் இருக்கும்…..இங்கு அதுவும் கிடையாதாம்….. விளையாட்டு எனும் பெயரில் ஒரு தற்கொலை முயற்சி இது…

சரி அப்படி ஒரு விளையாட்டு என வைத்துக் கொண்டாலும்…. அதை விளையாடிவிட்ட ஒரே காரணத்திற்காக தன் மகளை மணமுடித்து கொடுத்துவிடுவாராம் இங்குள்ள பெற்றோர்…. இது விபரீதமில்லையா?’ என்பது அவள் சிந்தனை….

இருப்பினும் விளக்கம் தருகிறேன் என்பவரிடம் பொறுமை கடை பிடிக்காமல் போவதெப்படி…? அதோடு எது எப்படியாயினும் காளையிடம் இந்த பராக்கிரமர் மல்லிட்டது இவளுக்காகவே….. ஆக வாயை மூடி செவிகளை திறந்து வைத்து…..சுத்த சினத்தோடு அமைதி காத்தாள்…..

“தங்களது பாட்டியார் ருத்ரமாதேவி…..வேடர்களாக பிற தேசம் சுற்றி அலைந்த உங்களது மக்கள் கூட்டத்திற்கு விவசாய நிலம் கொடுத்து…..அந்நிலத்திற்கு நீர் பாசன வசதிகளும் செய்துவித்து…..அதன் மூலம் மக்களை அங்கு குடி அமர்த்தி தேசத்தை விஸ்தரித்தார் என கேள்வியுற்றேன்…..” தனது விளக்கத்தை இவ்வாறு துவங்கினான் பராக்கிரமன்….

“ஆம் சில தலைமுறைகளுக்கு முன்புவரை நாங்கள் வேடவர்கள்….நிலையாய் எங்கும் தங்குவதுமில்லை…..” ஒப்புக் கொண்டாள் ருயம்மா தேவி….

“ம்….எந்த தேசத்தின் துவக்கத்தை ஆராய்ந்தாலும் இவ்வாறுதான் இருக்கும் ருயமரே….. நாடோடிகளாய் இடம் பெயர்ந்து கொண்டே இருந்த ஒரு கூட்ட மக்கள்……ஒரு குறிப்பிட்ட எல்லையில் குடியேறும் போது தேசம் பிறக்கின்றது….”

“ஆம்…” அதை ஆமோதித்தாள் ருயம்மா….

“அவ்வாறு நாடோடிகளாய் இருப்பவர்களும்…அப்போதுதான் நாடோடி முறையிலிருந்து ஒரு புது இடத்தில் குடி வந்திறுப்போரும்  தங்கள் பெண்களை வேறொரு கூட்டத்தை நம்பி  பெண் கொடுப்பதில்லை…..ஏனெனில் யாரோ ஒரு கூட்டத்தோடு எவ்வாறு தன் மக்களை அனுப்பி வைப்பதாம் என்ற நிலை…. அம் மக்களின் விவாஹ காரியங்கள் அனைத்தும் தங்கள் குழுவிற்குள்தான் இருக்கும்…..அதோடு அவர்கள் தங்கும் இடமெங்கும் பாதுகாப்பின் நிமித்தம் தாத்தன்….சித்தப்பன்.. பெரியப்பன்…. சகோதரன் தமையன் என தங்களது மொத்த குடும்பமாகவே தங்கியுமிருப்பர்…..”

“ம்…” அதற்கும் இந்த ஏறுதழுவலுக்கும் என்ன சம்பந்தம் என புரியாத நினைவோடு கேட்டிருந்தாள் ருயம்மா….

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.