(Reading time: 48 - 95 minutes)

ரெண்டு நாளைக்கு முன்னால வரை அவ இவனுக்காக பாம்பை கைல பிடிச்சுட்டு கூட…. உன் மேல எனக்கு எதுவுமே இல்லன்ற மாதிரி நடந்துகிட்டதை அவனால் ஏற்று கொள்ள முடிந்தது….

சரி புரியாம இருக்கா என எடுத்துக் கொண்டான் அதை….

ஆனால் லாஸ்ட் டூ டேஸா இவன் கூட வார்த்தைக்கு வார்த்தை மல்லுகட்டி….ஸ்கூல் டேஸ் லெவல்ல விளையாட வரைக்கும் செய்துட்டுதானே இருக்கா…. அதுவும் இப்ப இவன் அவள லவ் பண்றேன்னு ஒத்துக்கவா சொன்னான்…? இவ்ளத்துக்கு பிறகும் ப்ரெண்டுன்னு கூட ஏத்துக்க மாட்டேன்னு சொன்னா எரிச்சல் வருதுதானே…..

 அவள் தன்னை நட்பாக கூட சேர்த்துக் கொள்ள மாட்டேன் என்றுவிட்ட கோபம் அவனுக்கு..

ஆனாலும் கோபத்தை போய் அவட்ட காமிச்சு என்ன செய்யவாம்?

ஆக அதை அடக்கிப்போட்டு

தொடர்புடையவை: உங்களுக்கு இதுவும் கூட பிடிக்கலாம்... -

தமிழ் தென்றலின் "என் சிப்பிக்குள் நீ முத்து..." - காதலும் நட்பும் கலந்த குடும்ப தொடர்....

படிக்க தவறாதீர்கள்..

“அதென்ன உன் LIP தியரி…?” என அடுத்த விசாரணைக்குப் போனான்….. ஆனால் அவனது இந்த குரலில் வழக்கமான இதம் அண்ட் கூடவே இருக்கும் கெஞ்சல்…… ஆமா பெரும்பாலான நேரம் இவ அவனை கெஞ்சவிட்டுட்டுதானே இருக்கா…. அதெல்லாம் மிஸ்ஸிங்…

திட்டு திட்டாய் மிச்சமிருந்த கோபம் காரணம்…

இப்டி ஒரு குரல்ல அவன் பேசினா இவ மட்டும் எப்படி பதில் கொடுப்பாளாம்?

“அதான் Live in the present தியரி…. “ எதோ போனா போகுது ரேஞ்சில் பதில் சொன்னாள் இவள்…. அவன் புறம் திரும்ப கூட இல்லை….

காரை செலுத்திக் கொண்டிருந்தவன் திரும்பி இவளைப் பார்ப்பது இவளுக்கு புரிகிறது….

“எது பிடிக்கலையோ அதை அப்டியே மறந்துட்டு இந்த நிமிஷத்துல வாழ்றது” இன்னும் கூட அவன் புறம் திரும்பாமல் விளக்கம் கொடுத்தாள்…

“இங்க பாரு ரியு…..லிவ் இன் தெ ப்ரெசென்ட்லாம் நல்ல விஷயம்தான்…… ஆனா அதுக்கு அர்த்தம் பிடிக்காதத நினைக்காம ப்ரெசென்ட்ல வாழ்றதுல இல்ல….. எது பிடிக்கலையோ எது கஷ்டமா இருக்கோ அதை பேசி சால்வ் பண்ணிட்டு…. அப்றமா ப்ரெசெண்ட்ல வாழ்றது…

இப்டி உன்ன போல பிடிக்காதத நினைக்காம அன்ரிசால்வ்டா தூக்கிப் போட்டா அது மனசுகுள்ளதான் எங்கயாவது சேர்ந்துட்டே போகும்…..ஒரு வகையில இல்லனா இன்னொரு வகையில அது மனசுக்கு ப்ரெஷராகிட்டே போய்….. எதோ வகையில் கண்டிப்பா எக்ஸ்‌ப்ரெஸ் ஆகும்…. அப்டி எக்‌ஸ்ப்ரெஸ் ஆகுறது எப்பவுமே உனக்கு நல்லது செய்ற ரேஞ்சில் இருக்காது…..” அவள் கொள்கையில் தனக்கு உடன்பாடு இல்லை என்பதை கொஞ்சம் ஸ்டெர்ன் வாய்சில்  தெரிவித்தவன்…..

“நிறைய ப்ரச்சனை மனசை டிஸ்டர்ப் செய்துச்சுன்னாகூட கனவு வரும்னு பைபிள்ள இருக்கு…..பாரு உனக்கும் கனவு வேற ஒரு ப்ராப்ளமா இருக்குது…..” என கருத்து சொல்லி முடிக்க….

ரியாக்கு இப்போது சிடு சிடுக்கும் அளவுக்கு ஜிவ் என கோபம் வந்திருந்தது….. பின்னே அவளுக்கு தெரிஞ்சு சின்ன வயதிலிருந்து ஹெல்ப் செய்யும் ஒரே டெக்னிக் இதுதான்…. அதோட இவன் இப்ப எதோ ரொம்ப அக்கறை போல கனவ பத்தியெல்லாம் பேசிட்டு இருக்கான்…..

முதல்ல இவன் மேல இருந்த வில்லன் இமேஜ்ல……இவளாவே சைக்கிக் செலக்ட் செய்தாதான்…. அந்த டாக்டரை மீட் பண்ண போனப்ப கூட கனவ இவன்ட்ட பேச பிடிக்காம…இவனை வெளிய விட்டுட்டு போனாதான்….. ஆனா போன டைம் அவர பார்க்கப் போனப்ப இவனை இவளே கூட வர சொன்னா…… அதுவும் கனவ பத்தி பேச்சு வர்றப்ப எப்படி இருக்குமாம்…..ஸ்டில் வர சொன்னா… ஆனா வந்தானாமா?

வழக்கம் போல நான் இங்கயே வெயிட் பண்றேன்….நீ போய்ட்டு வான்னு கார்லயே உட்கார்ந்துகிட்டான்….. கைனக்காலஜிஸ்ட்ட மட்டும் பார்க்க வர்றான்…. சைக்கியாட்ரிஸ்ட்ட பார்க்க வரலை…. குழந்தை மட்டும்தான் முக்கியம் இவனுக்கு…….இவ இல்ல…. இதுல இப்ப வந்து பெருசா அக்கறை போல கருத்தெல்லாம் பறக்குது….

“எனக்கு என் அம்மா அப்பா, ஆனந்தப்பா…. ஏன் இப்ப பூர்விக்கா மாசி அண்ணா வரைக்கும் யார் இல்லாம போனப்பவும் ஹெல்ப் செய்த ஒரே விஷயம் இதுதான்…..நீங்க ஜஸ்ட் இப்ப வந்தவங்க….” வார்த்தையால் ஒரு குத்து குத்திவிட்டு கண்களை இறுக மூடி சீட்டில் சாய்ந்து கொண்டாள் ரியா…

அவ என்னத்தையும் சொல்லிட்டு போகட்டும்…..பட் டிஸ்டர்ப் ஆகுறா என தெரியவும் தன் மொத்த கோபத்தையுமே விட்டுவிட்டான் விவன்…

வேக வேகமாக மூச்செடுத்தபடி கண் மூடி சாய்ந்திருந்தவளை ஒரு நொடி பார்த்துக் கொண்டவன் அப்படியே அமைதியாக இருந்துவிட்டான்…. கொஞ்ச நேரம் இப்டியே இருந்தா கோபம் அடங்குமே…..அவளும் ரிலாக்‌ஸ் ஆகிடுவாளே….

சற்று நேரம் இப்படியே மௌனமாக கார் பயணம் தொடர….

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.