(Reading time: 48 - 95 minutes)

னால் பாண்டியர்கள்….. இன்றைய பாண்டியம் மட்டுமல்ல…..மொத்த தமிழ் தேசமே….. அவ்வாறு நாடோடியாய் அலையாமல் ஓர் இடத்தில் குடியேறி…..விவசாயம்…வணிகம் என தகவமைந்து பன்னெடுங் காலமாகிறது….”

இதையும் ஏற்கனவே கேள்வியுற்றிருந்த ருயம்மா மானகவசரின் வதனத்தையே கண்ணோக்கி இருந்தாள்.

“ஓர் இனம் நிலையாய் ஓரிடத்தில் குடியேறும் போது இத்தகைய மாற்றங்களும் இயல்பு….உங்களுக்கும் இப்போது அந்த புது குடியேற்ற பகுதியில் நகரம் கிராமம் வணிக பகுதி என எல்லாம் இருக்கின்றது தானே….. அப்படியான அமைப்பு…..அதாவது நகர நாகரீகம் தமிழகத்தில் தோன்றியே ஆயிரம் ஆயிரம் காலமாகிறது….. ஐம்பது தலைமுறைக்கும் மேலாய் என் மூதாதையர் ஆட்சி செய்வதாய் குறிப்புகள் இருக்கின்றன….அதற்கும் முன்பே எத்தனை தலைமுறையாய் தமிழகம் உள்ளதோ….?! இப் பிராந்தியத்தில் தமிழர்களே ஆதி குடிகள்…..அப்போதிருந்து நாங்கள் நகர நாகரீகத்தை பின்பற்றுபவர்கள்…”

இத்தகவல் நிச்சயமாய் பிரமிப்பை உண்டு செய்தன ருயம்மாவுக்குள்…. ஐம்பது தலைமுறையாய் அரசர்களாய் இருப்பதென்றால்….. ? ஏறத்தாழ ஈராயிரம் ஆண்டுகளாவது அரசாட்சி அனுபவம்……ஏன் மானகவசரது எல்லா சிந்தையிலும் ராஜ்ய நிர்வாகமே பிரதானபடுகிறது என்பது புரிந்தாற் போலிருக்கிறது அவளுக்கு…

வேந்தனோ விளக்கத்தை தொடர்ந்தான்….

தொடர்புடையவை: உங்களுக்கு இதுவும் கூட பிடிக்கலாம்... -

பிந்து வினோத்தின் "என்றென்றும் அன்புடன் - 01..." - காதல் கலந்த தொடர்கதை...

படிக்க தவறாதீர்கள்..

“நகர நாகரீகம் என வரும்போது நாடோடி முறையிலிருந்த குடும்ப அமைவிலிருந்து பெரும் மாற்றம் வருகின்றது…. நகர நாகரீகத்தில் பாதுகாப்பிற்கு குறைவில்லை….. ஆக எல்லோரும் மொத்த குடும்பமாய் ஓரிடத்திலேயே தங்க வேண்டிய கட்டாயமில்லை….

ஒவ்வொருவரும் தேசத்தின் ஒவ்வொரு புறம் சென்று விரும்பிய தொழில் செய்து வாழ்வமைத்துக் கொள்ளவும் வளப்படவும் வாய்ப்பிறுக்கிறது…..

ஆகையால் இங்கு ஒரு வழமை  இருக்கின்றது…. வயது  வந்த எவ்விளைஞனும் இங்கு தொழில் துவங்கவும் --- பதினெட்டாம் அகவையில் தொழில் துவங்கலாம் என்று கூட பழக்கம் கடைபிடிக்கபடுகிறது --- அவ்வாறு தொழில் துவங்கவும்…. அவனுக்கு மணம் முடித்து அவனையும் அவனது மனைவியையும் அவர்கள் தொழிலுக்கு ஏற்ற பகுதியில் பெற்றவர்களே தனியாய் குடி அமர்த்திவிடுவார்கள்….  தனி குடித்தனம் தமிழர் பாரம்பரியம்……. “ மானகவசர் விளக்க…

“ஆம்…. நான் கேள்வியுற்ற தமிழ் பெருங்காப்பியங்களில் ஒன்றான சிலப்பதிகாரத்தில் இதை நான் கவனித்ததுண்டு…” ருயம்மாவின் விடையில் பராக்கிரமன் வதனத்தில் மெச்சுதலின் சாயல்….

“சிலப்பதிகாரம் என்று மட்டுமில்லை….இங்குள்ள பல சங்க இலக்கியங்களில் இதை காண முடியும்…. அது எங்களது வாழ்வு முறை…. அத்தகைய முறையில்…..அதாவது பெண்ணை மணமுடித்து பார்வைபடும் எல்லைக்குள் நிறுத்திக் கொள்ளாமல்….. ஒரு ஆண்மகனை மாத்திரம் நம்பி அவனோடு தனியே அனுப்ப வேண்டிய சூழலில்….

அவன் தன் மகளை பாதுகாக்க தகுதியானவனா……? உழைப்பாளியா….? உழைத்து பொருளீட்டி தன் மனைவி மற்றும் சந்ததியை பேணுவானா…..? தன் மகளுக்காய் எதையும் செய்யுமளவு அவளை பிரதான படுத்துபடுத்துவானா….? என்றெல்லாம் பெண்ணிற்கான மணவாளனை குறித்து அறிந்து கொள்ள பெற்றவருக்கு வாஞ்சை ஏற்படுவது இயல்பு தானே…. அவ்வாறு மணமகனை சோதிக்க உண்டானதே ஏறுதழுவும் முறை….” என விளக்கிய மானகவசன்

“ஏன் ருயமரே உமக்கு ஒரு மகள் பிறந்து அப்பெண்ணுக்கு இவ்வாறு விவாஹம் என்றால் நீர் அம் மணமகனை சோதிக்க விரும்ப மாட்டீரா? நானானால் நிச்சயமாய் ஒன்றுக்கு ஏழு முறை சோதிப்பேன்….” என அடுத்தும் கூற….

எப்படி இருக்கிறதாம் இவளுக்கு….? கண நேரத்தில் மனக்கண்ணில் மானகவசரை மலர்மாலையுடன் இவளருகில் மண கோலத்தில் கண்டு…..

அடுத்த காட்சியில் பாவை இவளின் இட்டிடையை அவரது இரும்புக் கரம் பின்னிருந்து இறுக அணைப்பதை  ஏக மிரட்சியோடு சுவாசம் தடைபட மானசீகமாய் கண்ணுற்று….

தொடர்ந்த காட்சியில் பால் மணம் மாறா பச்சிளம் மழலையை இவள் தாய்மையில் அணைத்திருக்க…..அடுத்த நிகழ்வில் தங்க சிலம்பிட்ட சிறுகால்கள் இரண்டு மானகவசர் வெற்று மார்பில் ஊன்றவும் உதைக்கவுமாய் விளையாட….. இருகரம் உயர்த்தி அப் பிஞ்சு மகளை தன் வதனத்திற்கும் மேலாய் பிடித்தபடி அவர் எதோ சிரித்தபடி சொல்லி இருக்க….

பின் வந்த காட்சியில் இவள் சாயலிலிலும் அவர் கம்பீரத்திலுமாய் ஒரு சிறு பெண் இடையில் கையூன்றி நின்றபடி தன் தந்தையான மானகவசரிடம் எதையோ விவாதிக்க….. வதனத்தில் பெரிமிதம் துலங்க இதழில் சிறு நகை தவழ பராக்கிரமர் அப்பெண்ணிடம் விகடம் பேச…..சிணுங்கிய அப்பெண் தலை சிலிப்பியபடி இவளருகில் வந்து நிற்க…. சின்னதாய் ஒரு செல்ல அடி இவள் அவளின் தோளில் வைக்க….. இப்பொழுது இவள் நோக்கிய சின பாவத்துடன் அப்பெண் அவளது தந்தையின் அருகிலே சென்று அமர்ந்து கொள்ள…

அடுத்த காட்சியில் இன்னுமாய் வளர்ந்துவிட்ட இவர்களது செல்லமகள் கழுத்தில் மணமாலையுடன் நடந்துவர…

இப்போது அவசரகதியில் தன் தலையை அசைத்து மனதில் ஓடும் சிந்தனையை வேக வேகமாக கலைத்தாள் ருயம்மா….

இறைவனே!!!!! கண்ணிமைக்கும் நேரத்தில் எதையெல்லாம் இவளை கண்டுவர செய்திட்டார் இம்மானகவசர்…?

இவள் திகைப்பாய் தகிக்க….. தித்திப்பாய் ஸ்தம்பிக்க….

“என்ன ருயமரே…” என இப்போது விளித்த பராக்கிரமரது குரலில்  தலைகாட்டுவது விஷமமா நையாண்டியா?. “எங்கு சென்றுவிட்டீர்….மகளின் விவாஹத்திற்கா….? முதலில் மகளுக்கு வழி செய்வோம்…பின் அவளின் விவாஹத்தை சிந்திப்போம்….” என அதே தொனியில் அவர் தொடர…

‘எது? மகளுக்கு வழி செய்வதாமா? என்ன பேசுகிறார் இவர்?!!!’ என்ற அதிர்ச்சியில் விக்கல் வந்து நிற்கிறது இவளுக்கு…. ஹக்….விக்கினாள் பெண்… பூதம் கண்ட பாவையென விழிக்கவும் செய்தாள்….

“விவாஹம் முடிந்தால்தானே உமக்கு மகள் வர இயலும்….. ருயம்மாவிற்கு மணமானால்தானே தமையனான நீர் மணமுடித்துக் கொள்வீர்….. ஆக முதலில் ருயம்மாவுக்கும் எனக்குமான விவாஹத்திற்கு வழி செய்வோம் என்பதைதான் அவ்வாறு குறிப்பிட்டேன்…. நீர் என்ன நினைத்தீர்….? ”என தன் வார்த்தைகளுக்கு இப்படி ஒரு விளக்கம் கொடுத்தவண்ணம்….

அருகிலிருந்த குடுவையிலிருந்து  குவளையில் கனிரசம் சாய்த்து இவளுக்கு பருக கொடுத்தான் மானகவசன்.

 இவர் தான் யார் என தெரிந்திருப்பதால்தான் இத்தனையாய் தன்னை சீண்டும் படியே சம்பாஷிக்கிறாரா…? அல்லது இவளை தன் வரும்கால மனைவியின் சகோதரன் என நினைத்து சற்று விளையாட்டுத்தனமாய் மானகவசர் பேசுவது இவளுக்கு இப்படியாய் தோன்றுகிறதாமா?

எது எப்படியாயினும் அவராய் இதைப் பற்றி சொல்லாத வரை இவள் அவர் மனதிலிருப்பதை அறிந்து கொள்ள வழியே இல்லை…. இவ்வாறாய் மனதிற்குள் அலையாடினாள் காகதீய கன்னி.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.