(Reading time: 48 - 95 minutes)

ன்னதான் குழந்தை என் பொறுப்பு என்ற அடிப்படையில் விவன் இவளை திருமணம் செய்திருந்தாலும்….. ப்ராக்டிகல் லைஃப் என ஒன்றிருக்கிறதே…..குழந்தை பிறந்தபின் தினசரி வாழ்க்கையில் இவள்தானே குழந்தையோடு அதை எதிர்கொள்ள வேண்டும்….. ஸ்கேன் கைனகாலஜிஸ்ட் டெலிவரி என இதெல்லாம் அவளுக்கு  அந்த சூழ்நிலை சமீபத்தில் வந்து கொண்டிருப்பதாய் சத்தமின்றி உணரவைக்கின்றன……

ஒழுங்காக முறையுடன் கணவன் மனைவியாய் இருப்பவர்களே சமூகத்தால் சங்கடப்பட……. இப்படி ரெடிமேட் தம்பதிகளான இவர்கள் எந்த அளவுக்கு புரிந்து ஒத்துழைத்து குழந்தை விஷயத்தில்  சமூகத்தை எப்படி எதிர் கொள்ள போகிறார்கள்  என்ற இருண்ட பயம்….

தினம் தோறும் அந்த குழந்தையிடம் அதற்கு சற்றும் சம்பந்தமில்லாத இந்த விவனை அதன் தகப்பன் என இவள் எப்படி பொய் சொல்ல போகிறாள் என ஊமை தவிப்பு…

எல்லாவற்றிற்கும் மேலாய் குழந்தையைப் பார்த்து விவன் இது யார் குழந்தை என நினைத்தால் கூட போதுமே…..இவள் செத்துவிட மாட்டாளாமா? மரண அலைகழிப்பு…..

இப்படி எல்லாம் சேர்ந்து இனம் புரியா ஒரு பாடனுபவித்தலை அவளுக்குள் உண்டு செய்திருக்க…..

தொடர்புடையவை: உங்களுக்கு இதுவும் கூட பிடிக்கலாம்... -

தேவியின் "பாயும் மழை நீயே..." - காதல் கலந்த தொடர்கதை...

படிக்க தவறாதீர்கள்..

ஆனால் விவன் வெகு இயல்பாக அது நம் குழந்தை என குறிப்பிட்ட ஒவ்வொரு முறையும்….  அவன் மானசீகமாய் குழந்தையை தனதாக்குவதாய்  புரிதல்….. இவளுக்கோ மனதால் ஒரு மனிதன் குழந்தைக்கு தகப்பனாக முடியாதாமா என்ற ஒரு ஆத்மார்த்த அறிதல்……

ஆனந்தப்பா  எல்லோர்ட்டயும் எனக்கு ரெண்டு பொண்ணுங்கன்னுதான் சொல்வாங்க…. இவள என் செகண்ட் டாட்டர்னுதான் இன்ரிட்யூஸ் செய்வாங்க….

அது ஒரு பொய்யாய் இவளுக்கு தோன்றியதே இல்லை….. அப்படியேதான் விவனும் பொய்யில்லை என்ற ஆணித்தர புரிதல்…...

அதோடு குழந்தையோ இவளோ விவனோ யாருமே சமூகத்தை தனியாய் எதிர்கொள்ள போவதில்லை… மூவராய்த்தான் கையாளப் போகிறார்கள்…. இவர்கள் ஓர் குடும்பம் என்ற ஒரு இணைவின் நிலை…..

 இதைத்தான் விவனது ஒவ்வொரு செயலிலும் வார்த்தையின்றி உணர்ந்து,  இவள் மனம் அதாகவே அமர்ந்தும் குளிர்ந்தும் போனதும்…. இப்போது இவள் வாயாலயே வந்துவிட்ட உங்க பாப்பா என்ற பதமும்….அதில் ஆயிரம் கை பரப்பும் ஆதவனாய் விவன் முகம் விரிந்த விதமும் அந்த நிம்மதியை நிரந்தரமாக்கிப் போட்டது….

அதோடு இவளது ஸ்கேன் ரூம் தவிப்பிற்கான காரணம் இதுதான் என்பதையும் உணர்த்திப் போட்டது….

அவன் மீது உருகி நின்றிருந்த மன நிலை காரணமாகவோ என்னவோ…… ரொம்பவும் டெலிகேட் விஷயம் என்றாலும்…….இவளையே பார்த்திருந்த விவனிடம் இதை மனம்விட்டு பேசிவிட்டாள் ரியா..

“பேபி பிறக்கவும் உங்கட்ட கொடுத்துட்டு சூசைட் செய்துடனும்னுதான் விவன் நினச்சிறுந்தேன்….” இவள் தொடங்க அவன் முகத்தில் வந்த பாவத்தைப் பார்க்க வேண்டுமே…..

“ப்ச்…..இப்ப இல்லப்பா….” அவள் அவசரமாய் ஆறுதல் சொல்ல….அதற்குள் அவளது கையை எடுத்து தன் கைக்குள் பொதிந்திருந்தான் அவள் கணவன்….

இது போதாதாமா…? அவன் பாச ஸ்பரிசத்துக்குள் மொத்தமாய் கரைந்தவள்

“ஆனா அப்படில்லாம் செய்ய கூடாதுன்னு முடிவ மாத்திகிட்டாலும் ப்ராக்டிகலா எப்படி இந்த பேபி, சொசைட்டி எல்லாத்தையும் ஃபேஸ் செய்ய போறனோன்னு என்ன அறியாம ஒரு பயம்….” என தொடர்ந்து,

ஸ்கேன் சம்பந்தமான அவளது அனைத்து தவிப்பு…..இப்போது அவள் விவனால் எப்படி பெட்டராய் ஃபீல் செய்கிறாள் என்பது வரையும் சொல்லிவிட்டாள் ரியா…..

பேச்சு முடியும் போது….இவளது இரு கைகளும் அவனது கைகளுக்குள் பத்திரமாய் பொதியப்பட்டு இருந்தன….

பேசும் இவளையே கண்ணோடு கண்ணாய் அதுவரையும் பார்த்திருந்தவன்….. இப்போது தன் வலக்கை நீட்டி அவள் தலையில் கைவைத்து….. சின்னதாய் அசைத்து…”இப்டி நினச்சுறுக்கியே நீ….” என பாசமும் பரிதவிப்புமாய் ஆதங்கப்பட்டுக் கொண்டான்..…

அடுத்தும் “நீ உங்க ஆனந்தப்பாட்ட வளந்தவ…. நான் எங்க பெரியப்பாட்ட…..நம்மளால கூடவா ஒரு குழந்தைய மனசால அடாப்ட் செய்ய முடியாம போய்டும்…” என ஒரு ஆறுதல் சொல்லி…….

”இனிமேலாவது இப்டில்லாம் குழப்பிக்காம இரு ரியு….எதுனாலும் உனக்கு ஹெல்ப் பண்ண எப்பவும் நான் இருக்கேன்…” என ஒரு உத்தரவாதமும் கொடுத்து வைத்தான்.

எப்போதையும் விட இப்போது இவளால் அவ் வார்த்தையை முழுவதுமாகவே நம்ப முடிகின்றது…..

சிறு புன்னகையுடன் அவனுக்கு சம்மதமாக இவள் தலை அசைத்து வைக்க….. இப்போதோ “பசிக்குதுதான…? எதாவது சாப்டலமா ரியு…?” என இவள் நிலை உணர்ந்து அடுத்த கேள்வி கேட்டான்.

அவளோ மேலும் கீழுமாய்….பின் இடமும் வலமுமாய் தலையை ஆட்டி வைத்தாள்….

“ஈர இட்லிதான் வேணுமா…? “ அவன் ஒருவிதமாய் கேட்க…

படு பரிதாப முக பாவத்தோடு அவள் அதற்கும் ஆம் என தலையாட்ட…

“ம் விவன் பாப்பல்ல ரியுட்ட விளையாடி பார்க்கத்தான் செய்யும்……ஆனா அப்பா நான் சரியா ரெஃப்ரி வேலை செய்து ரெண்டு  பேரையும் சமாளிச்சுப்பனாம்….” என்றபடி காரை கிளப்பினான் அவன்…

அவன் சொன்னவை இவளுக்கு எத்தனையாய் பிடித்திருந்ததென சொல்ல தேவையில்லை….

அவள் தன்னையே பார்த்திருப்பதை உணர்ந்த விவனோ…..” உன் ஈர இட்லிக்குத்தான் போறோம்……கொஞ்சம் தூரம் அதிகம்….” என அவளுக்கு விளக்கம் கொடுக்க….. நிம்மதியாக கார் சீட்டில் சாய்ந்து கண் மூடிக் கொண்டாள் இவள்…

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.