(Reading time: 35 - 70 minutes)

ருயம்மா தேவி இப்பொழுது காகதீய கோல்கொண்டாவில் உலவிக் கொண்டிருந்தாள்….அது ஒரு மாலை நேரம்….அவள் கையில் பொன்னிவச்சான் மஞ்சிகைக்கு பரிசமிட கொடுத்திருந்த கடகங்கள்….

மஞ்சிகை எப்போதோ மன்னனிடம் திரும்ப தந்துவிட்டாளாம்…. இவளிடம் அதை ஒப்படைத்தது மானகவசன்.

‘அவர்  கைபட்ட கடகங்கள்….’ ஒரு பெரு மூச்சுடன் தன் கடகங்களை மென்மையாய் தடவிக் கொண்டவள்….தன் நெற்றியிலிருந்த சுட்டியை இப்பொழுது மையலாய்  ஒரு வருடல்….

அது பராக்கிரமரின் பரிச பொருள் என குறிப்பிட தேவையில்லை….

பின் மீண்டுமாய் நடையை தொடர்ந்தாள்…

இவளது தோளை தட்டியபடி வந்து நின்றாள் மும்மி…. “ ருயம்மி நீ இவ்வாறு திரும்பி திரும்பி நடப்பதற்கு பதில்….தெற்கு நோக்கி நேர்கோட்டில் நடந்திருந்தால் என்றோ செண்பகபொழில் சென்று சேர்ந்திருப்பாய்… உன்னவருக்கும் இந்த பிரயாண பாடு மிச்சம்….”   இடக்கு செய்யும் தங்கையின் கடமையை அவள் சரி வர நிறைவேற்ற….

அவளுக்கு சுள்ளென ஒரு அடிவைத்த ருயம்மா தேவியோ….” அவர் இந்நேரம் பிரயாணத்தில் இருப்பார்…”. என எதோ துவங்கியவள்…. “உனக்கு எல்லாம் விளையாட்டாக தெரிகிறதென்ன…?” என என்னதாகவோ முடித்துவிட்டு சற்று விலகிப் போய் முன்பொருநாள் கோட்டையில் மானகவசரை சந்திந்த பகுதியில் சென்று அமர்ந்து கொண்டாள்…

அவர்களது கடந்தகால சந்திப்புகளை பற்றி நினைந்தபடி மானகவசருக்காக காத்திருக்கலானாள் ருயம்மா தேவி….

தொடர்புடையவை: உங்களுக்கு இதுவும் கூட பிடிக்கலாம்... -

சித்ராவின் "பச்சைக் கிளிகள் தோளோடு..." - காதல் கலந்த கிராமத்து குடும்பக் கதை...

படிக்க தவறாதீர்கள்..

திருப்தியாய் தூங்கிய உணர்வின்றி கண் கரிக்கவே விழித்துக்கொண்டாள் ரியா…. ஆனாலும் விழிக்கவும் மனதிற்குள் விரிய விரிய பரவுகிறது ஒரு அழகிய சிறகடிப்பு…. காரணம் வேறொன்றும் இல்லை…இவளை அணைத்தபடி இன்னும் பக்கத்தில் படுத்திருக்கும் அவளது  கணவன்.

தூங்கும்  அவனை டிஸ்டர்ப் செய்துவிடக் கூடாது என்ற அக்கறையில் மிக மிக மெல்லவே அவன் முகம் பார்க்க இவள் திரும்ப…..அவன் விழித்தேதான் படுத்திருந்தான்….

அவன் பார்வை சந்திக்கவும் இவளுக்கு இருந்த மனநிலையில் இவள் சொன்ன முதல் வார்த்தை தேங்க்ஸ்.. உதடு மட்டுமாய் அசைத்து இவள் சொல்ல…..அவன் புருவம் உயர்த்தி ஏன் என்று கேட்க…

இப்ப இவளுக்கு இதுக்கு எப்படி பதில் சொல்லன்னு தெரியாத ஸ்டேஜ்….

இத்தனை வருட வாழ்க்கையில் இப்படி காலையில் கண்ண திறக்கப்பவே இவளுக்கே இவளுக்குன்னு ஒரு உறவு பக்கத்தில் இருப்பது இதுதான் முதல் முறை……அது என்னவோ  படு நிறைவான உணர்வைத் தர………அவன்ட்ட தேங்க்ஸ் சொல்லியாச்சு……

பட் இதை எப்படி அவன்ட்ட சொல்ல? காலைல எழும்பவும் எதோ சொல்லாத சோகத்தை சொன்னேன் நானும்ன்ற மாதிரி ஆகிடாதா?

ஆக பதில் என எதுவும் சொல்லாமல்….அவன் மார்பிற்குள் முகம் புதைத்து இன்னுமாய் அவனுக்குள் சுருண்டு கொள்ள முயன்றாள்…

“ஏடி உன் பாசத்தை எல்லாம் இப்டி மனுஷன முட்டி பெட்ட விட்டு கீழ தள்றதுல தான் காமிப்பியா?” என கேட்டாலும் இப்போது அவன் இவள் செயலுக்கு இன்னுமாய் ஒத்துழைக்கவே ட்ரைப் பண்ண…. சின்னதாய் சிரித்தபடியே எழுந்துவிட்டாள் ரியா…

இப்ப இவ ப்ரெஷ் செய்ய என வாஷ் பேசினை நோக்கிப் போனவள்….. பேஃஸ்ட்டோடு ப்ரெஷை வாயில் வைக்க…..சட்டென குமட்டிக் கொண்டு வருகிறது…

எப்போது வந்தான் என்றெல்லாம் தெரியவில்லை….பின்னிருந்து இவள் நெற்றியைப் பிடித்திருந்தான் அவன்….

ஒரு எப்பிசோட் ஆஃப் வாமிட் முடிய இவள்  நோகாத நூடுல்ஸ் போல உணர…. இவளை கல்யாணம் செய்திருப்பவனோ இவளுக்கு ப்ரேக் ஃபாஸ்ட் கொடுக்கும் வரை ஒன்றொன்றையாய் கவனித்துக் கொண்டான்….

“இப்ப கிளம்ப முடியுமா ரியு…?” என கன்சனாய் விசாரிக்கவும் செய்தான்.

 தடா கிளம்புறதா ப்ளான்.

“நைட் கனவு விட்டு விட்டு வந்துட்டு இருந்துச்சுப்பா……சரியா தூங்கின ஃபீலே இல்ல….அதுல இதுவும் சேரவும் செம டயர்டா இருக்கு…” ரியா தன் நிலையை சொல்ல அவன் முகத்தில் அவள் சற்றும் எதிர்பாராத சடன் சோர்வு…

“என்னாச்சுபா…?” இவள் கேட்க….

“ஒன்னுமில்ல ரியு… சஃபீஷியன்ட்டா ரெஸ்ட் எடுத்துட்டே கிளம்புவோம்….” எனும் போது நார்மல் போல் வந்துவிட்டான் அவன்…

அதே நேரம் அவன் மனம் எதில் டிஸ்டர்ப் ஆகியது என்பது இவளுக்கு புரிந்து விட்டது….

உனக்கு என் மேல உள்ள காதல உன் மனசு அக்செப்ட் செய்யாததால கனவு வருதுன்னு சொன்னானில்லையா……இப்பதான் மனசளவில் முழுக்கவும் சேர்ந்தாச்சே….கனவு வராதுன்னு எதிர்பார்த்திருப்பான்…

ஆனா திரும்பவும் கனவு வருதுன்னா….இவ அவனை முழுசா ஏத்துகலைனு கூட அவனுக்கு தோணும்….

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.