(Reading time: 35 - 70 minutes)

ன்ன சொல்வாளாம் ருயம்மா தேவி? விளையாட்டாய் சீண்டியதுதான்…..ஆனால் அவன் விடையில் ஏற்பட்டுவிட்ட உணர்ச்சிப் பெருக்கில் எதுவும் சொல்ல வகையற்று…..எதையோ சொல்ல முயன்று…..வார்த்தையின்றி மௌனமாய் விழித்தவள்…

பின் “வேந்தே” என்று மட்டும் சொன்னாள்…

“அது எனது பதவி…” என பதில் வந்தது பாண்டிய பராக்கிரமனிடமிருந்து…

“மக்களளவில் அது பதவி…. என் வரையில் என் மனதில் உங்களுக்கான நிலை அது….” என் மனதை ஆள்பவன் நீ என்பதை அவள் இவ்வாறு சொல்ல…

வந்து கவிழ்கிறது ஒரு கூட்ட உணர்ச்சிக் கோர்வை ஊடலற்றவனின் உயிர்ம விழிகளில்….. இன்னுமாய் இவ் உணர்ச்சி கலம்பகம் எவ்வளவாய் நீண்டிருக்குமோ…

கூடாது கூடாதென அவள் செவியில் ஓதித் துடித்த பெண்மை நதி….இவ் உணர்வு போராட்டத்திலிருந்து வெளிவரவென சம்பாஷணையை திசை திருப்பியது…

“ஏதேது வர்துங்கர் நேற்றிரவு விடை பெற்றுவிட்டார் என்றானதும் இன்று தலைமகனுக்கு காவலில்லை போலும்…”  ருயம்மா கூற..

 மானகவசனும் “வரதுங்கனிடம் உன்  வரையிலான ரகசியங்களை பகிர்ந்து கொள்ள நான் நினைந்ததில்லைதான் தேவி…ஏனெனில் அவை உனக்கும் எனக்குமானவை…. ஆனால் அதுதான் உன்னிடம் நான் வெளியரங்கமாய் பேசாததற்கு காரணம் என்றும் இல்லை…. காற்றுக்கும் காவலனுக்கும் காதலனுக்கும் தன் காவலை எப்போதுமே தாண்டி வரவும் தெரிந்தே இருக்கும்…..” என நிறுத்தி சற்றாய் விஷமப் புன்னகை சிந்தியவன்

தொடர்புடையவை: உங்களுக்கு இதுவும் கூட பிடிக்கலாம்... -

தேவியின் "பாயும் மழை நீயே..." - காதல் கலந்த தொடர்கதை...

படிக்க தவறாதீர்கள்..

“நீயாகவே வெளியிடும் வரைக்கும் உன் விஷயங்களை  வெளியிட கூறி உன்னை நிர்பந்திக்க கூடாது என்பது என்  எண்ணம்…...என்னிடம் வெளியிட உனக்கு எப்போது நம்பிக்கை வருகிறதோ, அப்போதே பகிர்ந்து கொள்ளட்டும் என எண்ணி இருந்தேன்…. என் மனநிலையும் பாண்டியர் மீதான உன் குண நிலையும் உனக்கு தெரிந்திருக்க வேண்டும் என்று மாத்திரமே பிற முயற்சிகள் ” விஷயத்தை தெரிவிக்கும் நிதான பாவத்தில் கூறி

“எச் சூழ்நிலையிலும் உன்னை கண்காணிக்க கூடாதென்பது நான் வரதுங்கனுக்கு இட்டிருந்த கட்டளை….” இதுவும் இவளுக்கு தேவையான செய்தி போல் தெரிவித்து வைத்தான்.

இதில் அந்த உணர்வு கலம்பகத்தை காயமின்றி கடந்திருந்தது அவர்களது காதல்.

“இப்பொழுதும் நீ நமது அரண்மனை வராது விடை பெறவே விரும்புகிறாய்….ஏனெனில் இன்று அங்கு வேடம் தாங்கி சந்திப்பவர்களையே பின் நாளில் அங்கு வந்து வசிக்கும் காலத்தில் நீ சந்திக்க வேண்டி  இருப்பதால் செண்பக பொழில் விஜயத்தை தவிர்கிறாய் என்று தோன்றுகிறது எனக்கு….. அதனால்தான் இன்று உன்னை இங்கு சந்திக்க வந்தேன்…..அது உண்மையெனில் இங்கிருந்தே உன்னை காகதீயம் வழி அனுப்ப வகை செய்கிறேன்….. விரைவில் நம் விவாஹத்தில் சந்திப்போம்….”

அடுத்தும் பராக்கிரமர் எதையோ பேச….

ங்கு ரியாவுக்கு விழிப்பு தட்ட பிறண்டு படுத்தாள்… மெல்ல புரிகின்றது…..விவன் இவள் மீது அணைவாய் தன் கையை போட்டிருந்தான்… அதுவும் அந்த கையை இவள் வேறு இழுத்து பிடித்தபடி தூங்கிக் கொண்டிருந்தாள்… ‘இவ்ளவு க்ளோஃஸாவா?’ என நினைத்தாலும்….

அவனைவிட்டு சற்றும் விலகாமல்…. மீண்டுமாய் அரை குறை தூக்கத்திற்குள் சரிய…..

பாண்டிய அரசிகளுக்கு உலகமுழுதுடையாள்,  புவனசுந்தரி, தரணியுடையாள், தரணி முழுதுடையாள், பூசுந்தரி என்பது போன்ற உலகை குறிக்கும் பெயர்களே பட்ட பெயர்களாக வைப்பது வழமை….அவ்வாறு உனக்காகவும் ஒரு பெயரை தேடி வை…..பொழுதும் கழிந்துவிடும்……நானும் வந்துவிடுவேன்….” என விவாஹத்திற்கு காத்திருக்கும் காலத்தை கழிக்க வகை சொல்லிக் கொண்டிருந்தான் மானகவசன்.

பிரிவை எண்ணி வாடி நின்ற ருயம்மாவோ  இயல்பாய் இருப்பது போல் காட்டிக் கொள்ள முயன்றவளாய் “ஏது பாண்டிய அரசர்களுக்கு தமிழகம்தான் உலகம் போலும்…..அதை ஆளும் தன் அரசிகளுக்கு இவ்வாறு பெயர் சூட்டி இருக்கின்றனரே” என கூற

“பிறருக்கு எப்படியோ எனக்கு நீ என் உலகம்…..ஆக அப்படி பெயரையே விரும்புகிறேன்…” என்ற ஒற்றைப் பதிலில் அவளது அத்தனை இயல் நிலையையும் இல்லை என்றாக்கி அவள் கண்களில் நீரின் பளபளப்பை உண்டு செய்தான் அவளுடையவன்…..

இப்பொழுது பரிவாயும் சற்றே அதட்டலாயும் அவள் கண்ணீரை மாற்ற ஏதோ மானகவசர் சொல்ல முயல….

மீண்டுமாய் விழிப்பு வருகிறது ரியாவுக்கு…. காரணம் இவள் மீது கை போட்டிருந்த விவன்….இப்போது பின்னிருந்து இன்னுமாய் இவளோடு அண்டியபடி…..இவளை முழுவதுமாய் அணைக்கவும் செய்தான்….

முதுகோடு சேர்ந்து மூன்று புறமும் இவளை சூழ்ந்திருந்தவன் கைகள் இவள் முன்புறமாக அணைத்தும் கிடந்தன….. கடலாய் அவன்… அது சூழ்ந்த தீவாய் இவள்….

மெல்ல திரும்பி விவனது முகத்தைப் பார்த்தாள்….அவன் கண் மூடி இருந்தாலும்….அரைத் தூக்கத்தில் இருந்தான் போலும்….

இவள் அசைவு உணர்ந்து “தூங்கலையா ரியூ….” என தூக்க குரலிலேயே கேட்க…

அவன் தூக்கத்தை கெடுக்க விரும்பாதவளாய் “ம்” என்ற பதிலோடு அவன் அணைப்பிற்குள் வாகாகவே படுத்துக் கொண்டாள்… தூங்கியும் போனாள்….

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.