(Reading time: 35 - 70 minutes)

திரன் ஏற்பாடு செய்திருந்த காரில் விவனும் இவளும் கிளம்ப….இவர்களுக்கு முன்னும் பின்னும் இவர்களுக்கான காவலுக்கென்று தெரியாமலே இரண்டு கார்கள்…..

ஆதிரன் ரெக்கமென்டேஷனில் ஒரு டிடெக்டிவ் ஏஜென்சி மூலமே எல்லா பாதுகாப்பு நடவடிக்கையும் எடுக்க பட்டிறுந்தது…..போலீஸ் டிபார்ட்மென்ட்டை உள்ளே இழுக்க விரும்பவில்லை போத் ஆதிரன் அன்ட் விவன் அன்ட் கோ…

யாரை நம்ப, யார் ஏமாத்துவான்னே சொல்ல முடியாத கடல் அது….. இதுன்னா சேஃப் என்பது அவர்களது எண்ணம்….

முழு பயணத்திலும்  ரியா மௌன விரதம்….. இவன் கையையாவது தொட்டுக் கொண்டிருக்க வேண்டும் அவளுக்கு…… லாஸ்ட் 3டேஸாவே அவ கிட்டதட்ட இப்படித்தான்……தென்காசிக்கு போகனும்னு சொல்றதை தவிர விவன கவனிச்சுக்க தேவையான…. “சாப்டுறீங்களாப்பா..? தூக்கம் வருதா? “ போன்ற விஷயங்களை மட்டுமே பேசிக் கொண்டிருப்பவள்…..மத்தபடி வாயடைத்த மௌனம்….

அவ்ளவு சின்ன ஹாஸ்பிட்டல் பெட்ல கூட நைட் விவனை ஒண்டிக் கொண்டு மட்டுமே படுக்கை….எந்த காரணத்துக்காகவும் அவனை விட்டு அவள் அசையவே ரெடியா இல்லாத மூட்…

விவனுக்கு அவள் மனம் புரியாமல் இல்லை….. “எல்லாத்தையும் லாஸ் செய்த பிறகு எனக்கே எனக்குன்னு கிடச்சவங்கப்பா நீங்க….நீங்களும் எனக்கு இல்லன்னு ஆகிட்டா என்னால தாங்கவே முடியாதுப்பா…. ஒரு முறை இவனிடம் புலம்பி இருந்தாள்…

எல்லா இழப்பின் வலியையும் இவன் ப்ரச்சனையில் உணர்கிறாள்…

இப்பவே இந்த மூட்ல இருக்றவள் அங்க போய் எப்படி இருப்பாளோ என்ற கடும் கன்சர்ன் கணவனுக்கு….

தொடர்புடையவை: உங்களுக்கு இதுவும் கூட பிடிக்கலாம்... -

மீராவின் "புத்தம் புது காலை..." - காதல் கலந்த குடும்ப தொடர்....

படிக்க தவறாதீர்கள்..

முடிந்த வரை அவளிடம் பேச்சுக் கொடுத்துப் பார்த்தான்…. நோ சேஞ்ச்…..

ஆனால் மாலை 6 மணிவாக்கில் தென்காசியில் இவனது வீட்டில் சென்று இறங்கிய போது அவள் முகத்தில் இவனே எதிர்பாரா வண்ணம் இலகு நிலை பாவம்…

அவளைப் பொறுத்தவரை தென்காசி போனால் இனி விவனை துரத்த மாட்டாங்க என்ற நினைப்பு இருந்ததாலும்…… எப்டியும் டார்கட் இவதானே…..அதோடு மொத்த ப்ரச்சனைக்கும் தென்காசியில் ஏதோ ஒரு வகையில் முடிவு வந்துவிடும் என்று ஒரு மன நிலை இருந்ததாலும், இங்கு  வரவும் கொஞ்சம் இதமாகவே உணர்ந்தாள்….

அதுவும் கடந்த மூன்று நாள் மன அழுத்தத்திற்கு இந்த மன நிலையே பெரிய விடுதலை போன்று ஒரு உணர்வு….

பழையகாலத்து வீடு அது….

ஏதோ முப்பது அடி அகலம் மட்டுமே இருப்பது போல் தோன்றிய அவ்வீட்டின் முன் கேட் பூட்டி கிடந்தது…….  அத்தெருவின் அனைத்து வீடுகளுமே அப்படித்தான் இருந்தன….. வெகு அகலம் எல்லாம் இல்லை…. காம்பவ்ண்ட் சுவர்களும் எதற்கும் கிடையாது…… ஒவ்வொரு வீடும் அடுத்த வீட்டுடன் ஒட்டி ஒட்டியே அமைந்திருந்தன….

இதையெல்லாம் சுவாரஸ்யத்துடனே இவள் வேடிக்கைப் பார்க்க…..வீட்டின்  கேட்டை திறந்து உள்ளே நுழைந்த  விவன்….. அங்கே ஒரு சின்ன  முற்றத்திற்குப் பின் இருந்த வீட்டின் கதவை திறந்த நேரம்….. அவனுக்கு சற்று பின்னாக நின்றிருந்த ரியா….  காட்டன் மீது ப்ளாஸ்டர் இட்டு மூடி இருந்த அவன் தலை காயத்திற்கு சற்று அருகில் மென்மையாய் ஒரு முத்தம் வைத்தாள்…

“ஹேய் “என்றபடி திரும்பினான் அவன்…..

லாஸ்ட் த்ரீ டேஸ் அவள் இருந்த உயிரற்ற உணர்ச்சியற்ற பொம்மை போன்ற அவதாரத்திற்கு இது எத்தனை எத்தனை பெரிய மாற்றம்…..

தென்காசிக்கு அவளை அழைத்து வந்த முடிவை இந்த நொடியே சரி என ஏற்றது அவனது இதயம்.

உடனடியாக அவள் கையை பிடித்தவன்…..அவள் கொடுத்ததை அந்நேரமே அவள் நெற்றியில் திருப்பி கொடுத்து….பின் அதோடு மனம் திருப்திபடாமல்……அவள் கன்னம் பின் நாடி என இறங்க….

“முதல்ல உள்ள வாங்க நீங்க…” என்றபடி இப்போது அவனை வீட்டிற்குள் இழுத்தது ரியா…. இந்த சிணுங்கலை கேட்டு ஒரு யுகம் ஆகி இருந்த ஃபீலிங் அவனுக்கு….

பத்தி வீடு எனும் சொல்லும் படியாய் நெடு நெடுவென நீட்டமாய் வரிசையாய் அறைகள் எவ்வளவு நீளமோ தெரிந்தன வீட்டிற்குள் உள் நுழையவும்…

முற்றம் தாண்டியதும் உள்ளே ஒரு குட்டி ஹால்….அங்கிருந்து அடுத்து சற்று பெரிய ஹால்…..அதில் பக்கவாட்டில் மாடிக்கு படிகளேறின…..அதை தாண்டி வீட்டிற்குள் சென்றால் இப்போது வெகு நீளமான ஒரு சூப்பர் ஹால்…. பாதி ரோடு அளவு இருக்கும் போல….

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.