(Reading time: 35 - 70 minutes)

ப்றம் மீண்டும் சில மீடியம் ஸைஸ் ஹால் ஒன்றன் பின் ஒன்றனாய் வரிசையாய்…. அதில் சைடில் ஒரு ஒரு ரூம்….

 “இது நான் சின்ன வயசில் இருக்கப்ப அப்பா வாங்கின வீடு ரியு….. சொந்த ஊர்ல எனக்கு ஒரு வீடு இருக்கனும்னு வாங்கினது போல…..  எங்க நேட்டிவ்னா பக்கத்தில் உள்ள வில்லேஜ்தான்…. ஆனா டவ்ண்ல வீடு இருந்தா வசதின்னு யோசிச்சாங்களா…. இல்ல இந்த வீட்ல பின்னால வந்து பாரு உனக்கும் ரொம்ப பிடிக்கும் ….அதுக்குன்னு வாங்கினாங்களான்னு தெரியலை……” என்றபடி வீட்டிற்குள் கூட்டிப் போன விவனை பின் தொடர்ந்த ரியா…..

கடைசியில் கிட்சனுக்கு  முன்பான ஹாலுக்கு ரூஃப் எதுவும் இல்லாமல் திறந்த வெளியாய் இருக்க…..அந்த திறந்த வெளியில் இப்பொழுது க்ரில் மட்டும் அமைக்கப்பட்டிருக்க…. அதைப் பார்க்கவுமே படு சந்தோஷமாகி விட்டாள்…

சின்னதாய் தூரல் விழ துவங்கிய இந்நேரத்திற்கு அது படு ரம்யமாய் தோன்றியது…. அங்கும் பக்கவாட்டில் மாடிக்கு படிகள்….

தொடர்புடையவை: உங்களுக்கு இதுவும் கூட பிடிக்கலாம்... -

தீபாஸ்ன் "பெண்ணே என் மேல் பிழை" - காதல் கலந்த குடும்ப தொடர்....

படிக்க தவறாதீர்கள்..

“சூப்பரா இருக்குப்பா….” என்றபடி அவன் தோளோடு இவள் பின்ன…

“இதுக்கே இப்டின்னா….பின்னால வந்து பார்த்தா என்ன தருவ நீ…?” என்றபடி விவன் கிட்சனை தாண்டி பின் கதவை திறந்து இவளை அங்கு கூட்டிக் கொண்டு போக….

வீடின் அளவே நீளமான ரோஜா  தோட்டத்திற்குப் பின்னால் நிற்காமல் சுணங்காமல் சலசத்தபடி ஓடிக் கொண்டிருந்தது சித்ரா நதி என தற்போது அழைக்கப்படும் சிற்றாறு….

இவர்களது வீட்டிற்கென ப்ரத்யேக பெரும் கல்படிகள் ஆற்றிற்குள் இறங்க… அதில் தன்னவன் கைகளோடு கை கோர்த்து இறங்கிய ரியா….. கடைசி படியில் சென்று அவனோடு நின்றபோது….. காட்டுப் பூ வாசமோடு முகத்தில் வீசிய தென்காசி தென்றலை தன் ஒவ்வொரு செல்லிலும் வாங்கி சுகித்தவள்….

அருகில் நின்றவனை இறுக அணைத்து கடந்த மூன்று நாளின் முத்த கடனையும் மொத்தமாக டேலி செய்தாள்….

கடந்த நாட்கள் செய்துவிட்டு போயிருந்த மன  காயங்களுக்கு…..  இது அவனுக்குமே மிக மிகவும் தேவையான ஒரு மொமன்ட்…

ஆக எந்த வகையிலும் தடை சொல்லாமல் அனைத்தையும் அவளை அணைத்தபடியே தன்னில் வாங்கினான்… எப்டியும் ஆழமான படில நிக்றாங்க….  எதிர்கரையில் நின்று யாராவது பார்த்தால் ஒழிய யாருக்கும் இவர்கள் நிற்பது தெரிய சாத்தியமே இல்லை…. அந்த படிகட்டுகளின் அமைப்பு அப்படி….

எதிர்கரையில் தூர தூரத்தில் தெரியும் தென்னந்தோப்பு வரை நதியின் நீர் பரப்பே இங்கு துணை…. தூரத்து தோப்பிலும் இருள் கவிழ தொடங்கிவிட்ட இந்த நேரத்தில் ஆள் என எதுவும் இங்கிருந்து பார்க்க தெரியவில்லை…அங்கு யாராவது இருந்தாலும் இவர்களும் அவர்களுக்கு புள்ளி போல தெரியக் கூடும்….

சில பல நிமிடங்கள் இதில் கழிய…. எதேச்சையாய் இடப்பக்கம் திரும்பியவன் பார்வையில் படுகிறது அது….

படிக்கட்டுக்கு இரவு நேரத்தில் வெளிச்சம் வேண்டும் என்பதற்காக வைக்கப்பட்ட லைட் போஸ்ட்…..அதில் உட்கார்ந்திருக்கிறது அது…..

சட்டென விறைக்கிறது இவனது தேகம்….

ஓ மை காட்….!!!!!!

தொடரும்

Episode # 21

Episode # 23

{kunena_discuss:1063}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.