(Reading time: 35 - 70 minutes)

ஸ்பண்ட் சார் என் மைன்டோட ஆல் பார்ட்ஸும் upside down ஆ உங்களை கன்னா பின்னானு 100% லவ் பண்ணுது….அதுல எந்த டவ்டும் கிடையாது….  இந்த கனவுக்கு ரீசன் வேற ஏதாவதா இருக்கும்….” சொல்லியபடி தான் சாப்பிட்டிருந்த ப்ளேட்டை கையில் எடுத்துக் கொண்டு டைனிங்க் டேபிள் சேரிலிருந்து இவள் எழுந்து கொள்ள..

இவள் சாப்பிட்டு முடிக்கும் வரை ஒன்றும் சாப்பிடாமல் இருந்துவிட்டு….. இப்பொழுதுதான் ஒரு சாண்ட்விச்சை கையில் எடுத்திருந்தவன்…. பாந்தமாய் படு நிறைவாய் ஒரு பார்வை அவளைப் பார்த்தான்….

“ஐயகோ என்ன கொடுமை இது….. இன்னைக்குத்தான் ஃபர்ஸ்ட் ஐ லவ் யூ சொன்னதுக்கு இம்மீடியட் அடுத்த நாள்…..இதுல இப்பவும் வேற நான் ஐ லவ் யூ சொல்லி இருக்கேன்…..கல்யாணம் வேற ஆகிட்டுது….. என்ன மாதிரி ரிப்ளை இது…. நோ கிக்…. நோ ஸ்பைஸ்…புவர் ரியாகுட்டி” இவள்  சலித்துக் கொள்ள…

வாஷ் பேசினை நோக்கி திரும்பி நடக்க இருந்தவள் அடுத்த நொடிக்குள் நுழைவதற்குள் எப்படி எழுந்தான், எப்படி வந்தான் என்றெல்லாம் தெரியாது…..

சட்டென பின்னிருந்து  தோளோடும் இடையோடும் பிடித்து திருப்பி சற்றாய் சுழற்றி தன்னோடும் தன் கைகளோடும் சிறை செய்திருந்தான் இவளை….. சில மில்லி மீட்டர் இடைவெளியில் இவள் முகம் அருகில் அவன் முகம்…..

தொடர்புடையவை: உங்களுக்கு இதுவும் கூட பிடிக்கலாம்... -

சகியின் "சக்ர வியூகம்" - காதல் கலந்த குடும்ப தொடர்...

படிக்க தவறாதீர்கள்..

பே என மிரண்டு போய் பார்த்த இவள் பார்வைக்கு முதலில் கிடைப்பது  வெகு அருகில் இருக்கும் அவன் உதடுகளே….

எதிர்பாரா இந்த ஈவென்ட்டில்…..விரிந்த பயந்த முழியை இன்னுமாய் அதிகமாக்கி, கொஞ்சமே கொஞ்சம் நிமிர்ந்து  பார்த்த இவள் கண்களில் கிடைகிறது, இவள் இதழ்களை மாத்திரம் இலக்காக்கி இருந்த அவனது பார்வை…

அடுத்து வரப் போவது என்ன என்பதற்கு இவளுக்கு பெரிதாய் விளக்கம் எதுவும் தேவை இல்லை…..

 இவள் பயந்த பார்வையைப் பார்த்ததால் போலும்…”நீ தான ஸ்பைஸ் இல்லன்னு ஃபீல் பண்ணிட்ட…..அத்தான்ட்ட கேட்டும் அத தரலைனா….” அவன் சொல்லியபடி இவளை நோக்கி குனிய….

அவன் திருப்பி அணைத்த வகையில்  டைனிங்க் டேபிள் இவள் பின்புறம் சற்றாய் உரசியபடி இருக்க…. என்னதான் பயந்த முழி போல் லுக்விட்டுக் கொண்டிருந்தாலும்….பின் புறமாய் கை நீட்டி அதிலிருந்த பெப்பர் கன்டெய்னரை அவன் கவனிக்கா வண்ணம் இதற்குள் எடுத்திருந்தவள்…..அதை கொஞ்சம் கையில் கொட்டி…. டைரக்ட் அப்ளிகேஷன் ஆன் ஹிஸ் லிப்ஸ் அண்ட் லிப்ஸ் ஒன்லி….

எதிர்பாராத இந்த குட்டி அட்டாக்கில் கொஞ்சமே கொஞ்சம் பவ்டர் அவன் த்ரோட்டுக்குள்ளும் ட்ராவல் போக…

“ராட்சசி…. ராட்சசி!!!...” என்றபடி  ஹட்ச் ஹட்ச் என தும்ம துவங்கினான் அவன்…..

“பெப்பர்தான்பா….இட்ஸ் குட் ஃபார் யுவர் ஹெல்த் யூ நோ…..” என்றபடி இப்போது அவன் தலையை தும்மலுக்கு ஏற்றவாறு பாசமாய் தட்டியதும் இவளே….

“இது தான் ரியல் ஸ்பைஸ் யூசீ….” என்ற எக்ஸ்ப்ளனேஷன் வேறு….

அடுத்தும் எதுவும் சொல்ல முடியாதபடி அவன் தும்மிக் கொண்டிருக்க…. தேனை ஒரு ஸ்பூனில் ஊற்றி …”இத குடிங்கப்பா கன்ட்ரோல் ஆகும்” என அவனுக்கு குடிக்க கொடுத்து….

அவன் கழுத்துப் பகுதியை பாச பாசமாய் தடவிக் கொடுத்து என சர்வ சவரட்சணைகளையும் டக்கராய் செய்து ….

தும்மல் அடங்கி இப்போது  “பெப்பர் பொடியால என்னை போட்டுதள்ள எத்தன நாளாடி ப்ளான் போட்டுட்டு இருந்த…?” என்ற அவன் கேள்விக்கு….

அவனை இடுப்போடு அணைத்து…….அவன் உதடுகளை மட்டுமாய் பார்த்து…..”இதெல்லாம் நான் எல்லோ கலர் ட்ரெஸ் போட்ட அன்னைக்குத்தான் ஸ்டார்ட் செய்யனுமாம்……பாருங்க நான் பிங்க் ட்ரெஸ்ல இருக்கேன்…. டோட்டலி ஆப்போசிட்” என ஒரு சூப்பர் விளக்கம் வேறு செய்தாள்…

இப்பொழுது ஒரு பார்வை பார்த்தான் விவன்… “இது என்ன சூப்பர்ஸ்டிஷன்?” என்ற அவன் கேள்வியில் சற்று  காரம் இருந்தது….

அதற்கெல்லாம் சளைக்கும் ஆளா இவள்…?

“பாண்டியரே….இப்ப நீங்க ஒரு சூப்பர் கேள்வி கேட்கலாம்….ஆனா அதவிட்டுட்டு இப்டி ஓட்ட கேள்வி கேட்கிறது சுத்த  வேஸ்ட்….. இந்த யெல்லோ லாவெல்லாம் நமக்கு நாமே திட்டம்…… உங்களுக்கே உங்களுக்காய் நானே நான் இப்போதே இப்போதைக்காய் போட்ட ரூல்…..நோ உலக பொதுமறை…. நாட் பெர்மனன்ட்.”

அவன் பார்வையில் மாற்றம் வரவில்லை என்றாலும் முகத்தில் பரவுகிறது ஒரு ரசனை

“இப்ப கேட்க வேண்டிய கேள்வி என்னதுன்னா….?”

“……………”

“என்ன கேள்வின்னு கேளுங்கபா…” இந்த அவள் சிணுங்கலில்

கண்ணிற்கும் கூட பரவி தொலைத்தது அவனது சைட் சீயிங் டேலண்ட்..

“சரி நானே சொல்றேன்….க்வெஸ்டியன் நம்பர் ஒன்…..மிக அறிவுபூர்வமான கேள்வி இது….”

சேம் சைட் மோடில் அவன்….

“பிங்க் ட்ரெஸ் யெல்லோ ட்ரெஸ்ஸுக்கு ஆப்போசிட்டா….?...... அப்டின்னு நீங்க கேட்ருகலாம்”

 இந்த அண்டகாகசம் கேள்வியில் தலையில் அடித்துக் கொண்டான் அவன்…

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.