(Reading time: 35 - 70 minutes)

ரியாவுக்கு  சட்டுன்னு ரொம்ப க்ளோசாகிட்டமோ இவன்ட்ட என்ற ஒரு கேள்வி மனதில் இருந்தாலும்…..அவனுக்குள் கரைய அவளுக்குள் தடை என எதுவுமில்லை…..நடந்த இந்த அனைத்துமே ஸ்பான்டேனியஸ் ஆக்ட்…. திட்டமென்றெல்லாம் எதுவும் இல்லாமல் அந்த நேரத்தில் தோன்றியதை சும்மா விளையாட்டுகாக செய்த செயலும் பேசிய பேச்சும்……

ஆக இதை அவள் விளையாட்டாகவே எடுத்துக் கொள்ள….விவனுக்கு  இப்படி சட்டுன்னு க்ளோசாகிட்டமோ என்ற உறுத்தல் கூட இல்லை என்பதால்….. இது முழுக்கவுமே விளையாட்டான விஷயமாகவே பட….. இருவருமே ஒரு இலகு மூடில் அன்றைய நாளை துவங்கினர்…

அடுத்து தடாவுக்கு கிளம்பும் ப்ளானை செயலாக்க……தேவையான பேக்கிங் ஒரு புறம் நடந்தது….

தடாவில் விவன் தங்க நினைத்திருந்த இடம் மிக மிகசிறிய கிராமம்….. ஆக அங்கு கிளம்புவதற்கு முன் அங்கு எடுத்துச் செல்லும் காரை ஒரு சின்ன சர்வீஸுக்கு விட்டு எடுத்து செல்ல நினைத்தான்….

கார் பக்கா பெர்ஃபெக்ட் கண்டிஷனில் இருந்தாக வேண்டும்…..என்ன தேவை எமெர்ஜென்சி எதுவானாலும் கார் கட்டாய அவசியம் அங்கே….ஏன்னா பக்கத்தில் ஆட்டோ கூட இல்லாத வில்லேஜ் அது….. மூனு மணி நேரத்துக்கு ஒரு பஸ் வந்தா கூட அபூர்வம்….

ஆதிரனிடமும் இதைப் பற்றி பேசி இருந்தான். அவர் “ரொம்ப முக்கியமான விஷயங்கள்ள உங்க ஸ்டாஃப கூட நம்பதீங்க இப்போதைக்கு” என சொல்லி இருந்ததால்…..காரை இவனே சர்வீஸ் எடுத்துப் போய் வர நினைத்தான்….

தொடர்புடையவை: உங்களுக்கு இதுவும் கூட பிடிக்கலாம்... -

பூஜா பாண்டியனின் "நானும் அங்கே உன்னோடு" - காதல் கலந்த குடும்ப தொடர்...

படிக்க தவறாதீர்கள்..

ரியாவை எப்படி தனியாக வீட்டில் விட்டுவிட்டு போக……அல்லாது கார் சர்வீஃஸ் சென்டரில் வெயிட் செய்ய விட….சோ அவளை அழைத்துப் போய் ஆதிரனின் வீட்டில் அவரது மனைவியிடம் விட்டுவிட்டு கிளம்புவதாக ஏற்பாடு…..

அதற்காக ஆதிரன் வீட்டிற்கு போய் ரியாவை ட்ராப் செய்துவிட்டு…..மிசர்ஸ் ஆதிரனிடமும் கொஞ்சம் பேசி விட்டு……கிளம்பி வந்து காரில் ஏறி  அவர்கள் வீட்டு கேட் வரை வந்தான் விவன்.

கார் வீட்டிலிருந்து ரோடில் ஏறும் முன் வல பக்க மிரரை எதேச்சையாய் இவன் பார்க்க…. ஆதிரன் வீட்டு போர்டிகோவில் இருந்த சின்ன தூணை இரண்டு கைகளாலும் பற்றி தூணோடு சாய்ந்து கொண்டு டன் கணக்கில் அப்பாவித்தனத்தோடு அம்பேல் என்று நின்று கொண்டிருக்கும் இவனது ரியாப் பொண்ணு அதில் தெரிகிறாள்.

ரொம்ப பழக்கமில்லாத இடமில்லையா ஒரு ஒன் அவர் தான் என்றாலும்….அங்கு தங்க அவளுக்கு ரொம்பவும் சங்கடமான உணர்வு…. காலைலதானே வாமிட் செய்தா….அப்டி திரும்பவும் எதுவும்னா என்ன செய்ய என ஃபீல் வேற…. ஆனாலும் சிச்சுவேஷனை யோசித்து அவள் சம்மதித்துதான் இங்கு தங்கி இருப்பதும்…..

ஏனோ இந்த நொடி அவளை இப்படிப் பார்க்கவும் விவனுக்கு அவளை கூட கூட்டிப் போய்விடுவோம் என்று தோன்றிவிட்டது….

சர்வீஸ் சென்டருக்கு ஒரு Cab  அ புக் செய்து வர சொன்னா… கார் சர்வீஃஸ் சென்டர்ல வெயிட் செய்யாம, அவள கூப்டுட்டு பக்கத்தில் உள்ள எதாவது ஒரு இடத்துக்குப் போய் டைம் ஃஸ்பெண்ட் செய்துகலாம்…. என முடிவுக்கு வந்தவன்….

தன் கரை அப்படியே நிறுத்திவிட்டு இரங்கி தன்னவளை நோக்கி நடக்க துவங்கினான்…..சில அடிகள்தான் போயிருப்பான்… இவன் கார் நிற்கவுமே என்னவென்று புரியாமல் ரியாவுமே இவனைப் பார்த்து வர….

சரேலென எதோ ஒரு பார்ட் ஆஃப் அவனது கார் கழன்று பறந்து வந்து ரியாவைப் பார்த்து நடந்து கொண்டிருந்த விவனது பின் தலையில் மோதி விழுகிறது என்றால்

எந்த சத்தமும் இன்றி திடீரென பற்றி எரிந்தது விவனது மொத்த காரும்….. இரு நொடிக்குள் வெறும் சாம்பல் மேடாயும் அதன் மீது படு உயரமாய் உயர்ந்து எறியும் கூம்பு போன்ற தீயுமாயும் அது…..

விவனுக்கு காரைப் பார்க்கும் வாய்ப்பு இல்லை ஏனெனில் அது அவன் பின்னால் இருந்தது….ரியாவுக்கு அவள் பார்வைக்கு முன்னால் ஆனால் ஓரளவு தொலைவில்…..

 விவனுக்கு அடிபடுவதையும் கார் நொடிக்குள் பஸ்பமாவதையும் நேருக்கு நேராய் பார்த்தவள் படு பயங்கரமாய் அரண்டு போனாள்….

தென்காசிக்கு போக சொல்லும் தீக்கும் இதற்கும் நிச்சய நிச்சயமாய் சம்பந்தமிருக்கிறது….. இந்த விபத்து விவனுக்கு நேர்ந்திருக்க வேண்டிய ஒன்றல்லவா…? அவன் ஜஸ்ட் மிஸ்…. இல்லனா அவனை இப்டி சாம்பலாக்கிடுவோம்னு மிரட்டுறாங்களா யாராவது? அதுவும் இல்லைனா இப்டி அவனுக்கு ஆகாம  இருக்க தென்காசி போக சொல்றாங்களா?

எது எப்படியாயிருந்தாலும் காரின் கதியைப் பார்க்க பார்க்க கதறி கதறி துடிக்கிறது இவளது கால் கொண்ட உடல், உயிர், முழு உணர்வு மண்டலம்….

அரைப்பங்கு உடலை புலியின் கடியில் பறி கொடுத்துவிட்ட புள்ளி மான் போல விவன் மீது பாய்ந்து போய் விழுந்தாள் ரியா….

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.