(Reading time: 10 - 19 minutes)

ரசவையில்,

“பிரஜாபதியாரே…… இவர்கள் தாம் அந்த சிற்பியின் உறவுகள்…” என ஆண்கள் பலரை கொண்டு வந்து நிறுத்தினர் பிரஜாபதியின் பணியாட்கள்…

“எங்கே அந்த சிற்பி?... உண்மையைக்கூறுங்கள்…”

பிரஜாபதி சத்தமாய் கேட்க, அவர்கள் நடுங்கினர்…

“எங்களுக்கு தெரியாது அரசே…”

“பொய் உரைக்கிறீர்களா என்னிடமே….”

“இல்லை அரசே… இல்லை… நாங்கள் சொல்வது அனைத்தும் சத்தியமே…”

தொடர்புடையவை: உங்களுக்கு இதுவும் கூட பிடிக்கலாம்... -

அன்னா ஸ்வீட்டியின் "அதில் நாயகன் பேர் எழுது..." - காதல் கலந்த சரித்திர + குடும்ப தொடர்...

படிக்க தவறாதீர்கள்..

“எனில் அவன் எங்கே இருக்கிறான் என்று தங்கள் அனைவருக்கும் தெரியாதல்லவா?....”

“ஆம்…..”

“ஆகட்டும்… அந்த சிற்பியின் உறவுகள் யாராக இருந்தாலும் சரி, அவன் இனத்தையே நாடு கடத்த உத்தரவிடுகிறேன்… யார் அங்கே?....”

பிரஜாபதி குரல் கொடுக்க, விரைந்து வந்தனர் பணியாட்கள்…

பிரஜாபதியின் வார்த்தைகளைக் கேட்ட, சிற்பியின் உறவுகள் அத்தனை பேரும் பிரஜாபதியின் முன் மண்டியிட்டு வேண்டி நிற்க, அவர் சற்றும் அசையவில்லை…

“இத்தனை பெரிய தண்டனையை யாம் எவ்வாறு ஏற்போம் அரசே… நாங்கள் அனைவரும் தங்களையும், தங்கள் நாட்டினையும் சார்ந்து பிழைப்பவர்கள்… திடீரென்று எங்களை நாடு விட்டு நாடு செல்ல சொன்னால் நாங்கள் எங்கே போவோம் அரசே?.... அவன் ஒருவன் செய்த பிழைக்கு நாங்கள் அனைவரும் மன்னிப்புக் கேட்டுக்கொள்கிறோம்….”

கைகூப்பி அவர்கள் வேண்ட, பிரஜாபதி எதுவும் பேசவில்லை…

“தயவு செய்து எங்களை நாடு கடத்த உத்தரவிடாதீர்கள் அரசே… நாங்கள் எங்கே சென்று பிழைப்பை நடத்துவோம்?...”

அவர்கள் மன்றாட, “இன்னும் என்ன வேடிக்கை… என் ஆணையை நிறைவேற்றுங்கள்….” என்றார் பிரஜாபதி தன் பணியாட்களைப் பார்த்து…

பின் வேதனையுடன், கண்களை துடைத்துக்கொன்று பிரஜாபதியை வணங்கிவிட்டு, அங்கிருந்து அகன்றனர் சிற்பியின் உறவுகள்…

சதியுடன் வேறு இரண்டு பணிப்பெண்கள் மலர் சேகரிக்க அனுப்பப்பட, அவள் எவ்வளவோ மறுத்தும் அதற்கு இடம் கொடுக்கவில்லை பிரசுதி…

இறுதியில், தாய் சொல்லிற்கு கட்டுப்பட்டவளாக, மலர் சேகரிக்கச் சென்றாள் சதி அவ்விருவருடனும்…

அப்போது, சிற்பி இனத்தவர் யாவரும், தங்களது உடைமைகளோடு வெளியேறுவதைக் கண்ட சதி, அவர்களின் அருகில் செல்ல,

அவளைக் கண்ட அவர்கள், பணிந்து அவளுக்கு வணக்கம் தெரிவித்தனர்…

“தாம் அனைவரும் சிற்பி தொழில் புரிபவரா?...”

“ஆம்.. தேவி…”

“எனில் தாம் தத்தமது உடைமைகளோடு எங்கே செல்கிறீர்கள்?...”

“எங்களின் ஒருவன் செய்த பிழைக்கு, நாங்கள் இந்த நாட்டை விட்டு வெளியேறுகிறோம் தேவி…”

“என்ன கூறுகிறீர்கள்?...”

“எங்களிடம் இதற்கு மேலும் எதையும் கேட்காதீர்கள் தேவி… தங்களது முயற்சியாவது வெற்றியடைய வேண்டும் என்று இறைவனை பிரார்த்திக்கிறோம்…”

“தங்களின் வேண்டுதலுக்கு நன்றி….”

“நீங்கள் தேடிக்கொண்டிருக்கும் தாமரை மலர்கள், இன்னும் ஒரு காத தூரத்தில் அமைந்திருக்கும் குளத்தில் நிறைந்திருக்கிறது… அங்கே சென்றால், உங்களுக்குத் தேவையான மலர்கள் நிறைய கிடைத்திடும் தேவி… செல்லுங்கள்….”

“தங்களின் உதவிக்கு மிக்க நன்றி…..”

“அது எங்கள் பாக்கியம் தேவி… நாங்கள் வருகிறோம்…”

அவளிடமிருந்து விடைபெற்று அவர்கள் அனைவரும் செல்ல, அவள் அவர்கள் செல்லும் திசையையேப் பார்த்திருந்தாள் இமைக்காமல்…

Episode 37

Episode 39

{kunena_discuss:1001}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.