(Reading time: 39 - 78 minutes)

பொதுவாய் வாய்விட்டு அழுவதென்பது ரியாவின் அகராதியில் அதுவரை கிடையாது….. ஆனால் இன்று  தனிமையில் கதறத் தோன்றுகிறது…. ஆனால் அதுவும் கிடைக்கவில்லை…..  காய்ச்சலோடு பயமுகமாய் வெளி வந்த இவளை....

ஃபீவர் அன்ட் ஸ்டொமெக் பெய்ன் இதில் காமன் ரியாம்மா….. பட் பயப்பட ஒன்னும் இல்ல…..டூ டேஸ்ல சரி ஆகிடும்…..அப்டி பார்த்தா உனக்கு ஸ்டொமெக் பெய்ன் கூட இல்லதான…. நீ ரொம்ப ஸ்ட்ராங்க்…..ஆரம்பமே நல்ல ஸ்டார்ட் எல்லாம் நல்லபடியா நடக்கும்” என எக்சைட்டடாக ரிசீவ் செய்த பூர்விக்கா…. இவ வாயதிறந்து எதை சொன்னா…..ஃபீவர அவங்களா கண்டு பிடிச்சுட்டாங்க அவ்ளவே…..அடுத்தும் இவளை தாங்குவதாக எண்ணி ப்ரொசீசர் முடிந்த நொடியிலிருந்து இவளோடே இருக்க….

ப்ரொசீசர் பத்தி டீடெய்ல்லா தெரிஞ்சுகிட்டுதான் அக்கா இவளை ஒன்றுமே சொல்லாமல் அனுப்பி வைத்திருக்கிறாள் என்ற நினைவு இவளை இன்னுமாய் அழ சொன்னாலும்…..

ஆனாலும் அக்கா முன் அழுவதெல்லாம் இவளுக்கு வராத விஷயம்….ஆக அழவும் முடியாத அந்த வதையில்……அப்பொழுதுக்கு அவளுக்கு கை கொடுத்த விஷயம் அவளது Lip theory….அந்த மெடிகல் ப்ரொசீசர் நடக்கவே இல்லை என்பது போல் தன் மனதை நம்ப வைக்க முயன்றாள் ரியா…..

இதில் மீண்டும் “ அதே ப்ரொசீர்தான் ரியாம்மா பட் கொஞ்சமே கொஞ்சம் வித்யாசமா இருக்கும்…..கொஞ்சம் அதிகமா டைம் ஆகும்…. ஃபர்ஸ்ட் டைம்மே எவ்ளவு கேஷுவலா ஹேண்டில் செய்த….இப்பவும் நீ சூப்பரா சமாளிச்சுடுவ ரியா… இந்த டைம் ஃபீவர் கூட வராது.” என அடுத்த ப்ரொசீர்க்கு அக்கா இப்போது இன்ட்ரோ  கொடுக்க……

 தன் சுபாவத்தை மீறி  தயங்கி தயங்கி சிறு குரலில் இப்போது ரியா சொல்லியும் பார்த்தாள்….. ”ரொம்பவும் கஷ்டமா இருக்கு பூர்வி…. “

தொடர்புடையவை: உங்களுக்கு இதுவும் கூட பிடிக்கலாம்... -

ஜான்சியின் "அமிழ்தினும் இனியவள் அவள்..." - அவனுக்கு அவள் கிடைப்பதற்கரிய அன்புச்சுரங்கம் அவளுக்கோ அவன்...?

படிக்க தவறாதீர்கள்..

“ இதுல என்ன ரியாம்மா கஷ்டம்…. சரி உனக்கு இது கஷ்டமா இருக்குன்னா ஒன்னு செய்….இதெல்லாம் யாருக்கோ நடக்குதுன்னு நினச்சுக்கோ ரியா….. ஈசியா ஹேண்டில் செய்துடலாமாம்…..கேள்விபட்டுறுக்கேன்…… பொதுவாவே சரகோட் மதர்ட்ட  இது உன் குழந்தை இல்ல….பூர்வியோட குழந்த…. அப்டின்னுதான் சொல்லிட்டே இருப்பாங்க……அது போல இந்த ப்ரொசீசர் எல்லாம் பூர்விக்குத்தான் செய்றாங்கன்னு நினச்சுக்கோ“ அக்காவின் பதில் இது….

“நாம வேற எதாவது வழி இருக்கான்னு பார்க்கலாமே…” இன்னுமாய் மறுத்தாள் ரியா….. இவளது கருப்பை எந்த குறையுமின்றி கரு சுமக்கும் தகுதியோடு இருக்கிறதா என்ற பரிசோதனை மட்டும் தானே இப்போது முடிந்திருக்கிறதாம்….

கரு இன்னும் பத்திரமாக டெஸ்ட் ட்யூபில்தானே இருக்கிறது…..இனிமே தான் அதை இவளுக்குள் மாற்றும் எல்லா மெயின் ப்ரொசீசரும் ஆரம்பிக்கவே போகுதாமே….. எத்தனையை தாங்க…?

இவள் சம்மதம் சொன்ன போது சற்று தயக்கத்தோடு தலை ஆட்டி இருந்த  அக்கா…..இப்போது மறுப்பு சொல்லும் போது கதறிவிட்டாள்…. “நீ கூட என்ன ஏமாத்துவன்னு நான் நினைக்கவே இல்ல ரியா….. இப்டி பாதில விட்டுட்டு போறேன்னு சொல்றியே…..ஆசை காட்டி மோசம் செய்தா அத தாங்க எனக்கு தெம்பு இல்லையே……எம்ப்ரியோவ ப்ரிசர்வ் செய்தா….திரும்ப யூஃஸ் செய்றப்ப அது இறந்து போயிடலாம்….இல்ல பேபி ஹேண்டி ஹேப்டா பிறக்கலாம்னு சொல்றத நீ கேட்டதான….” சொல்லிக் கொண்டிருந்தவள் அடுத்து மயங்கி சரிய…..

“எனக்குன்னு இருக்றது பூர்வி மட்டும்தான் ரியா” என்றபடி இவளிடம் வந்து நின்றார் மாசி அண்ணா….

இங்கிவள் மனம் அங்ககீனமாவதை பொருட்படுத்தாமல் மீண்டும் தன் சம்மதத்தை தொடர்ந்தாள் ரியா…..

அடுத்து மாக் எம்ப்ரியோ ட்ரான்ஸ்ஃபெர் எனவும் எம்ப்ரியோ ட்ரான்ஸ்ஃபெர் எனவும் பல பெயர்களில்  ப்ரொசீசர்கள் நடந்தாலும்……எல்லாமே முந்திய வகையிலேயே கருப்பைக்குள் வழி தேடும் கருவிகள் மற்றும் கத்திட்டர்களின் செயல்களாகவே அவை அமைய…

அந்த ப்ரொசீசர் நேரத்திலும் அடுத்து அது நினைவு வரும் நேரங்களிலும் அதை தாங்க முடியாமல்…..நடப்பதெல்லாம் யாருக்கோ நடப்பது போலவும்….இவளுக்கும் அதற்கும் சம்பந்தம் இல்லை என்பது போலவும் எண்ண துவங்கி…… நடப்பதை மனதளவில் அசட்டை செய்தாள் ரியா….

உடலை ஒரு மரக்கட்டை போல உணர்வின்றி ஏற்று….. நடப்பவைகளுக்கு அதை தாரை வார்த்து…… மனதளவில் எங்கோ உலாவிக் கொண்டிருந்தாள்…..

 ஒரு வழியாய் கருமுட்டை கருப்பைக்குள் இடம் பிடித்து அந்த ப்ரொசீசர் சக்சஸ் என்ற போது….. அக்கா தாறுமாறாய் அதற்கு  சந்தோஷப்பட…..இவளால் முழுமனதாய் அக்காவை வாழ்த்த கூட முடிந்தது….. ஏனெனில் இவளைப் பொறுத்தவரை ப்ரெக்னன்ட் ஆகி இருப்பது யாரோ……இவளில்லை….. ஆம் அப்படி மட்டுமே திரும்ப திரும்ப நினைத்துக் கொண்டாள்….. இவளுக்கு அப்படி ஒன்று நடக்கவே இல்லை எனவும் மனதிற்குள் திணித்து வைத்தாள்……. அப்படி மட்டுமே இவளால் மனதை வலிக்காமல் பார்த்துக் கொள்ள முடிந்தது….

இதெல்லாம் முடிந்து இவர்கள் வீட்டிற்கு வந்த பின்தான் வந்து நின்றான் அந்த செபின்….. அக்காவிற்கு குழந்தை சரோகசி பேபி என வெளியில் சொல்ல விருப்பம் இல்லை….. மாசி அண்ணா வீட்டில் அவருக்கு குழந்தை இருந்தால் ஏற்றிருப்பார்களோ என்ற நினைவு அவளுக்கு….அப்படி இருக்க சரோகசி பேபி எனத் தெரிந்தால் அது  அவர் குழந்தையே இல்லை என்றுவிட்டால் என்னாவதாம்?

அதோடு ரியாவிற்கும் இது பெரும் சங்கடத்தை கொடுக்கும்…. முடிந்த வரை ரியாவை டெலிவரி முடியுமட்டும் ஒழித்து வைக்க திட்டமிட்டாள் அவள்…. டெலிவரி முடியவும் ரியாவை வெளியூரில் வேலை தேடி அனுப்பிடுவதாகவும் முடிவு செய்திருந்தாள்… குழந்தை ரியாவிடம் சேராமல் வளர்வதுக்கும் அதுதான் வழியாம்…. அடுத்து கொஞ்சம் டைம் எடுத்து உனக்கு மேரேஜ் செய்யலாம் ரியா என்றும் சொல்லி இருந்தாள்….. திருமண உறவு கூட இப்போது வலியும் அருவருப்புமானதாய் தோன்ற தொடங்கி இருந்தது இவளுக்கு…..

 குழந்தையின் வளர்ச்சி உறுதியானதுமே கூட  வேறு ஒரு வீடெடுத்து ரியாவோடு குடி போக எண்ணினாள் பூர்வி…. பக்கத்துல உள்ளவங்க பார்வையில எப்டியும் விழவேண்டி இருக்கும்…..தெரிஞ்சவங்க பார்த்தாதானே கஷ்டம்……. பேபி என்னோடது இல்ல உன்னோடதுன்னு நினைப்பாங்க……ரெண்டு பேருக்கும் கஷ்டம்……

வேற ஏரியா போய்ட்டா எல்லோரும் தெரியாதவங்க……நாமளும் யார்ட்டயும் பழகாம இருந்துப்போம்….. தெரியாதவங்க என்ன நினச்சா என்ன என்று தைரியமூட்டினாள் ரியாவுக்கு…. அப்பொழுதுதான் வயிறை சுமந்து கொண்டு கல்யாணமாகாத பெண்ணாக சொசைட்டியில் சுற்றி வருவது எப்படி இருக்கும் என நினைக்கவே தொடங்கினாள் தங்கை….. சம்மதம் சொன்ன நேரத்திலிருந்து இதுவரைக்கும் ப்ரொசீசர்ஸும் பூர்வியும் வேறு எதையும் யோசிக்கவே விடவில்லையே…. இதையெல்லாம் யோசிக்காம எப்படி அந்த முடிவுக்கு வந்தேன் என இப்போது தவித்து என்ன பலன்?

One comment

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.