(Reading time: 14 - 28 minutes)

வெளிக்கதவை திறந்து கொண்டு ஹரிணி வரும் வேளையில் அங்கே தோட்டத்தில் அமைத்திருந்த பெஞ்ச் மீது அமர்ந்து கொண்டு தோட்ட வேலை செய்ய வந்த பெண்களிடம் வளவளத்துக் கொண்டிருந்தான் ஹர்ஷா.  

இரு பட்டம்பூச்சிகள் அவனை சுற்றி வர அருகில் இருந்த சிறு மரக்கிளையில் இருந்த குருவிகள் அவனது கவனத்தை ஈர்க்க மெல்ல குரல் எழுப்பிக் கொண்டிருந்தன.

எங்கேயும் எப்போதும் அவன் சென்டர் ஆஃப் அட்ராக்ஷன் தான்.

ஹர்ஷவர்தன் என்பதிற்கு பதிலாக மாயக்கண்ணன் என்று பெயர் வைத்திருக்கலாம். அவள் செவிகளில் அடிக்கடி விழும் வாசகம்.

அவன் கண்ணன் அல்ல ஹர்ஷவர்தன். அவன் தனித்துவமானவன். எப்போதும் ஒருவரை இன்னொருவரோடு ஒப்பீடுவது ஹரிணிக்குப் பிடிக்காத ஒன்று. அது கடவுளுடன் என்றாலுமே.

“சில குணங்கள் ஒரே மாதிரி இருப்பதால் அப்படி சொல்வாங்க நீயேன் இதை சீரியசாக எடுத்துக்கிற. ஜாலியா சொல்லிட்டு போகட்டுமே” இலகுவாக சொல்வான் ஹர்ஷா.

அதை ஏற்கவும் முடியாமல் மறுத்து வாதிடவும் மனமில்லாமல் எப்போதும் போல எதுவும் சொல்லாமல் மௌனமாக இருந்து விடுவாள்.

வள் உள்ளே வருவதைக் கண்ட அந்தப் பெண்கள் சட்டென்று விலகி அவரவர் வேலையைக் கவனிக்கத் தொடங்கினர்.

அதைப் பார்த்தும் பார்க்கமால் உள்ளே சென்றவள் சிறிது நேரத்தில் சமைத்து முடித்து மேஜை மீது அடுக்கி வைத்து வெளியே எட்டிப் பார்க்க அப்போது ஃபோனும் ஐ பேடும் கையுமாக இருந்தான்.

‘சாப்பிட வா’ என்று அவள் சைகை செய்ய

“ஜஸ்ட் கிவ் மீ டென் மினிட்ஸ் ஹனி. ஆர்.சி (RC) லைன்ல இருக்கான்” சொன்னவன் தனது உரையாடலைத் தொடர்ந்தான்.

‘அப்போ இங்கேயே கொண்டு வரவா’ என்று அவள் சைகை செய்ய “ஹனி சாப்பிட கூப்பிடறா ஆர்சி...வில் கால் லேட்டர்” என்று கூறியபடியே கால் கட் செய்து விட்டு டைனிங் டேபிள் முன் வந்தமர்ந்தான்.

“நாம அட்வர்டைஸ் பண்ணலாம்ன்னு ஆர்.சி சொல்றான். நீ என்ன சொல்ற”

“எது பத்தி”

“இங்க இப்படி ஒரு சாரிடபிள் (charitable) கார்டியாக் சென்டர் இருக்குறது கூட நிறைய பேருக்கு தெரியாது. இப்போ நாம லோகல் பாபுலேஷன்க்கு மட்டும் தான் செர்வ் செய்றோம். தெரிஞ்சவங்க ரெஃபர் செய்றாங்க”

“ஹ்ம்ம்”

“ஒரு மினி டாக்குமன்ட்ரி மாதிரி எடுத்து அதை ஆன்லைன் அப்புறம் சேனல்ஸ் ஹெல்த் செக்ஷன் இதில போடலாம்ன்னு சஜஸ்ட் செய்துட்டு இருந்தான்”

“என்ன இந்த வருஷம் உங்க டர்ன் ஓவர் ரொம்ப ஜாஸ்தியோ. உன் பார்ட்னர் ரொம்ப தாராளமா இருக்கார்”

“ஹஹஹா என் அம்மா ஒரு பழமொழி சொல்வாங்க. வல்லவனுக்கு புல்லும் ஆயுதம்  சம்திங் லைக் தட்..ஆர்சி வில் மேக் கோல்ட் அவுட் ஆப் ஈவன் எ ராக்”

“அப்புறம் உங்க ஊரு வெள்ளை ராக் தானே கோல்ட். எல்லாம் மார்பில் செய்ற மாயம்”

“இருந்தாலும் அதை மார்கெட் செய்யுற ட்ரிக்ஸ், ஹி ஹாஸ் தட்”

“ஹ்ம்ம் பக்கா பிஸ்னஸ்மேன்...எவ்வளவு பணம் இருந்தாலும் போதும்ன்னு சொல்ல தோணாது. தே கீப் சேசிங்.... இன்னொரு தோசை வச்சுக்கோ” அவன் தட்டில் பரிமாறியபடியே அவனோடு வாதம் செய்து கொண்டிருந்தாள்.

“ஹ்ம்ம் வை வை. நீ அவனை இன்னும் பார்த்ததில்லை. அதான் இப்படி சொல்ற. ஹி இஸ் சச் அன் இன்ட்ரஸ்டிங் பர்சன். வாழ்க்கையை எப்படி வாழணும்னு அவன்கிட்ட இருந்து தான் கத்துக்கணும்”

“சரி சரி கத்துக்கலாம். போனை குடு. ப்ரணவ்க்கு கால் செய்வோம். பேஷன்ட்டை ஓடி க்கு (ஆபேரஷன் தியேட்டர்) ஷிஃப்ட் செய்தாச்சான்னு கேட்போம்”

“ஹனி. லெட் தெம் டூ. ஏதாச்சும் ஹெல்ப் இல்ல அட்வைஸ் வேணும்னா அவங்களே கால் செய்வாங்க”

“நீ சொல்றதும் சரி தான்”

அவள் அப்படி சொன்னதும் வேகமாய் எழுந்து சென்று ஜன்னல் வழியே எட்டிப் பார்த்தான்.

“என்னாச்சு”

“மழை வருதான்னு பார்த்தேன்”

“ம்ம்ப்ச்... சரி என்னவோ டிஸ்கஸ் செய்துட்டு இருந்தோமே..ஹ்ம்ம் உன் பிரண்ட் சகலகலா வல்லவன், உலகம் சுற்றும் வாலிபன் புராணம் பாடிட்டு இருந்த” உதட்டோரம் கேலி இழையோட அவள் சொல்லவும் அவளை முறைக்க நினைத்து தோற்றுப் போய் வாய் விட்டு சிரித்தான்.

“ஐடியா என்னவோ நல்லா தான் இருக்கு. ஆனா நீ இன்னொரு விஷயமும் யோசிக்கணும். பேஷண்ட்ஸ் நிறைய பேர் வர ஆரம்பிச்சா வி நீட் டாக்டர்ஸ், நர்சஸ், டெக்னீஷியன்ஸ்”

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.