(Reading time: 14 - 28 minutes)

“எனக்கும் தூக்கம் வரல. நான் ஜிம்க்கு போயிட்டு கொஞ்சம் நேரம் ஸ்விம் செய்துட்டு வந்து ஜாயின் செய்துக்கிறேன்” என்றவன் அவனது வீட்டினை நோக்கி செல்ல ஹரிணி தோட்டத்தைப் பார்க்க சென்றாள்.

மாலையில் எப்போதும் போல ஒரு சிறு புன்னகையை தாங்கியபடியே ஹரிணி பேஷண்ட்ஸ் பார்க்க மருத்துவமனை சென்றாள்.

“பிரவீன் ப்ரணவ் ஹவ் டிட் இட் கோ” சர்ஜரி பற்றி வினவினாள்.

“வென்ட் வெல் மேம்” அவர்கள் சொல்ல அங்கே இருந்த சார்ட் எடுத்துப் பார்த்தாள்.

“பேஷண்ட்ஸ் ரிலேடிவ்ஸ் எல்லோரையும் கவுன்சலிங் ரூம் வரச் சொல்லுங்க” என்றவள்

முதல் நாள் இரவு ஹர்ஷா சர்ஜரி செய்திருந்த பேஷன்ட்டை நோக்கி சென்றாள்.

இப்போது செயற்கை சுவாசம் அகற்றப்பட்டு கட்டில் மீது சாய்ந்து அமர்ந்து  செவிலியரின் உதவியால் சிறிது திரவ உணவை உட்கொண்டு இருந்தார்.

“எப்படி இருக்கீங்க” அந்த வட்டார மொழியில் அவள் வினவ உடனேயே கையெடுத்துக் கும்பிட்டார் அவர்.

“சீக்கிரமே குணமாகி வீட்டுக்குப் போகலாம். இனிமே வேலை நேரத்துல கவனமா இருக்கணும்” அவள் சொல்ல அதற்கும் அவர் கையெடுத்து கும்பிட்டார்.

அப்போது அவரின் மனைவி அங்கு வரவே அவரைப் பார்த்தும் புன்னகை செய்தாள் ஹரிணி.

“டாக்டர் மேடம் டாக்டர் சார் இல்லைங்களா” அந்தப் பெண்மணி வினவ

“இல்ல அவர் வரல. ஏன் மா ஏதாச்சும் சந்தேகம்ன்னா என்கிட்டே கேளுங்க”

“இவரு வேல பார்குற ஃபேக்டரி ஒனரே வந்து மருத்துவ செலவுக்கு அப்புறம் வேற ஏதோ பேர் சொல்லி பணம் குடுத்துட்டு போனாரு. டாக்டர் ஐயா கிட்ட கண்டிப்பா இதை சொல்லிடுங்கன்னு வேற சொல்லிட்டு போனாரு. அதான் சாரை தேடுனேன்”

“நான் சொல்லிடறேன் சரியா” அவர்களுக்கு சில அறிவுரைகள் கூறிய பின் கவுன்சலிங் ரூம் சென்றாள்.

கவுன்சலிங் ரூமில் நோயாளிகளின் அப்போதைய நிலையை அவர்தம் உறவினர்களுக்கு எடுத்துச் சொல்லி அவர்கள் சந்தேகங்களை நிவர்த்தி செய்தாள்.

‘பூர்வி உன்னோட ஐடியலாஜியை தான் நான் ஃபோலோ செய்றேன்’ மனதிற்குள் பூர்விக்கு நன்றி தெரிவித்துக் கொண்டாள்.

பின் பேஷண்ட்ஸ் அனைவருக்கும் உரிய சிகிச்சை முறைகளை சரி பார்த்து உத்தரவிட்டு அன்று பணியில் இருக்கும் மருத்துவரிடம் இரவு ஏதேனும் பிரச்சனை என்றால் தனக்கு கால் செய்யும் படி சொல்லவும் பிரவீன் ப்ரணவ் இருவரும் ஒருவரை மாற்றி மற்றோருவரைப் பார்த்துக் கொண்டனர்.

“என்னாச்சு” அவர்களைப் பார்த்து அவள் கேட்க

“மேம் இன்னிக்கு ஆன் கால் பிரவீன்” பிரணவ் சொல்ல

“நோ ப்ராப்ளம். லெட் பிரவீன் என்ஜாய் தி வீக்என்ட் வித் ஹிஸ் கிட்ஸ்” பிரவீன் தோளில் லேசாக தட்டி விட்டு மருத்துவமனையில் இருந்து வெளிவந்து கடற்கரை நோக்கிச் சென்றாள்.

ங்கே கரையின் ஓர் ஓரத்தில் கால்களை மடித்து உட்கார்ந்திருந்தவனை தூரத்தில் இருந்தே  கண்டு சிறிது திகைத்தாலும் மெல்ல அவனை நோக்கிச் சென்றாள்.

அவள் அங்கே வந்திருக்கிறாள் என்று அறிந்தும் அசையவில்லை அவன். அவன் அருகில் அவள் அமர இருவர் பார்வையும் தொடுவானம் நோக்கி.

அதோ மாலை சூரியன் கடலின் மடியில் தஞ்சம் புகுந்து மறைந்து போகிறது நம் கண்களுக்கு. அதோ கடலும் வானும் ஒன்றில் ஒன்றாய் கலந்து தழுவி நிற்கின்றன.

அருகில் செல்ல செல்ல தூரம் தொலைவில் நகர நகர எந்தப் புள்ளியில் மண்ணைத் தொடும்  வானம்??

சற்றே அந்த தொடுவானத்தில் இருந்து பார்வையை அகற்றி மேல நோக்கினால் அங்கே கையசைத்து செல்லும் வான் மேகம்.

எந்த எதிர்பார்ப்பும் இன்றி பொழியும் மேகம். தன்னிடம் இருக்கும் மழைச் செல்வம் அனைத்தையும் அள்ளிக் கொடுத்து விடும் முகிலினம்.

மேகம் பொழியும் மழையில் மண்ணைத் தொட்டு விடுகிறது வானம். அதன் தன்னலமற்ற செயலுக்கு கடல் தந்து விடுகிறது சன்மானம். நீராவியை மேல செலுத்தி நிறைத்து விடுகிறது மேகத்தின் கருவூலம்.

நமது வாழ்க்கையும் அது போல தானே. நாம் எதிர்பார்ப்பின்றி செய்யும் ஓர் நற்செயல் என்றேனும் வேறொருவர் மூலம் நம்மை திரும்பவும் வந்தடையும்.

WHAT GOES AROUND COMES BACK

மனதில் ஓடிய சிந்தனைகளை ஒதுக்கி மெல்ல பக்கவாட்டில் திரும்பிப் பார்த்தாள். நான் செய்த எந்த நற்செயல்களின் பலன் இவன். அவள் மனதில் இந்த எண்ணம் ஓட அவனோ அப்போதும் ஏதோ ஆழ்ந்த சிந்தனையில் தான் இருந்தான்.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.