(Reading time: 14 - 28 minutes)

“யெஸ். இந்த ஆங்கிள்ல நாங்க யோசிக்கல பாரேன். அதுக்கு தான் ஹனி வேணும்ன்னு சொல்றது”

“யூ அண்ட் யுவர் பட்டர் வோர்ட்ஸ். ஏதோ வாலை நிமிர்த்த முடியாதாம்” சாப்பிட்ட பாத்திரங்களை எடுத்துக் கொண்டு டிஷ் வாஷரை லோட் செய்தாள்.

அந்நேரம் அவளது மொபைல் அடிக்க கைவேலையாக இருந்ததால் அவனை எடுக்கச் சொன்னாள்.

டைனிங் டேபிள் மேல் இருந்த மொபைலை சென்று எடுத்தவன் டிஸ்ப்ளேவில் தெரிந்த பெயரைப் பார்த்ததும் ஆன் செய்து அளவளாவிக் கொண்டிருந்தான்.

“யாரு ஹரி” அவள் குரல் குடுக்க அவன் ஃபோனை எடுத்து வந்து அவளது காதருகில் வைத்தான்.

எதிர்முனையில் கேட்ட குரலில் ஒரு கணம் இறுகிய அவளது உடல் நொடியிலேயே சமன் ஆகி நிதானத்தை தழுவிக் கொண்டது.

எதுவுமே பேசாமல் மெளனமாக இருந்தாள். எதிர்முனையின் கெஞ்சல்கள் ஹர்ஷாவிற்கும் கேட்டது.

“பேசு” என்று அவளது தோளைத் தட்டி சைகை செய்தான்.

அவள் ஈரக் கைகளினாலேயே மொபைலை அவனிடம் இருந்து பிடுங்கி அணைத்து விட்டாள்.

“ஹனி”

“......”

“ஹனி அவ தப்பை உணர்ந்து மன்னிப்பு கேக்குறா. நீ இப்படி இருக்கிறது நல்லா இல்ல”

“.......”

“ஹனி...இன்னிக்கு அந்த பாண்டே வந்தாரே. அவர்கிட்ட கூட முகம் குடுத்து தன்மையா பேசின தானே. மானுகிட்ட நீ இப்படி வெறுப்பா இருக்கிறது இட்ஸ் நாட் ஃபேர்”

“சில இழைகள் அறுந்து போச்சுன்னா அது மறுபடியும் சேராது. அப்படியே ஒட்ட வச்சாலும் அபஸ்வரமா தான் போகும். அவரவர் வழியில போறது தான் நல்லது. அவ எங்கிருந்தாலும் நல்லா இருக்கட்டும். எனக்கு அவ மேல வெறுப்போ கோபமோ ஏன் சிறு வருத்தம் கூட இல்ல. அதே சமயம் ஒரு வழிப்போக்கனுக்கு என் மனசில் என்ன அன்பு சுரக்குமோ, ஒரு சக உயிர் மீது என்ன பிரியமும் மதிப்பும் தோணுமோ அது தான் அவ மேல எனக்கிருக்கும் உணர்வு. இதை அவ கிட்ட சொல்லியும் அவ கேக்கலைனா நான் என்ன செய்றது”

“என்ன ஹனி இப்படி விட்டேத்தியா பேசுற”

“அது விட்டேத்தியாவா என்னன்னு எனக்கு தெரில. ஐ ஜஸ்ட் ஃபீல் டிடாச்ட். ஐ ஜஸ்ட் கோ அலாங் தி ஃப்ளோ ஆஃப் லைஃப்”

அவள் விரக்தியில் சொல்கிறாளா என்று அவள்  முகத்தை உறுத்துப் பார்த்தான். ஆனால் அதில் மிகவும் களைத்துப் போய் இளைப்பாற ஏங்கும் பாவமே அவனுக்குத் தெரிந்தது.

“சரி நீ போய் தூங்கு கொஞ்ச நேரம்” அவனை துரத்தி விட எத்தனித்தாள்.

அவன் எதுவும் பேசமால் ஓர் அதட்டலான தோரணையோடு அவளது கரம் பற்றி அழைத்துச் சென்றான்.

அங்கே நடு ஹாலில் போடப்பட்டிருந்த அந்தப் பெரிய தேக்கு மர ஊஞ்சலில் அவளை அமர வைத்தவன் தானும் அருகில் அமர்ந்து அவளது தலையை அணைத்து தனது மடியில் சாய்த்துக்  கொண்டான்.

அவள் எதுவும் பேசவில்லை. எந்த எதிர்ப்பும் காட்டவில்லை. கால்களை மடித்து ஒருக்களித்து அவன் மடி மீது சாய்ந்து கண் மூடினாள்.

அவள் மட்டுமே அறிவாள் அவள் கடந்து வந்த வாழ்க்கைப் பாதையை.. அந்தப் பயணம் கற்றுக் கொடுத்த பாடங்கள் அவளை வெகுவாகப் பக்குவப்படுத்தியிருந்த போதும் ஒரு சில தருணங்களில் மனம் சிறு குழந்தையாய் ஏங்கிப் போகத் தானே செய்யும்.

அவள் விழியோரம் கசிந்தது சிறு ஈரம்.

“நான் தொடைகளில் தாங்கியே தாலாட்டிட

ஹர்ஷவர்தன் குழந்தைதான் ஹரிணிஹனி

ஏன் செவ்விழி கலங்குது பூந்தென்றலில்

கொதித்ததா குளிர்ந்ததா கூறடி

தலை சாய்த்திட மடிபாய் மேல்

திருமேனிக்கு சுகமோ

எந்த நாளிலும் வாடாத

இளந்தாமரை முகமோ

இதைக் காப்பது என்றும் பார்ப்பது

இந்த தாய் மனமே”

பாடலின் சுகமோ அவனது வருடலின் இதமோ அவள் மனம் ஆனது நிர்மலம்.

“கொஞ்ச நேரம் தூங்கு ஹனி” அவன் சொல்ல அவள் மறுத்து எழுந்து அமர்ந்தாள்.

“நீ போய் ரெஸ்ட் எடு. நான் தோட்ட வேலை செய்துட்டு இருக்க பொண்ணுங்ககிட்ட கொஞ்சம் இன்ஸ்ட்ரக்ஷன்ஸ் சொல்லிட்டு அப்படியே கொஞ்ச நேரம் உலாத்திட்டு ஹாஸ்பிடல் போறேன்”

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.