(Reading time: 19 - 37 minutes)

அவளின் மாற்றத்தை நேற்றே மஹிந்தன் உணர்ந்துவிட்டான். நேற்று காலை  9 மணிக்கு தன் ரூமில் மறந்து விட்டுப் போன முக்கியமான டாக்குமென்டை  எடுப்பதற்காக வந்த மஹிந்தன் இயல்பாக தனது அறையின் கதவைத் திறந்தவனுக்கு ழையாவின் பாட்டுச் சத்தம் கேட்டதும் தான் உள்ளே போனால் அவள் பாடுவதை நிறுத்திவிடுவாள் என்று டக் கென்று அங்கிருந்த அலமாரியின் பின் மறைந்து நின்றான்.

அவன் காலையில் கழட்டிப் போட்ட டீசர்ட்டை தனது இரவு உடையின் மீது போட்டிருந்த ழையா படுக்கையில் அவனின் தலையணையில் அனைவுடன் படுத்திருந்தவள் எழுந்தபடி 

நானே நானா யாரோ தானா ?

மெல்ல மெல்ல மாறினேனா? {என்று பாடியபடி சென்றவள் சுவற்றில் இருந்த அவனின் பெரிய உருவபடத்தின் வடிவை விரலால் வரைந்தபடி }

தன்னைத்தானே மறந்தேனே

என்னை நானே கேட்கிறேன் –{என்று பாடியபடி அவனின்படத்தின்மீது சாய்ந்து }

ஒருவன் நினைவிலே உருகும் இதயமே...

இதோ.... துடிப்பு {என்று பாடுகையில் அவள் உதடுகளும் துடித்தது }

உலர்ந்த உதடுகள் தனிமை கவிதைகள்

ஏதோ படிக்க –{என்றவள் அந்த இடத்திலேயே சரிந்து அமர்ந்து}

மதுவின் மயக்கமே உனது மடிமேல் இனி

இவள் தான் சரணம் சரணம் –{என்று பாடியபடி கண்மூடி இருந்தாள்}

மஹிந்தனுக்கு அவளை அப்படியே போய் எடுத்து அணைத்து அவளின் சரணம்தனை ஆராதனை செய்யவேண்டும் என்ற தாபம் எழுந்தது . ஆனால் இப்பொழுது தனக்கிருக்கும் வேலையில் அவளை தொட்டால் விலகமுடியாது என்பதனை உணர்ந்து நாளை விழா வரையில் அவனை அவள் தேடுவதை கண்டு ரசிக்க பொறுமையாக இருக்க நினைத்தான் .

ஆனால் அவனின் இருப்பை அவனது மொபைலின் ஒலி கவிழையாவிற்கு காட்டிக்கொடுத்தது .மொபைலின் ஒலியில் டக் கென்று கண்ணை திறந்தவள் அலமாரியின் மறைவிலிருந்து அவளை பார்த்தபடி முன்னேறி நடந்து வந்த மஹிந்தனை பார்த்து கன்னம் இரண்டும் சிவக்க வெட்கத்துடன் அவன் பிடியில் மாட்டாமல் ஓடி மறைந்தாள். .

உதட்டில் உறைந்த சிரிப்புடன் தான் தேடிவந்ததை எடுத்தவன் வெளியேறினான். ஓடிச் சென்றவள் தன் பின்னால் அவன் வருவான் என்று பால்கனியில் நின்றவள் சிறிது நேரம் கழித்தும் அவன் வராததால்  அறைக்குள் வந்தவள் அவனை காணாமல் சோர்ந்தாள்.

அதன் பின் இன்று தான் அவளின் முகம் காண முடிந்தது. மகிந்தனுக்கு  அவளின் சிணுங்கலும் ,வெட்கமும் நேற்றைய பாடலும் இன்றைய பிரத்யோகமான் ஒப்பனையும் சேர்ந்து அவனை போதை கொள்ளச் செய்தது

அப்பொழுது அண்ணா என்ற அழைப்புடன் ராசாத்தியை கையில் உணவு ட்ரேயுடன் கூப்பிட்டுவந்த மதுரா உங்கள்  இரண்டு பேருக்காகவும் கீழே எல்லோரும் காத்திருப்பது தெரியாமல் ரொமான்ஸ்ஸா பண்ணிட்டு இருக்கீங்க.......!

ம்..கூம் இப்போ இரண்டு பேரையும் தனியே விட்டால் சரிப்பட்டு வராது வாங்க நானே சாப்பாடு எடுத்துவைக்கிறேன் கீழே உங்களை கூப்பிட்டு வரச் சொல்லி அவசரப் படுத்துகிறார்கள் என்றவள் பரிமாற ஆரம்பித்தாள்.

மஹிந்தன் தங்கையைப்  பார்த்தவுடன் இயல்புக்கு வந்தது போல் பாவனை காண்பித்தான் ஆனால் ழையாவிர்க்கோ மதுராவின் கேலி பேச்சும் மஹிந்தனின் பார்வையும் சேர்ந்து அவனைப்போல் உடனே தன்னிலை அடைய முடியாமல் தவித்து விட்டாள்.

அவளின் தவிப்பை பார்த்து அவளை சமாதானப் படுத்தும் நோக்குடன் அவளின் கையை பிடித்து அழுத்தி அவளுக்கு ஆறுதலளித்தான்.

உடனே ம்..கூம்... என்று தொண்டையை கனைத்த மதுரா  உங்கள் ரொமான்சை எல்லாம் விழா முடிந்தபின் கன்டிநியூ பண்ணுங்கக்ப்பா, இப்பொ ஸ்பீடா சாப்பிட்டு முடிங்க, கீழே எல்லோரும் காத்திருக்கிறார்கள் என்று கூறினாள்

அதன் பின் அமைதியாக சாப்பிடவர்களை பார்த்தவள் தன்மொபைலில் இருவரும் ஒருவரை ஒருவர் காதலாக பார்த்தபடி சாப்பிடுவதை மகிழ்ச்சியுடன் பார்த்தவள் கிளிக் செய்து  மனம் சந்தோசமடைந்தாள் .

கீழே இரங்கி விழா நடக்கும் இடத்துக்கு ழையாவின் கைகோர்த்து அழைத்து வந்தான் மஹிந்தன் மேடையேறும் போது மைக்கை எடுத்தவன்  ஒரு கையில் அவளை பற்றி அவள் முகத்தை பார்த்தபடி ஏறிக்கொண்டே நேற்று அவள் பாடலை விட்ட இடத்தில் இருந்து பாடத்துவன்கினான் 

பிறையில் வளர்வதும் பிறகு தேய்வதும்

ஒரே நிலவு

உறவில் கலப்பதும் பிரிவில் தவிப்பதும்

ஒரே மனது

பருவ வயதிலே இரவும் பகலும் விரகம் ....

நரகம்... சரணம் சரணம் –    என்று பாடியவன் ம்.. சேர்ந்து பாடு பேபி என்றவன் அவளின் தோழில் கை போட்டு இருவருக்கும் பொதுதுவாக் மைக்கை பிடித்ததும்

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.