(Reading time: 19 - 37 minutes)

நானேநானா யாரோதானா?, மெல்லமெல்ல மாறினேனா?.

தன்னைத்தானே மறந்தேனே, என்னை நானே கேட்கிறேன்.

கோரசாக பாடிமுடித்தனர் .இருவரும் பாடியதும் அங்கு பெறும் கைத்தட்டல் ஒலி எழுந்தது அப்பொழுது கதிர் மேடைக்கு வந்து அவனிடம் ஒரு கவரை கொடுத்து விட்டு நகர்ந்தான்

அதில் இருந்த ரெட் ரோஸ் ஒன்றையும் ஓர் மோதிரப் பேழையையும் எடுத்தவன் அவளுக்கு மட்டும் கேட்கும் குரலில் பெண்ணே என் மேல் பிழை யை மன்னித்து ஏற்றுக்கொண்டதுக்கு என்னுடைய சின்ன பரிசு என்றவன்

முட்டிபோட்டு நின்று ஐ லவ் யூ ழையா என்று கொடுத்தான் அவனது கண்ணை பார்த்துக்கொண்டே தன் கண்களில் காதலை பிரதிபலித்தபடி மீ டூ என்றவள் விரல்பிடித்து தான் முதல் முதலாக் என்கேஜ் மெண்டுக்கு வாங்கிய மோதிரத்தை ழையாவிற்கு போட்டுவிட்டான்

ஐஸ்வர்யாவை தனது வாழ்க்கைத் துணையாக தன் வீட்டில் தேர்ந்தெடுத்தபோது தான் பார்த்து பார்த்து தான் வாங்கிய மோதிரம் அவளுக்கு பொருந்தவில்லை அது தன் வாழ்க்கையில் இப்போ ழையா பொருந்தியது போல் அவளின் விரலுக்கும் பொருத்தமாக இருந்தது

அதனை பார்த்து அங்கிருந்த இளைஞர் கூட்டம் ஓ...... என்று சத்தமாக   மகிழ்ச்சி ஆரவாரம் செய்தனர் .

அப்பொழுது மஹிந்தனும் ழையாவும்  சுற்றுப்புறம் உணர்ந்து வெட்கமுடன் தங்கள் பார்வையை விளக்கி தரையைப் பார்த்து குனிந்து நின்றனர்

மஹிந்தனின் வெட்கம் பார்த்த மதுரா ஐ!..... என் அண்ணன் வெட்கப்பட்டும் போது எவ்வளவு அழகாக் இருக்கிறான் என்று கேலி செய்யவும் அனைவரின் முகத்திலும் புன்னகை தோன்றியது .

மஹிந்தனால் கண்களை அவளை விட்டு அகற்ற முடியவில்லை. மேடைக்கு வந்தவர்களிடம் கைகுலுக்கியபடி வாழ்த்துக்களை ஏற்றாலும் அவனது கண் அவனை அறியாமலே நிமிடத்துக்கு ஒரு முறை அவளை ரசிப்பதை அவனால் தவிர்க்க முடியவில்லை.

அருகில் நிற்பவனின் முகம் பார்க்க அவளுக்கு ஆசை பிறந்தது ஆனால் தன்னை கண்ணெடுக்காமல் அவன் பார்ப்பதை உணர்ந்தவளுக்கு நேரடியாக அவனின் முகம் காண தடுமாற்றம் ஏற்பட்டது.

மதுரா, தான் தன் அண்ணனின் பார்வையையும் அண்ணியின் முகச் சிவைப்பையும்  கண்டு ம்...நடத்துங்க.. நடத்துங்க... கலாய்த்து கொண்டிருந்தாள். வருணின் நண்பர்கள் சிலபேர் மஹிந்தனின் கம்பெனியில் வேலைக்குச் செல்வதையே ஆம்பிசனாக வைத்திருந்தனர். அவர்களின் முன் அது தன் அக்காவின் கணவன் என்று கூறுவதில் பெருமை பொங்க நின்றான் .

அதிலும் வருணிடம் மஹிந்தன் காண்பித்த பிரியத்தில் வருண்  பூரித்துப் போனான். பார்வதிக்கும் ஈஸ்வரனுக்கும் அந்த விழாவின் மூலம் தன் மகள் வாழப்போகும் இடத்தின் செல்வாக்கை பார்த்து தாங்கள் தேடி முடித்திருந்தால் கூட இது போன்ற  இடத்தில் தன் பெண்னை முடித்திருக்க முடியாது என்ற உண்மை புரிந்தது .

மேலும் சுபத்ரா கூட அந்த சபையில் தங்களை அவளின் சம்பந்தி என்று மற்றவர்களிடம் மரியாதயாக அறிமுகப்படுத்தியது நிறைவை கொடுத்தது.

அங்கு வந்த வனித்தாதான் மேடைக்கு வந்ததும் வெளியில் சிரித்தது போல் கான்பித்துக்கொண்டாலும் ழையாவிடம் ஏன்டீ ஒரு போன் கூட உன்னால் பண்ண முடியாதா டீ!  நான் தான் லூசு போல் உனக்கு என்னாச்சோ ஏதாச்சோ என்று புலம்பிக்கொண்டு இருந்தேன் ஆனா நீ பெரிய ஆளானதும் இவலெல்லாம் எனக்குத் தேவையில்லைனு இருந்துட்ட.

ஆனா அம்மா அப்படி இல்லை டீ ,என் வீட்டிற்க்கே வந்து என்னை கையோட கூட கூப்பிட்டு வந்துட்டாங்கடீ என்று பொரிந்து கொண்டிருந்தாள்.

அவள் பேசுவதையும் பதில் கூற முடியாமல் விழித்துக் கொண்டிருந்த ழையாவையும் பார்த்த மஹிந்தன், வனித்தாவிடம்

“சிஸ்டர் என் ழையா பாவம் அவள் உங்க கூட பேசக் கூடாது என்று நினைக்க வில்லை அவளின் பழைய போன் மிஸ் ஆகிவிட்டது. சோ! உங்களை காண்டாக்ட் செய்ய முடியல”என்றவன் அவளின் மொபைலை வாங்கி அதில்  இருந்து ழையாவின் இப்போதைய நம்பருக்கு  ஒரு மிஸ்ட் கால் கொடுத்து இதை பதிந்து கொள்ளுங்கள் இனி தினமும் எனக்கு டிஸ்டபென்ஸ் இல்லாமல் என்னுடன் என் வொய்ப் இருக்கும் நேரம் தவிர மற்ற நேரம் நீங்கள் தாராளமாக உங்க பிரன்ட் கூட அரட்டை அடிக்கலாம் என்றான்.

அங்கு வருவதற்கு முன்புவரை தன் தோழி கவியை கஸ்டப்படுத்திய வில்லன் மஹிந்தன் என்று அவனை மனதுக்குள் வசவால் குளிப்பாட்டிக்கொண்டு இருந்தாள். உள்ளே நுழைகையில் கதிரை பார்த்தவள் மஹிந்தன் கூட பார்த்த அல்லக்கை தான இது என்று அவனை முறைத்துப் பார்த்தாள்.

அதுவரை வனித்தாவை கண்டுகொள்ளாமல் இருந்த கதிர், அவள் தன்னை முறைத்துப் பார்த்ததும் சுவாரஸ்யத்துடன் அவளை பார்வையிட ஆரம்பித்து விட்டான் .

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.