(Reading time: 19 - 37 minutes)

5 வருடங்களுக்குப் பிறகு...........

pemp

ழையா என்ற கூக்குரல் கீழே இருந்தவளுக்கு கேட்டதும் மேஜையில் சாப்பாட்டை எடுத்து வைத்துக்கொண்டிருந்த ழையாவிற்கு செல்லமாக சலிப்பு ஒன்று ஏற்பட்டது இப்போதான் இவரது  மகனுக்கும் மகளுக்கும் உடை உடுத்திவிட்ட கீழே வந்தேன் அதற்குள் அப்பாவிற்கு சேவகம் செய்ய அழைப்பு வந்துவிட்டது என்று நினைத்துக்கொண்டவள்

நீங்க என்ன சின்னப் பிள்ளையா? இன்னும் என்னையே தொங்கிகிட்டு நிக்குறீங்க என்று கேட்டபடி அவர்களின் அறைக்குள் நுழைந்தவளை திரும்பிப் பார்த்த மஹிந்தன், அதென்ன நீ  உன் பிள்ளைகளுக்கு மட்டும் தலை துவட்டிவிட்டு ட்ரெஸ் எல்லாம் போட்டுவிடுற, எனக்கு மட்டும் ஓரவஞ்சனை செய்ற, இதெல்லாம் நியாயமே கிடையாது. எனக்கும் நீதான் தலை துவட்டிவிடனும் சர்ட்டுக்கு பட்டன் போட்டு விடனும், டை கட்டிவிடனும், இல்லனா நானும் ஆபீசுக்கு போக மாட்டேன் என்று கூறியபடி அவள் பின்னால் வந்து அணைத்தான்.

அச்சோ...  போய் கட்டிலில் உட்காருங்கள் நான் தலை துவட்டிவிடுறேன் ஈரத்தலயுடனேயா  இன்னும் இருக்கீங்க? என்றவள், அவன் கட்டிலில் உட்கார்ந்ததும் அவன் தலையில் ஓர் கொட்டு வைத்தாள்

ஏய் ராட்சசி..... எதுக்கு இப்போ கொட்டுன என்று வலிக்காத தலையை தடவியபடி அவளிடம் கேட்டான்

அதற்கு அதென்ன.. உன் பிள்ளைகளுக்கு என்று சொல்றீங்க பெத்த அப்பாவே இப்படி சொன்னால்,  கொட்டாமால் என்ன செய்வாங்கலாம். என்றாள்.

அவள் கூறியதும் பலமாக சிரித்தபடி அவளை வம்பிழுப்பதற்காக என் பிள்ளைகள் என்று சொல்லவதற்கு எனி போட்டோஸ்! வீடியோஸ்! எதுவும் இருக்குதா பேபி என்று கேட்டதும் துவட்டி கொண்டிருந்த டவளே  சாட்டையாக   மாறியது ழையாவின் கையில்...

சொல்லிருவீங்களோ? பார்பதற்கு  அப்படியே உங்களின் ஜெராக்ஸ் ஆக இருக்கிறானே! என்று பார்த்தால் குணத்திலும் உங்களை கொண்டே இருக்கும் இடும்பனை நானே உங்கள் பிள்ளை இல்லை என்று சொன்னாலும் இந்த உலகம் நம்பாது, திரும்பவும்  இப்படி பேசுனீங்க பிச்சுப்புடுவேன் பிச்சு.... என்று கூறி அடித்தவளை தடுப்பதற்கு டவலை இழுத்ததும் அதனுடன் சேந்து அவளும் விழுந்தாள்.

விழுந்தவளை தன்னுடன் சேர்ந்தபடி அனைத்து கட்டிலில் வேண்டுமென்றே தானும் சாய்ந்து விழுந்தவன் அதுதான் உலகம் நம்பாதுனு தெரியுதில்ல பிறகு ஏன் கோபம் என்றபடி அவளை வாசம் பிடித்தான் .

அப்பொழுது மம்மீ என்றபடி அங்கு தன் மகன் வரவும் வேகமாக கணவனை ஒதுக்கி எழுந்து அமர்ந்தவள் வாடா என் ராஜா! தங்கச்சி எங்க என்று கேட்டாள்.

அதற்கு மஹிந்தன், வந்துருவானே எனக்கு வில்லனே என் மகன் தான். என் பொண்டாட்டியை என் கிட்டவே வரவிடமாட்டேன்கிறான். பிள்ளைய வளர்க்கச் சொன்னா உனக்கு பாடிகார்டை வளர்த்து வச்சிருக்க என்று கூறினான் மஹிந்தன் .

நான் என்னசெய்ய அவன் அப்படியே அவங்க அப்பாவை போலவே, நான் அவனை மட்டும் தான் கவனிக்கணும் என்று அடம்பிடிக்கிறான். நீங்களாவது அவன் முன் கொஞ்சம் அடக்கி வாசிக்கணும்.  அவனுக்கு சரிசமமா போட்டிபோட்டுக் கிட்டிருந்தா சின்ன பயனும் வீம்பு பிடிக்கத்தான் செய்வான் என்றாள்.

அப்பொழுது அப்பா , தள்ளி உட்காருங்கள் ... என்று அவளுக்கும் அவனுக்கும் நடுவில் உட்கார இடம் இல்லாததால் தன் தந்தையை தள்ளிச் செல்ல சொல்லி விரட்டி அந்த இடத்தை தான் பிடித்துக் கொண்டான் மஹிந்தன் மகன் .

அப்பொழுது தன் உதடு பிதுக்கி அழுதுகொண்டே வந்த மஹிந்தனின் மகள் டாடி... என்றபடி வந்தாள் .எதுக்குடா குட்டி அழுகுர என்று சேர்ந்தவாறு தனது அம்மாவும் அப்பாவும் கேட்பதை பாத்ததும் மேலும் தனது குரல் உயர்த்தி அழுதபடி அண்ணா ஹவ் நியூ டாய், .ஐ வான்ட் தேட். என்றவள் தன் அம்மாவை கண்டுகொள்ளாமல் தன் தந்தையின் மடியில் சென்று அமர்ந்தவள் பிளீஸ் டாட்! என்று அவனிடம் வாங்கி கொடுக்குமாறு கண்களில் ஜாடை காட்டினாள் அந்த குட்டி சாகசக்காரி

உடனே ழையா, குட்டிமா! வீட்டுல பேசும்போது தமிழில் தான் பேசணும் என்றவள், ராஜா குட்டிபாப்பா அழுறாள கொஞ்சம் அதை  கொடேன் என்றாள்.

உடனே அவன் ம்....கூம் என்னோடதை யாருக்கும் குடுக்கமாட்டேன் இது எனக்கு வருண் மாமா வாங்கி கொடுத்தது. அவளுக்கு அப்பா வாங்கி கொடுப்பாங்க என்றான் .

அதனைக் கேட்ட மகிந்த் என் குட்டி ஏஞ்சலுக்கு நான் ஈவனிங் வரும் போது புதுசு வாங்கிட்டு வருகிறேன். இப்போ அழுகாம சமத்து பொண்ணா இருக்கனும் என்றான்.

அவன் அவ்வாறு சொன்னதும் இந்த வருணும் நீங்களும் சேர்ந்து இப்படி கேட்டதெல்லாம் உடனே வாங்கிகொடுப்பது நல்லதில்லை சொல்லிட்டேன். பிறகு பிடிவாதம் ஜாஸ்தியாகத்தான் செய்யும். இவனப்பாருங்க.. தன்கிட்ட உள்ளதை தங்கச்சி ஷேர் பண்ணி பழகணும் அப்போதான் நல்லது என்றாள்.

அவள் அவ்வாறு சொன்னதும் மஹிந்தனின் கண் அசைவில் தன் பிள்ளைகளை எழுந்து நிற்க சொன்னவன். கோரசாக கருத்து கந்தசாமி கிளம்பிட்டாயா என்று கோரசாக சொன்னதும்,

பொய் கோபத்தோடு உங்களுக்கு நான் சீரியஸா பேசுறது என்னை காமடி பீசா காட்டுதா  மூணுபேருக்கும், இன்னைக்கு பிரேக் பாஸ்ட் இட்டிலி மட்டும் தான் எப்படி என்னோட பனிஸ்மென்ட் என்றபடி கீழே சென்றாள் .

மூன்றுபேரும் அவளை கொஞ்சிகொண்டும் கெஞ்சிகொண்டும் அவள் பின்னாலே இறங்கிச் சென்றனர்.

வாழ்கையில் தனக்கு கிடைத்த கணவன் தன்னை நிர்பந்தத்தில் நிறுத்தி அவனிடம் கொண்டுவந்தவனானாலும் அவன் தான் செய்த தவறுக்கு அவளிடம் பெண்ணே என் பிழை பொருத்து உன் அன்பை தா!.. என்று வேண்டினான். பெண்களுக்கு இயற்கையில் உள்ள தாய்மை குணத்தினாளும்   தன் மனதில் உதித்த காதலால தன் கணவனை பிடிவாதக்குழந்தயாக பாவித்து மன்னித்து ஏற்று இன்று மகிழ்ச்சியாக குடும்பம் நடத்துகிறாள் நம் நாயகி.....

உறவென்று ஆனபின் அதனை ஓங்கி வளர்க்க பெண்ணானவள் எதையும் மன்னிக்கவும் செய்கிறாள். அதற்காக தன்னையே திரியாகுகிறாள் இது பெண்களுக்கு சாபமா? வரமா ? விடை கூறுங்கள் நண்பர்களே..........

முற்றும்

Episode # 19

{kunena_discuss:1081}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.