(Reading time: 22 - 44 minutes)

ந்து மணி அலாரம் அடிப்பதற்கு முன்னதாகவே விழிப்பு வந்தது செல்வாவிற்கு, எப்போதும் இப்படித்தான், இருந்தும் அலாரம் அடிக்கட்டும் என்று படுத்திருப்பான் அவன்… ஆனால் இப்போதோ, அலாரம் அடிப்பதற்கு முன்பே அதை அணைத்திருந்தான்… நேற்று வரை அவன் வாழ்க்கை முறை வேறு… இன்று அப்படியல்லவே, அவனது வாழ்க்கையையும், அறையையும் பங்குப் போட இன்னொருத்தி வந்திருக்கிறாளே… படுக்கையில் இருந்தப்படியே மெல்ல திரும்பி அவளைப் பார்த்தான்…

அவன் பக்கமாய் திரும்பி ஒருக்களித்தப்படி படுத்திருந்தாள் நர்மதா… அவள் இவன் மனைவியாய் இவன் அருகில் இருக்கிறாள் என்பதை உணர்ந்தாலும், இன்னும் கூட இன்னொரு பக்கம் இதெல்லாம் கனவாக இருக்குமோ என்றும் யோசிக்க வைக்கிறது… கொஞ்சம் அழுத்தியே தன் கையை கிள்ளிப் பார்த்தான்…. வலித்தது… கனவில்லை நிஜம் தான், இப்போது எழுந்து உட்கார்ந்தவன், திரும்ப ஒருமுறை அவளைப் பார்த்தான்… தலையணை மேலே தன் இரு கைகளையும் வைத்து, அதை தன் தலையணையாக்கி உறங்கிக் கொண்டிருந்தாள் அவள்...

நேற்று இரவு இவள் செய்த அலப்பறை என்ன…?? இன்று இவள் படுத்திருக்கும் தோரணை என்ன..?? மெலிதாக புன்னகைத்துக் கொண்டான்….

இரவு இவனது அறையில் இவன் நுழையும் போது, எளிமையான முறையில் மலர்களால் அந்த அறை அலங்கரிக்கப்பட்டிருந்தது…. “இப்போ இதெல்லாம் அவசியமா..??” என்று சிந்தித்தவன், தன் அன்னையை தேடி வந்தான்….

“இதெல்லாம் சம்பிரதாயம்ப்பா… அதெல்லாம் உடனே நடத்திடனும்னு எல்லாம் சொல்றாங்க… புரிஞ்சுக்க” என்று கோமதி சொல்லி அனுப்பி வைத்தார்.

திரும்ப அறைக்கு இவன் வந்த கொஞ்ச நேரத்திலேயே, நர்மதாவும் அறைக்குள் நுழைந்தாள்…. கையில் பால் சொம்போடு தலையை தாழ்த்தியப்படியே அவள் உள்ளே வந்தாள்….

இன்று எதிர்பார்க்கததெல்லாம் நடந்து, இவனுக்கு அதிர்ச்சியையும் வியப்பையும் தந்தது… இதில் அவளுக்கு இந்த சூழ்நிலை எப்படி இருக்கும்..?? அவள் பக்கம் யோசிக்கும்போது இதெல்லாம் தேவை தானா?? என திரும்ப யோசித்தான்…

இந்த சூழ்நிலையை அவள் சங்கடமாக நினைக்காமல், சகஜமாக மாற்றுவது எப்படி?? இவன் சிந்தித்துக் கொண்டிருக்க, னங் என்ற சத்ததில் அவள் பக்கம் பார்த்தான்… கையில் இருந்த பால் சொம்பை கட்டிலுக்கு பக்கத்தில் இருந்த மேஜை மேல் வேகமாக வைத்ததில் தான் அந்த சத்தம் கேட்டது….  அவள் வைத்த வேகத்தில் கொஞ்சம் பாலும் அங்கே சிதறியிருந்தது…. அவளோ இவனை முறைத்துக் கொண்டிருந்தாள்….

முறைத்த வேகத்தில் அவன் அருகிலும் வந்தாள்… “உங்களுக்கு யாராவது தியாகிப் பட்டம் கொடுக்கறதா சொன்னாங்களா..?? எதுக்காக இந்த கல்யாணத்துக்கு ஒத்துக்கிட்டீங்க…??” கோபமாக கேட்டவள்,

 “என்னைப் பத்தி தான் உங்களுக்கு தெரியுமே… நான் பணத்துக்காக தான் உங்களை காதலிச்சேன்… இப்பவும் பணத்துக்காக தான், உங்க அண்ணனை கல்யாணம் செஞ்சுக்கறதா இருந்தேன்… இந்த கோட்டையை கைப்பற்றி உங்க சாம்ராஜ்யத்தை கைப்பற்றுவது தான், என்னோட முக்கிய குறிக்கோள்… இன்னும் என்னென்னல்லாமோ என்னைப் பத்தி தெரிஞ்சு வச்சிருக்கீங்களே… அப்புறம் என்ன…?? உங்க அண்ணன் என்னை வேண்டாம்னு சொன்னதும், இந்த கல்யாணம் நிக்கப் போகுதுன்னு தெரிஞ்சதும், அப்பா ரொம்ப சந்தோஷம்னு இருக்காம… எதுக்காக கல்யாணத்துக்கு ஒத்துக்கிட்டீங்க…” ஆவேசமாக பேசினாள்…

“நர்மதா… அந்த சூழ்நிலையில..” அவன் முழுதாக சொல்லி முடிப்பதற்குள்,

“அந்த சூழ்நிலையில உங்க அண்ணன் சொன்னதை தட்ட முடியல… அப்படித்தானே… உங்க அம்மாவும், அண்ணனும் அவங்க செஞ்ச தப்புக்காக் தலை குனிய கூடாது… யாரும் அவங்கள அவமானப்படுத்தக் கூடாது… அதுக்காக என்னை கல்யாணம் செஞ்சு பாழுங்கிணத்துல விழ தயாராயீட்டீங்க.. இல்ல..” என்று கேட்டாள்…

“இல்ல நர்மதா… அதனால இல்ல.. அது வந்து….

“எனக்கு தெரியும்… அதுமட்டும் தான் காரணம்… நீங்க உங்க அண்ணன் கிட்டேயும், அம்மாக் கிட்டேயும் பேசினதைக் கேட்டேன்…” என்று இப்போதும் அவனை பேசவிடாமல், தான் கேட்டதை, மனதில் நினைத்ததை மட்டுமே கூறினாள்…

“அவங்கக் கிட்ட பேசினதை இவக் கேட்டாளா….??” இவன் கொஞ்சம் அதிர்ச்சி கலந்து அவளைப் பார்க்க…

“உங்க வீட்ல செஞ்ச தப்பை சரிப் பண்ண, என்னை கல்யாணம் செஞ்சுக்கிட்டீங்க…. ஆனா என்னை கல்யாணம் செஞ்சு பெரிய தப்பு பண்ணீட்டீங்க…. நீங்க வேணா உங்க குடும்பத்துக்காக என்னை கல்யாணம் செஞ்சுருக்கலாம்… ஆனா நான் ஏன் கல்யாணத்துக்கு ஒத்துக்கிட்டேன் தெரியுமா…???

என்னோட அப்பா, அம்மாக்காகவோ, இல்லை யமுனா சொன்னதுக்காகவோ இல்லை… நான் இந்த கல்யாணத்துக்கு ஒத்துக்கிட்டதுக்கு காரணம்… நீங்க எப்படி என்னைப் பத்தி நினைச்சீங்களோ அதை செய்ய தான், அதுக்காக தான் இந்த கல்யாணத்துக்கு சம்மதிச்சேன்…. இவ்வளவு பெரிய வீட்டு மருமகளா வர கிடைச்ச சான்ஸ நான் விட்டுடுவேனா… இந்த ஆஸ்தியெல்லாம் நான் அனுபவிக்க வேண்டாம்… ஏற்கனவே உங்க அண்ணன் கல்யாணம் வேண்டாம்னு சொல்லிட்டாரு…. இனி அவர் கல்யாணம் நடக்கறது சந்தேகம் தான்… உங்க அத்தையும், அம்மாவும் வயசானவங்க… இந்த வயசான காலத்துல அவங்க என்னத்தை அனுபவிக்கப் போறாங்க…  அதனால இந்த வீட்டு ஒரே மருமகளா, சீக்கிரம் எல்லா பவரையும் என்கிட்ட கொண்டு வந்து, நீங்க சொன்ன மாதிரி இந்த சாம்ராஜ்யத்தை நான் கைப்பற்ற வேண்டாம்… அந்த கனவோட தான், நான் இந்த வீட்டுக்கு வந்ததே…. புரிஞ்சுதா..??

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.