(Reading time: 22 - 44 minutes)

வள் நேற்று இரவு பேசியதை இப்போதும் நினைத்துப் பார்த்தான்….  முதலில் அவள் பேசியதை கேட்டப்போது, தான் பேசியது அவளை எவ்வளவு பாதித்திருக்கிறது, என்று உணர்ந்தவனாக வருத்தப்பட்டு கொண்டிருக்க, அடுத்து பேசியதை ,கேட்டப்போது, சிரிப்பு தான் வந்தது… தன்னை கோபப்படுத்த மட்டும் தான் அவள் அப்படி பேசினாள் என்பது நன்றாகவே அவனுக்கு புரிந்தது… அவள் பேச்சை ரசிக்கத்தான் செய்தான்…. பின்பு அவள் பேசியதும், செய்ததும் கூட இவனை ரசிக்க வைத்தது…. இவன் பேச நினைத்ததை கூட பேச முடியாமல் போனது… மீண்டும் அவன் முகத்தில் புன்னகை குடி வந்தது….

முதல் பார்வையிலேயே ஒருவர் மீது காதல் வருமா..?? நர்மதாவை பார்க்கும் வரை அவன் அதை பொய் என்று தான் நினைத்தான்… ஆனால் அவளை பார்த்தப்போது அவன் உணர்ந்தது என்ன..?? அடிக்கடி அவளைப் பார்க்க அவள் முன் போய் நின்றதென்ன..?? அவளிடம் பேசவும் பயம்… ஏற்கனவே ஒருவன் காதல் என்று சொல்லி அவளை தொந்தரவு செய்துக் கொண்டிருந்தான்… இதில் இவனையும் அப்படி நினைத்துவிடக் கூடாதே.. என்று தினம் அவளை பார்வையாலே தொடர்ந்தான்…. அவளைப் பார்க்காத ஒரு நாளும் என்னவோ போல் இருந்தது…. இப்படியே நாட்கள் நல்லப்படியாக சென்றிருந்தால், இவனே அவளிடம் காதலை சொல்லியிருப்பான்…

ஆனால் திடீரென்று இவன் குடும்பத்தில் வந்த பிரச்சனை, அந்த சாரு கொடுத்த ஏமாற்றம், இவனையும் மாற்றியது…. காதல் கல்யாணமெல்லாம் பணத்தை பொறுத்து அமைவது என்ற ஒரு தவறான யூகத்தை கொடுத்தது…. காதல் என்ற சொல்லே அப்போது வெறுப்பை அளித்தது…. இது தன் சகோதரன் வாழ்க்கையில் நடந்ததை வைத்து மட்டும் முடிவு செய்ததில்லை…. தன் பள்ளிக் கால நண்பன் ஒருவனின் காதல் தோல்வியும் அதற்கு ஒரு காரணம்…. உயிருக்கு உயிராய் காதலித்தவனை விட்டுவிட்டு, வசதியான ஒருவனை மணக்க அந்த பெண் சம்மதித்ததால், அவன் மனம் நொந்து இவனிடம் புலம்பியதெல்லாம், அந்த நேரத்தில் தான், அதுவும் அந்த சமயத்தில் இவன் குடும்ப சூழ்நிலை வேறு சரியில்லாமல் இருந்தது…. இவன் மனநிலை அவ்வாறு இருக்க, அந்த நேரம் நர்மதா தன் காதலை அவனிடம் சொல்லியிருந்தாள்..

அதுவும் அன்று தான் காதலித்தப் பெண்ணுக்கு திருமணம் முடிந்ததால், விரக்தியில் தன் நண்பன் தற்கொலைக்கு முயற்சித்திருந்தான்…. குடும்பத்தார் பார்த்து அவனை மருத்துவமனையில் சேர்த்து, அவன் உயிர் பிழைத்துவிட்டான்… இருந்தும் தன் நண்பனுக்கு நேர்ந்தது இவனுக்கு வருத்தத்தை கொடுத்தது… கல்லூரிக்கு வந்தாலாவது மனநிலை மாறும் என்று அவன் வந்திருக்க, அவன் எப்படிப்பட்ட மனநிலையில் இருக்கிறான் என்று புரியாமல் நர்மதா அவனிடம் தன் மனதை திறந்திருந்தாள்…

அவனும் அவளிடம் என்னப் பேசுகிறோம் என்று தெரியாமல், அந்த சாரு, தன் நண்பனின் காதலி இவர்கள் மேல் இருந்த கோபத்தை, காதல் மேல் அப்போது இருந்த வெறுப்பை மொத்தமாக இவளிடம் காட்டிவிட்டான்…. வார்த்தையால் இவளை காயப்படுத்திவிட்டான்….

இப்போதும் அதை அவன் நியாயப்படுத்த விரும்பவில்லை… ஆனால் அன்று தான் பேசியது தவறு என்று அவன் புரிந்துக்கொள்ளவுமில்லை… அந்த நேரம் நர்மதா இவனை விட்டு முழுக்க விலகிவிட்டாள்… இருந்தும் அதே கல்லூரியில் அவன் அருகில் அவள் இருந்ததால் என்னவோ அவளின் பிரிவை அவன் உணரவுமில்லை… இதில் குடும்ப சூழ்நிலை வேறு சரியாகமல், இவனை எதைப் பற்றியும் யோசிக்கவிடவில்லை…

ஆனால் காலம் அப்படியே இருக்கவில்லையே.. குடும்ப சூழ்நிலை சரியாகி சுமூகமான நிலை வந்தது…. அந்த சாரு கொடுத்தது ஏமாற்றம் இல்லை, அது ஒரு துரோகம், திட்டமிட்ட சதி என்று புரிய வந்தது… ஏனோ கல்லூரி கால வயது தராத பக்குவத்தையும், அனுபவத்தையும் அதன் பிறகு தான் அறிந்துக் கொண்டான்... நர்மதா மேல் இருந்த காதல் காணாமல் போனது என்று நினைத்தால், அது இதுவரை உள்ளுக்குள்ளே ஒளிந்திருந்தது, அதன்பின் வெளியே வந்தது… நர்மதாவின் பிரிவை அப்போது தான் உணர ஆரம்பித்தான்…. ஆனால் அதை அவன் புரிந்துக் கொண்ட நொடி, நர்மதாவை அவனால் பார்க்க முடியவில்லை… கல்லூரிக்கு சென்று பார்த்தால் அவள் அந்த கல்லூரியிலிருந்தே சென்றுவிட்டாள்… அப்போது அவளோடு படித்தவர்களுக்கு அவளைப் பற்றிய எந்த தகவலும் தெரியவில்லை… கல்லூரியில் கேட்டால், ஒருவேளை விவரம் கிடைத்திருக்கலாம், ஆனால் அது சரியில்லை என்பதை உணர்ந்தவன், அந்த முயற்சியை விட்டுவிட்டான்…

அவள் அருகில் இருந்தவரை அவளின் அருமையை உணராதவன், அவள் பிரிந்துப் போனதும் அவளை தேட ஆரம்பித்தான்…. நர்மதாவை ஒருமுறையாவது கண்ணுல காட்டுங்க கடவுளே… அதுக்கப்புறம் அவளை விடவே மாட்டேன்… அவளை பேசினதுக்கும் மனதார மன்னிப்பு கேட்பேன்… அவக்கிட்ட என்னோட காதலை சொல்லி, அவளை கல்யாணம் செஞ்சுப்பேன்…. அவளை சந்தோஷமா வச்சுப்பேன்…” என்று மனதுக்குள்ளே புலம்பினான்…. ஆறு வருஷமா, அவளை பார்த்துவிடவும், தன் காதலை அவளிடம் சொல்லிவிடவும் ஏக்கத்தோடு காத்திருந்தான்…. கண்டிப்பா நான் மனசார மன்னிப்பு கேக்கவாவது, நர்மதாவை பார்ப்பேன் என்ற நம்பிக்கையோடு இருந்தான்….

என்னத்தான் ஒரு பக்கம் இந்த நம்பிக்கை இருந்தாலும், இன்னொரு பக்கம் அவள் தனக்கென வேறொரு வாழ்க்கையை தேர்ந்தெடுத்திருப்பாளோ என்ற பயமும் இருந்தது…. கடைசியில் அந்த பயம் தான் வென்றது…. தன் அண்ணனுக்கு பார்த்திருக்கும் பெண்ணாய் அவளைப் பார்த்தான்…. எப்போது அவள் வேறொருவனை மணக்க சம்மதித்தாளோ… அப்போதே இவன் அவளை விட்டு விலக முடிவெடுத்துவிட்டான்….

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.