(Reading time: 35 - 70 minutes)

“ஓ” தர்ஷினிக்கு அதிர்ச்சியும் ஆச்சர்யமுமாய் இருந்தது, அருகே படுத்திருந்த கீர்த்தனா கூட ரிஷியின் குரலைக்கேட்டு விழித்துப்பார்த்தாள்.

“யூ டோன்ட் ஒரி, ஐ வில் டேக் கேர் ஆஃப் ஹெர், அண்ட் ஐ வில் லீவ் ஹெர் ந் ஹெர் ஹோம்!” நான் அவளைப் பார்த்துகொள்கிறேன் என்பதை தெளிவாய் ஆங்கிலத்தில் சொன்னான். இவளுக்கு தான் காவ்யாவின் வாய் மொழிவழியே கேட்காது அவளின் நிலையை நம்ப முடியவில்லை.

“சாரி டூ டிஸ்டர்ப் யூ அண்ணா, அவ பக்கத்தில இருந்தா ஒரு டூ மினிட்ஸ் குடுக்கிறீங்களா?”

இவனுள் மெல்லிய பொறாமை எட்டிப்பார்த்தது, அதற்குள் அவள் பேசியது இவள் காதில் விழவும் தர்ஷினி பயந்துபோகக் கூடும் என நினைத்தவள், அவனிடமிருந்து தன் கைப்பேசியைப் பரித்து மிக இயல்பாய் பேசினாள், “தர்ஷூ, நான் டின்னர் போயிட்டு, வீட்டுக்கு போறேன், ரிஷி கூடத்தான் இருக்கேன், தனியா எங்கேயும் போகல, வொரி பன்னாத, நாளைக்கு பேசுறேன், வச்சுடவா?” தோழிக்கு புரிந்தது. புன்னகையுடன் அழைப்பைத் துண்டித்தாள். தர்ஷினி இவள் நிலையைப்பற்றி என்ன நினைப்பாள் என இப்போது தோன்றியது, நிச்சயம் அடுத்தமுறை அவள் கண்களில் படும்போது இவளை கேலிசெய்து வருத்து எடுத்துவிடுவாள்.  அழைப்பைத் துண்டித்து நிமிர்ந்தவளிடம்,

“சோ, ஹனி, லெட்ஸ் மூவ் ஃபார் டின்னர்? “ எழுந்தான்.

இவளால் இன்னும் எழ முடியவில்லை விரல்களில் வலி பின்னியது.  தட்டுத்தடுமாறி எழுந்தவள் ஒற்றைக் காலில் நொண்ட, இவனுக்கு இன்று சரியான விருந்துதான், ஆனால் அவள் வலிக்கு உண்மையாக வருந்தியவன்,

“கால் பிசகியிருக்கும் காவீ, அப்டியே நடந்தா இன்னும் ஸ்ப்ரெயின் ஆகும், கொஞ்சம் இரு” என அவனது மேசை ட்ராயரைத் திறந்து, ஏதோ வலி மருந்து எடுத்து வந்தான். இவள் கையை நீட்டி அதை பெற நினைத்தபோது மென்மையாக அவள் வலக்கை தோள்ப்பட்டையைப் பிடித்து, பீம் பேக்கில் ஆமரசெய்தான், அவள் எதிரே ஒரு காலை மடக்கி, மறுகாலை நீட்டி சாவகாசமாக நீட்டி அமர்ந்தான், சுழுக்கியிருந்த அவள் கால் பாதம் மீது விரலைவைக்க, இவள் பதறிபோனாள். இதுவரை நடந்தது போதாதா? இன்றைய தினத்திற்கு போதும் போதும் என்பதுபோல் ஏதேதோ நடந்து விட்டது, மிச்சத்தையாவது தடுக்க முடிந்தால் பெண்மை கரையாது நிற்கும்.

“ஹையோ, நான் தேச்சுக்கிறேன், ப்ளீஸ்!”

அவன் அதைப் பொருட்படுத்தவேயில்லை, “ஹலோ, உன்னோட முருங்கக்குச்சி கையால நீ தேச்சா நடக்கிறதுக்கு நாலு நாள் ஆகும், பரவாயில்லையா?” , சொன்னவன் நிதானமாக அவள் காலைப்பற்றி அவன் தொடையின் மீது பதித்து, விரல்களை நீவி விட்டான், வலித்தது, கத்தினாள் தான், சத்தம் தொண்டையைத் தாண்டவில்லை, நெஞ்சுக்கும் தொண்டையிக்கும் இடையே ஏதோ ஒன்று அடைத்தது. கொஞ்சம் இவன் விரல்களால் அழுத்தி நீவ, “ஸ்ஸ்..” என்ற சத்தம் மட்டும் அவளுள் பல்லைக்கடித்து வலியைப் பொருத்தாள். இவள் கன்னத்தில் அவன் அரைந்த அன்றும் கூடத்தான் அவன் பலம் தெரிந்தது, இன்றும் அவன் கைபலம் புரியத்தான் செய்கிறது, “அன்று, நரம்புகள் புடைக்க, கடும் கோபத்தில் இவளை நெருங்கியவன் இவன் தானா?” ஆனால் அதற்காக இன்று இவன் மீது கோபம் படமுடியாது தான்.

“ம்ம், இப்ப ட்ரை பன்னு உன்னால நடக்க முடியும்” என்றான், இன்னும் அவனது இடக்கை இவள் வலது தோளை அழுத்திப்பிடித்திருந்தது. அந்த அழுத்ததில் தான் தடுமாறி நின்று விரல்களை ஊன்றினாள், முன்பிருந்ததுபோல் வலியில்லை, ஆனால் அவன் முன் விரைவாக நடந்தால், முன்பு நடித்ததாய் நினைப்பானா என்ற எண்ணம் வந்தது. வலியை அடக்கி நடப்பவள் போல், பாவனையில், ‘ஸ்ஸ்..” என்று சத்தத்துடன் இரண்டடி எடுத்துவைத்தாள், மூன்றாவதாய் அவள் பாதம் நிலத்தில் படவில்லை, காற்றில் எழும்பியது, அவள் காரணம் ஆராயும் முன் இவளை கைகளில் தூக்கியிருந்தான் ரிஷி. “என் கழுத்தில கைப்போட்டுக்கோ காவீ, உனக்கு இன் கன்வீனியன்டா இருக்காது, இவளும் செய்தாள், பின் நடிப்பதென்று ஆயிற்று, இனி கால் வலிக்கவில்லை என இவள் சொன்னாலும் அவன் விடப்போவதில்லை, முதன்முறையாக ஒர் ஆணின் நெருக்கத்திற்கு, வெட்கி மனம் குறுகுகிறது..அவன் முகத்தைப்பார்க்கும் தைரியமில்லை, எனினும் இவன் எவ்வளவு கடினப்பட்டு இவளை தூக்கியிருப்பான் எனப் பார்க்க ஆர்வம் மேலிட்டதில், அவன் முகத்தை ஆராய்ந்தாள், அதற்குள் அவன் அறையைத் தாண்டி தளத்தின் படிகட்டுகள் அருகே வந்துவிட்டான்,  இவளை தூக்கியதாலோ, படிகளில் இறங்கும்போதோ, அவனுக்கு மூச்சு வாங்கியாதாய் தெரியவில்லை, கைகளில் ஒரு காகித மூட்டையை சுமதுபோன்று எளிதாக இறங்கினான், இவள் அவன் முகம் பார்க்கும்போது கண்ணடித்து சிரித்தான், முதன்முறையாக வெட்கம் பிடுங்கித்தின்றது.

தரைத்தளத்திற்கு அவன் வரும்போது, இவனது அசிஸ்டென்ட் ஓடி வந்தார், “சார் லிஃப்ட் வேலை செய்யுதே!” என்றார், இப்போது தான் இவளுக்கு உரைத்தது வேண்டுமென்றே இவளைத் தூக்கி சுமக்கிறான் என்று. அவன் கைகளிலிருந்து கால்களை மெதுவாக தரையில் ஊன்றி நின்று அவனை முறைத்தாள், இன்னும் அவனது ஒரு கையை அழுத்திப்பிடித்திருந்தாள் தான்.

“லிஃப்ட் நல்லா தாங்க வேலை செய்து” அவனது அசிஸ்டென்ட் புன்னகைத்தார், “ரூம பூட்டிருங்க” என்றான், சரி என்பதாய் தலை அசைத்து அவர் விலகினார், இவள் இவனைத்தான் இப்போது பார்த்திருந்தாள், அவனது நெற்றியில் முத்துமுத்தாய் வேர்வை துளிகள், பெண்ணின் கண்ணில் விழுந்தது, இவனையே பார்த்திருந்தவளின் முகத்தின் முன் வாயைத்திறந்து “ஃபூ” என ஊதி தன் தலையைக்கோதி கொண்டான்.

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.