(Reading time: 35 - 70 minutes)

“ஹனி, இங்கயிருந்து கார்பார்க்கிங்க் வரைக்கும் கூட தூக்கிட்டு போறேன் உனக்கு ஓகேவா?” என்றான், இப்போது இவளையும் அறியாது சிரிப்பு வந்தது, “கேடி” என்று சிரித்தாள். “ஹப்பா என்றிருந்தது இவனுக்கு!”

இவன் காரில் இப்போது உல்லாசமாக தான் ஏறினாள், அவன் அலுவலகம் பற்றி சுவையான ஒன்றிரண்டு விவரங்கள் சொன்னான், எல்லாவற்றிலும் சிரிப்பதற்கு அவளுக்கு விசயமிருந்தது. இப்போது தடையில்லாமால் அவள் முகத்தையும் காற்றில் பரந்து கன்னத்தில் விழும் கூந்தல் கற்றைகாளையும் அவனால் தடையில்லாமல் இரசிக்க முடிந்தது. அவளுக்கும் தான், அவனது ஆண்மையான தோற்றம் தாண்டி, அவனுள் ஒர் அருமையான இளம் வாலிபனும் இருக்கிறான் என்பதை உணர்ந்தாள் பெண். பேச்சினூடே, இவள், “இளமாறன உங்களுக்கு எப்போதிருந்து தெரியும்?” என்றாள்

ஒரு நொடி ஆச்சர்யமும், அமைதியும் வந்தது. “என்னோட சீவ் இஞ்ஜினியர் இலா, அதில்லாம, ஹீ இஸ் எ எக்சலன்ட் மேனேஜர்”

“அதில்ல, அன்னிக்கு போலீஸ் ஸ்டேஷன்ல, நீங்க அவ்ளோ கோபப்பட்டிங்களே?” பெண்ணின் பேச்சில் கலந்து வந்த மரியாதையை மனதில் குறித்துக்கொண்டான், அதன் அடையாளமாக ஒர் மென் புன்னகை அவன் இதழ்களில் படர்ந்தது..”அன்னிக்கி சாரி காவீ, வேணும்னு பன்னல, கோபத்தில என்ன பன்றோம்னு தெரியாம..ச்ச,” இடது கையால் ஸ்டியரிங்கைக் குத்தினான்.  “உன்ன ஹர்ட் பன்னிட்டேன்ல.. “இவள் புறம் திரும்பும்போது அவன் முகம் இப்போது இரசிக்கும் படியாய் இருந்தது, உண்மையில் வருந்துகிறான், இது தான் இவனிடம் அவள் எதிர்பார்த்தது. தவறை உணரும்போது, மன்னிப்பு கோரும் நல்ல பண்பு.

“இல்ல, அது பரவாயில்ல, பட், இலா அண்ணாவ உங்களுக்கு ரொம்ப பிடிக்குமா?” இவன் முகம் இப்போது தெளிவான ஆச்சர்யத்தை பிரதிபலித்தது, ஒர் பெரிய ஹோட்டலின் வண்டியை நிறுத்தினான். இருவரும் இறங்கி நடக்க, பனிக்காற்று உடலை குளிரசெய்ய, கைகளை மார்புக்கு குறுக்கே கட்டி நடந்தாள், இவன் படு உல்லாசமாய் கை விரல்களை ஜீன்சின் முன் பாக்கெட்டுக்குள் விட்டு, விசிலடித்தவாரே நடந்தான். சிறிது நேரத்திற்கு பின், மென் விளக்குகள் ஜொலித்த அந்த ஹோட்டல் உணவு மேசையில் எதிர் எதிரே, அமர்ந்து, வேண்டியதை ஆடர் செய்து, அவசரமாய் பேரரைத் துரத்திவிட்டு அவர்கள் இருவரும் ஏற்படுத்திக்கொண்ட தனிமை, அந்த தருணத்தில் இனிமையானது தான்.

“இலா, எப்போதிருந்து உனக்கு அண்ணா ஆனான்?” இமைகளை உயர்த்தி அவன் கேட்டபோது காவ்யாவிடம் பதில் இல்லை. “சோ, கீர்த்தனாவையும் இளமாறனையும்  பத்தி ரிஷிக்கு ஏதும் தெரியவில்லை என்பது புரிந்தது. “இல்ல இப்போ அப்படி தோணுது.. நான் அன்னிக்கு கொஞ்சம் அவசரப்பட்டுட்டேன்…இப்போ புரியுது,  ஐ ஃபீல் பேட்..”

“ஹேய் காவீ, இலா என்னோட எம்ப்ளாயீங்கிறதுனால மட்டுமில்ல, ஹீ இஸ் வெரி குட் பெர்சன் பை நேச்சர்,” நீ அன்னிக்கு அவன ஹேர்ட் பன்னிருந்தா நிச்சயம் லைஃப் லாங்க் வேதன பட்டிருப்ப காவீ..!” இதை சொல்லிவிட்டு சலனமற்று இவள் முகத்தைப் பார்த்தான். சில நொடி மௌனம். “சரி லீவ் இட்…வேர பேசலாம்…!”

இவளுக்கு இன்னும் பல கேள்விகள் மனதில் வந்துபோனது.  இவனிடம் இவ்வளவு நல்ல அபிமானத்தை பெற்றவன், வேறு யாருமில்லை, இவன் தங்கையின் அன்பை பெற்றவன், அவள் உயிருக்கு இணையானவன் இது தெரிய வரும்போது இவன் எப்படி அதை எதிர்கொள்வான் என சிந்தனை ஓடியது.

“என்னோட பர்த்டேக்கு வந்திருந்தீங்களா?”

அவன் கையில் வைத்திருந்த மெனுகார்டை மூடிவிட்டு இவளை ஆளமாக ஒரு பார்வைப் பார்த்தான்..”ஹான் பட் நீயும் உன் ஃப்ரண்டும் சேர்ந்து, சிவாவ சைட் அடிச்சுட்டு இருந்தீங்க..அன்னிக்கு நான் கிளம்புற வரைக்குக் கூட நீ என்ன பாக்கல, பட் நான் வந்தது எப்படி தெரியும் ம்ம்?” என்றான்

உனது கணினியை நோண்டினேன், என இப்போது கூறி அவனை வெருபேத்த அவள் விரும்பவில்லை, இன்னும் அவனிடம் கேபதற்கு நிறைய விசயமிருக்கிறது பெண்ணுக்கு.

“உங்கள பார்த்தமாதிரி ஓர் ஞாபகம்!” பொய் என்று அவன் கண்கள் உணர்ந்தது. “அப்புறம் சிவா ப்ரோவ, தர்ஷூக்கு ரொம்ப பிடிக்கும்! அதான் அன்னிக்கு நாங்க கொஞ்சம் பிஸி, பட் வேணும்னு உங்கள அவாய்ட் பன்னல!”

“காவ்யா, தர்ஷினி சிவாவ விரும்புறாளா? என்ன?” கொஞ்சமேனும் விளையாட்டுதனமில்லாத கேள்வி

“ஆமாம்” என தலையசைத்தாள்.

“ஆனா, “அவன் சொல்லவந்ததை நிறுத்திவிட்டு இவள் முகத்தை ஆராய்ந்தான்

“ஹீ இஸ் மேரீட், ஒரு கிட் கூட இருக்கு, வி நோ, அவங்க சூப்பர்ப் டைப்..!” அவசரமாக இவள் சொன்னவிதம் தனில் அவன் சிரித்தான். தட்டில் பரிமாறப்பட்ட உணவை அமைதியாக உண்டான், இவளும் கொஞ்சம் கொரித்தாள்.

“நம்ம மேரேஜ் நட்ந்தா, உங்களுக்கு அதில என்ன லாபம் ரிஷி?” சாதாரணமாக கேட்பதுபோல் நடித்தாலும், உடல் உதறியது காவ்யாவிற்கு. இந்தக் கேள்வி அவனைக் காயபடுத்தும் என்று தெரியும் தான்.. ஆனால் இவனுடைய காதலை ஏற்பதற்கு முன் அதன் பின்புலம் இவள் அறிய வேண்டும்…

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.