(Reading time: 35 - 70 minutes)

காவ்யாவின் இந்த கேள்விக்கு, மென்மையான இடத்தில் அடி பட்டதுபோல் நிமிர்ந்து பார்த்தான்.  ஒரே ஒரு நொடி, அவன் முகம் வாடியது, இவளுக்கு சுருக்கென்று தைத்தாற்போன்று உணர்வு. அவன் ஏதும் பதில் சொல்லாதது இவளுக்கு என்னவோபோலிருந்தது.

“இது எந்த மாதிரி பிஸ்னஸ் டீல் ரிஷி?”

இப்போது அவனுடைய முகம் சிவந்தது, மேசைமேல் இருந்த கையை குவித்து கோபத்தை கட்டுப்படுத்தினான். சாப்பிடுவதை நிறுத்திவிட்டு இவளைப் பார்த்த பார்வையில் இவளுக்கு உள்ளூர ஒர் பயம் வரதான் செய்தது.

“காவீ.. உன்ன எனக்கு ஐஞ்சு வயசிலயிருந்து தெரியும்… நீ ஸ்கூலுக்கு போனது, டேன்ஸ் க்ளாஸ் போனது, உன்னோட காலெஜ் லைஃப் அப்புறம் இப்ப நீ ஜாப ரிசைன் பன்னினது வரைக்கும், ஆனா அதெல்லாம் உன்ன ஃபாலோ பன்னும்னு பன்னல..இந்த மேரேஜ் கூட, இட் ஹேப்பண்டு..உனக்கு இப்ப நான் என்ன சொன்னாலும் புரியாது.. ஜஸ்ட் பிலீவ் மீ மேட்லி..நம்ம கல்யாணத்திற்கு அப்புறம் நீ நிச்சயம் என்ன புரிஞ்சுப்ப..”

“ரிஷி…ப்ளீஸ்..நான் உங்க லேப்ல இருந்த எல்லா டாக்குமென்ட்ஸையும் பார்த்துட்டேன்..! டேடி அவங்க ஃபேக்ட்ரி ஃபுல் கன்ட்ரோலும் உங்க பேர்ல அடாமி கொடுத்திருக்காங்க..இது நடந்து சிக்ஸ் மந்த்ஸ்ல, இந்த வெட்டிங்க் அரேஞ்ச்மெட்ஸ்லாம்.. இதுக்கு என்ன பதில் சொல்வீங்க?”

“காவீ, நீ என்னோட ரூமுக்கு போறப்பவே ஐ கேஸ்ட் ஆல் யுவர் மூவ்மென்ட்ஸ், ஐ நோ யு வில் ஓபன் ஆல் டாக்குமென்ட்ஸ்.. எனக்கு உன்னோட ஸ்மார்ட்னஸ் தெரியும்.. நான் சிசிடிவில பார்த்துட்டுதான், என் ரூமை உனக்கு ஓபன் செஞ்சு கொடுத்தேன்.. பட் நீ சும்ம லேப்ப நோண்டுவனு தெரியும்.. மத்தது உன்னோட கெஸ்ஸிங்கா கூட இருக்கலாம்..”

இப்போது இருவர் முகத்திலும் ஒரு வெருப்பு வந்தது. ஒருவர் மீது ஒருவர் நம்பிக்கை அற்ற தன்மை. மலர துடிக்கும் காதலை வெட்டி எறியும் தன்மை அந்த சிந்தனைக்கு உண்டு. இப்போது இருவரும் அதே நிலையில் தான்.

“ஹான்.. அப்போ இது ஒரு அக்ரிமென்ட்னு ஒத்துகிறீங்க இல்ல?”

“அதான் நீயே முடிவு பன்னிக்கிட்டியே?”

“தன்னோட முயற்சில வாழத் தெரியாதவங்க தான் இப்படி குறுக்கு வழிய யோசிப்பாங்க..” - காவ்யா

இவனுடைய பொருமை கொஞ்சம் கொஞ்சமாக கரையத்தொடங்கியது. “ச்ச்.. என்ன சொல்ல வர்ற..”

“நீங்க ஒரு தில்லு முல்லு..மீன்ஸ் இது ஒரு கண் துடைப்பு கல்யாணம்”

“அப்புறம்..” அவன் பல்லைக்கடித்தான்.

“டாடியோட இனசன்ஸ் அப்புறம் என்க்கு ஃபேக்ட்ரிய ஹேன்டில் பன்றதில இருக்கிற அன் இன்ட்ரஸ்ட்.. எல்லத்தையும் நீங்க உங்களுக்கு சாதகமா யூஸ் பன்றீங்க..!”

“நான் கையாலாகதவன்னு சொல்ற, என்னோட இண்டஸ்ரிய காப்பாத்திக்க உன்ன யூஸ் பன்றேனு சொல்ற..இதுக்கு மேல மாமனார்ட தட்சனையா அவரோட ஆஸ்திய வாங்குறேனு சொல்ற.. இவ்வளவு தானா இல்ல இன்னும் ஏதாச்சும் வச்சிருக்கிறீயா?” அவன் முகம் சிவந்து உண்மையான கோபம் கொப்பளிக்க வந்து விழுந்தது வார்த்தைகள். முகம் சிவந்த ரிஷியை இவளால் பார்க்க முடியவில்லைதான், இவ்வளவு நேரம் மென்மையாக கழிந்த இரவை இவளே கடினப்படுத்திக்கொண்டாள்.

அதற்கு பின், அவன் ஒரு வார்த்தை பேசவில்லை, அனிச்சையாய் சாப்பிட்டு, பில்லைக்கட்டி, வெகு அவசரமாய் வெளியே வந்தான், அவனை தொடர காவ்யா அவன் பின்னே ஓட வேண்டியிருந்தது. அவனது கடு கடு முகத்தைப்பார்க்க இவளுக்கு பயமாக இருந்தது. கடினமாக தன்னைக்காட்டிக் கொண்டாலும் இவள் உள்ளூர மென்மையானவள், இப்போது அழுகை வருமோ என்பது போல் உணர்வு. மீண்டும் காரில் ஏறினான். “வியர் சீட் பெல்ட்” இவள் புறம் திரும்பாது சத்தமாய் அவன் சொன்னவிதம் தனில் இவள் அடிவயிற்றில் மெல்லிய வலி.

மிகவும் செல்லமாக வளர்ந்தவள். சம்பந்தம் இவளிடம் குரலை உயர்த்துவாரே தவிர, இவள் முன்னே ஒர் முறை கூட அவர் கையை உயர்த்தியதில்லை, மேலும் அவர் அதிர்ந்து பேசினாலும் அதில் இவளுக்கு பயம் வராது.. ஆனால் முதன் முறையாக கோபத்தை எதிர்கொள்கிறாள், அதில் தான் எத்தனை வலியும் இன்பமும். இவன் இன்னும் விளக்கம் தரவில்லை ஆனால் அவன் கடு கடுப்பை பெண்ணால் தாங்கிக்கொள்ள இயலவில்லை. அவன் புறம் திரும்பி, “ரிஷி என்ன வீட்டுல ட்ராப் பன்னீருங்க” இவள் சொன்னது அவன் காதில் விழுந்ததாய் தெரியவில்லை, காரை கடும் வேகத்தில் செலுத்தினான், அரைமணிநேர பிராயணத்தை ஐந்தே நிமிடத்தில் கடந்திருப்பான் போலும். அடுத்த ஐந்து நிமிடத்தில் மீண்டும் அவன் அலுவலக வாசலில், கேட்டைத்திறக்க செக்யூரிட்டி எடுத்துக்கொண்ட அவகாசத்தை கூட இவனால் பொறுக்க முடியவில்லை..”கார்ட்ஸ்..” என அவன் கத்தியது அவளது உடலை பதற செய்தது. காரைப் நிறுத்தி, இறங்கி நடந்தான், இவளுக்கு என்ன செய்வதென புரியாது ஓட்டமும் நடையுமாய் அவனை பின் தொடர்ந்தாள்.

இப்போது லிஃப்ட்டின் அருகே வந்ததும் இவள் தயங்க அவள் கையைப்பற்றி இழுத்துபோனான், அவன் பற்றிய இடம் கன்றி வலித்தது, இன்னும் இழுத்து அவனது அறைக்குள் போய், கிடந்த சோஃபாவில் இவளை தள்ளி, பின் அவன் கணினி அருகே போய், அதனை ஒளிர செய்தான், மடிகணினியைத் தூக்கிவந்து இப்போது இவளிடம் நீட்டினான்.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.